அன்னாசிப்பழத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அன்னாசி பழச்சாறை அருந்துவதால் உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் காணப்படும்.
அன்னாசியில் கிடைக்கும் நன்மைகள்
இதன் சாறு மிகுந்த சுவையுடன் இருக்கும். இயற்கையாகவே இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. ஆனால் இதில் பலவகையான ஊட்டச்சத்துகள் உள்ளதை அறிந்திருக்கவில்லை. இதன் பழச்சாறில் ப்ரோமெலைன் என்ற திரவம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும் முக்கியமான திரவமாகும். இது தவிர, பொட்டாசியம், H வைட்டமின்கள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உயர் ரத்த அழுத்தம், குறைந்த வளர்சிதை மாற்றம், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, கருவுறுதலில் ஏற்படும் பிரச்சினைகள், வீக்கங்கள், புற்றுநோய் அபாயம், மலச்சிக்கல், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அன்னாசி பழச்சாறை தொடர்ந்து அருந்தலாம்.
பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தத்திற்கு இது ஒரு சிறந்த மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதை பருகுவதால் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது. இதனால் இதயத்தின் நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் மாரடைப்பு, வாதம் போன்றவை வருவதற்கான அபாயங்கள் குறைகிறது.
இப் பழச்சாறில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் அன்னாசி பழச்சாறில் அஸ்கார்பிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் வைட்டமின் சி ஊட்டச்சத்து இன்னும் அதிகரிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுவே உடலை காக்கும் அரணாக இருக்கிறது.
இதில், வைட்டமின் H அதிகமாக உள்ளது. இது நம் மன நிலையை மேம்படுத்தி, ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. இதனை அருந்துவதால் பதற்றம் தணிக்கப்படுகிறது. கீல் வாதத்தின் அறிகுறிகளை களைகிறது. அன்னாசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ப்ரோமெலைன் போன்றவை குடல் இயக்கத்தை அதிகப்படுத்தி சரியான ஊட்டச்சத்துகள் செரிமான மண்டலத்தில் சேர்வதற்கு உதவுகின்றன.
அன்னாசி பழச்சாறை அருந்துவதால் உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் காணப்படும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, உடலின் நீர்ச்சத்தை சமன் செய்கிறது. நரம்புகள் தூண்டப்பட்டு, தசைகள் சுருங்கும் தன்மை சீராக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்த தசை செயல்பாடு இருப்பது அவசியம். அவர்கள் அன்னாசி சாறை குடிப்பதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.
இதை அதிகமாக உட்கொள்வதால், கர்ப்ப கால சிக்கல்கள், நீரிழிவு பாதிப்புகள், எடை அதிகரிப்பு, ஒவ்வாமை, இரத்தப்போக்கு சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. அன்னாசியை அளவாக உட்கொண்டால் சிறந்த பலன்களை அடையலாம்.
இப்பழம் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் நோய்த் தாக்குதல்களுக்கு மருந்தாகிறது.
இருமலை குறைக்கும் அன்னாசி, அதிமதுரம்
கடந்த ஒரு மாத காலமாக பலருக்கும் சளி, இருமல் பிரச்சனைதான். மருந்து சாப்பிட்டு சளி நீங்கி விட்டது. இருமல் தான் நிற்கவே இல்லை என பலரும் கூறுகின்றனர். பல இருமல் மருந்துகளை சாப்பிட்டும் குறையவில்லை என்பதும் தொடர் இருமல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.
* வறட்டு இருமலுக்கு தேன் மிகச் சிறந்த நிவாரணி என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1-2 தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான நீரில் 2-3 முறை அன்றாடம் குடித்து வர இருமல் கட்டுப்படும்.
கவனிக்கவும் : இதனை சர்க்கரை நோயாளிகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
* அன்னாசி பழமானது மூக்கு, சைனஸ் பகுதிகளில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இருமல் இருக்கும் பொழுது அன்னாசி பழச்சாறு சிறிதளவு அவ்வப்போது குடிப்பது சளியினை வெளியேற்றி இருமலைக் குறைக்கும்.
* அதிமதுரம்: இதற்கு பல நாடுகளில் இன்று வரவேற்பு வெகுவாய் கிடைத்துள்ளது. அதிமதுரத் தூளை 2 கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி 15-20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு இதனை வடிகட்டி காலை-மாலை இரு வேளைகளும் அருந்த இருமல் கட்டுப்படும்.
* வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளியுங்கள்.
நெஞ்செரிச்சல்: அசிடிடி-நெஞ்செரிச்சல் என்ற இந்த இரு வார்த்தைகளையும் கேட்காதவர், அனுபவிக்காதவர்கள் மிகக் குறைவு. இதற்கு தானே மருந்து கடையில் மருந்து வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இது அடிக்கடி தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
அசிடிடி நிவாரண மருந்தை விடாமல், பாக்கெட்டிலேயே வைத்து உணவு போல் அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு :-
* நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது
* தேவையான சத்துக்களான பி12, கால்ஷியம், இரும்பு மற்றும் மக்னீஷிய சத்துக்கள் இரத்தத்தால் உறிஞ்சப்படுவது குறைகிறது.
* உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது.
இயற்கை முறையில் அசிடிடி பாதிப்பினை தடுக்க சில முறைகள் இருக்கின்றன.
* குளிர்ந்த பால் அருந்துவது அசிடிடி பாதிப்பினை வெகுவாய் குறைக்கும் / நீக்கும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படாது எனில் ஐஸ்கிரீம் கூட எடுத்துக் கொள்ளலாம்.
* மோர் குடிக்கலாம். இதனை அன்றாடம் அடிக்கடி கூட குடிக்கலாம்.
* சிகரெட், மது இரண்டினையும் அடியோடு தவிர்த்து விடவேண்டும்.
* வயிற்றிலுள்ள ஆசிட் சக்தியை பாதாம்பருப்பு குறைத்து விடும். சாப்பிட்ட பிறகு 3-4 பாதாம் மென்று சாப்பிடுங்கள்.
* மசாலா, எண்ணெய், காரம் இவைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.
* பொதுவாக தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், ஆசிட் எதிர்ப்பு ஆகியவற்றினை உருவாக்கும். எனவே குறைந்தது 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் இரவில் தேவை.
* ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் உண்ணலாம்.
* சோற்றுக்கற்றாழை சாறு மிகவும் நல்லதாகும்.
* அரிசி உணவு நெஞ்செரிச்சல், ஆசிட் இவற்றுக்கு நல்ல தீர்வாகும்.
பலருக்கு இந்த குளிர் நாட்கள் சளி, ஜுரம், ஆஸ்துமா என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம், தோய்த்த ஈரத்துணிகளை சூரிய ஒளி இல்லாத இடத்தில் துணிகளை காயப் போடுவது தான். நம்மில் அநேகருக்கு பல கிருமி, பூஞ்ஞைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. சிலருக்கு இந்த ஈர துணிகளை உள்ளே காயப்போடும் பொழுது அந்த ஈரம் அவரைத் தாக்குவதால் சளி, ஆஸ்த்மா பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தகுந்த பாதுகாப்பினை இவர்கள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
சத்யா