உலக உணவு உருளை

Spread the love

உலகெங்கும் உபயோகிக்கப்படும் ஓர் உணவு உருளைக்கிழங்கு, அரிசி, கோதுமை, சோளம் இவைகளுக்கு அடுத்தபடி உலகெங்கும் பயிரிடப்படும் காய்கறி உருளை கிழங்கு தான். உருளைக்கிழங்கின் தாயகம் தென் அமெரிக்க நாடான பெரு‘- குறிப்பாக ஆன்டிஸ்‘ (Andes) மலைச்சாரலில் கிட்டத்தட்ட 5000 வகைகள் உள்ள உருளைக்கிழங்கில், 3000 வகைகள் ஆன்டிய மலைபிரதேசங்களான பெரு, பொலிவியா, ஈக்குவேடார் மற்றும் கொலம்பியா போன்ற தென் அமெரிக்க தேசங்களில் விளைகின்றன.

1570 ல் அல்லது 1586 ல் ஐரோப்பா குறிப்பாக ஸ்பெயின் நாட்டுக்கு வந்த உருளைக்கிழங்கு 1773 ல் ஜெர்மனிக்கு வந்தது. வட அமெரிக்காவில் 1621 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சரித்திர ஆதாரங்களின் படி, இந்தியாவில் 17ம் நூற்றாண்டில் அறிமுகமான உருளை தமிழகத்தில் 1882 ல், நீலகிரி மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டது.

இந்தியாவுக்கு உருளைக்கிழங்கை கொண்டு வந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள் (Portuguese) என்றும் கருதப்படுகிறது.

உலகெங்கும் பயிரிடப்பட்டாலும், முக்கியமாக பயிரிடப்படும் தேசங்கள் ரஷ்யா, (விளைச்சலில் 30.4%), போலந்து (12.8%) மற்றும் ஜெர்மனி (8.3%) ஆகும். இந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. ரஷ்யா உடைந்த பிறகு அதிகளவில் உருளையை உற்பத்தி செய்யும் தேசம் – சீனா, அடுத்தது இந்தியா.

உலக உற்பத்தி 3,114,250,000 டன்கள் (ஒரு வருடத்தில்) இந்த 2007ம் வருடத்தில் ஜெர்மனியில் தான், ஒருவர் உண்ணும் உருளைக்கிழங்கின் அளவு மிக அதிகம் (74 கிலோ)

உருளைக்கிழங்கின் விஞ்ஞான பெயர் Solanum Tuberosum “கண்கள்” (முடிச்சுகள்) உள்ள உருளையின் “தண்டு” கிழங்குகளை நட்டு பயிரிடப்படும். உருளைக்கிழங்கை முழுதாகவோ அல்லது வெட்டியோ (வெட்டிய துண்டுகளில் ஒன்றிரண்டு கண்கள் இருக்க வேண்டும்) நட்டாலும் போதும். நிலத்திற்கும் இருக்கும் தண்டிலிருந்து 2 அல்லது 4 வேர்கள் வரும். இதன் முடிவில் உருளைக்கிழங்குகள் உருவாகும். உருளை செடி 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும். பூக்கள், மஞ்சள், வெள்ளி அல்லது வெண்மை கலந்து ஊதா வண்ணங்களில் இருக்கும். சில வகைகளில் சிறிய பச்சை நிற பழங்கள் உருவாகும். இவைகளிலிருந்து எடுக்கப்படும் விதைகளை நட்டு புதிய ரக உருளைக்கிழங்குகள் பயிரிடப்படுகின்றன. நல்ல பாசான வசதியுள்ள நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 10 டன் கிழங்குகள் கிடைக்கும்.

உருளைக்கிழங்கில் உள்ள முக்கிய சத்து- மாவுப்பொருள் (Carbo – Hydrates) நடுத்தர சைஸ் உள்ள கிழங்கில் 26 கிராம் மாவுப்பொருள் இருக்கும். இது தவிர 150 கிராம் எடையுள்ள உருளைக்கிழங்கில் (தோலுடன் கூடியது) உள்ளவை 27 மி.கி., வைட்டமின் சி‘ 620 மி.கி., பொட்டாசியம் 0.6 மி.கி., வைட்டமின் H‘ 6 மற்றும் தியாமின், ரிபோஃபிளேவின், ஃபோலேட், நியாசின், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் ஜிங்க் (Zinc) உள்ளன. நார்ச்சத்து இவை மட்டுமில்லாமல் உருளையில் Carbotenoid ம், Polyphenol ம் உள்ளன. உருளைக் கிழங்கு தோலில் தான் சத்து என்பார்கள். உண்மையில் தோலில் உள்ளது கிழங்கில் உள்ள நார்ச்சத்தில் பாதி மட்டும் தான் இருக்கும். தோலில்லா கிழங்கில் தான் பெரும்பாலான சத்துக்கள் இருக்கும். உருளைக்கிழங்கை சமைக்கும் முறை தான் முக்கியம்.

உணவும், உருளையும்

உருளைக்கிழங்கை உபயோகப்படுத்தாத குடும்பமே இல்லை எனலாம். எல்லா சீசன்களிலும் கிடைக்கும். ஏழை எளியவர்களும் வாங்கக்கூடியது.

மேலே சொன்னபடி, மாவுச்சத்து (Starch / Carbohydrate) அதிகம் உள்ளது உருளைக்கிழங்கு. இந்த மாவுச்சத்தின் ஒரு சிறிய பங்கு உடல் என்சைம்களால்‘, வயிற்றிலும், சிறு குடலிலும் செரிமானம் ஆகாது. அதனால் இந்த எதிர்க்கும் மாவுப்பொருள் அப்படியே ஜீரணமாகாமல் பெருங்குடலை அடையும். இங்கு இது நார்ச்சத்து செய்யும் நன்மைகளை செய்யும்.

பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் குளுக்கோஸை குறைக்கும். பசியை தணிக்கும். இந்த மாவுச்சத்து கிடைப்பது நாம் உருளையை சமைக்கும் முறையில் தான் இருக்கிறது. சமைத்த உருளையில் 7% எதிர்ப்பு ஸ்டார்ச் இருக்கும். குளிர வைத்தால் இது 13% சதவிகிதமாக உயரும்.

குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றது உருளைக்கிழங்கு. 9 மாதத்திற்கு பிறகு வேகவைத்து, மசித்துக் கொடுத்தால் துரித வளர்ச்சி உண்டாகும். வளரும் சிறுவர்களுக்கு அதுவும் இளைத்த சிறுவர்களுக்கு மிகவும் நல்லது.

தாய்ப்பால் பெருக உதவும்.

சிறுநீர் பெருகும்.

உருளைக்கிழங்கில் நச்சப்பொருட்கள் ஏதும் இல்லை. எனவே உடனடி சக்திக்கு உகந்தது.

எந்த வகையல் சமைத்தாலும் உணவுக்கு ருசியைக் கூட்டும்.

நரம்புத்தளர்ச்சியை போக்குவதால், மணமாகியவர்களுக்கு நல்லது.

உருளைக்கிழங்கிலிருந்து எடுக்கப்படும் குளூக்கோஸ் மிகுந்த சத்துடையது.

உருளைக்கிழங்கை வெட்டி முகத்தில் தேய்த்து வர, முகம் பொலிவடையும். உடலில் மேற்பூச்சாக தேய்க்க சொறி, சிரங்கு இவை குறையும்.

ஏனைய பயன்கள்

ஆல்கஹால், ஸ்டார்ச் தயாரிக்க பயன்படுகிறது.

ஸ்வீடன், நார்வே தேசங்களில் உபேயாகிக்ககும் Akvavit எனும் ஆல்கஹால் பானத்தை தயாரிக்க உதவுகின்றது.

உருளைக்கிழங்கு இலைகள் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதயநோய் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஆகாது எனக் கருதப்படுகிறது


Spread the love