நோய் தீர்க்கும் ஆரஞ்சு கலர்

Spread the love

கலர் கலராய் உடை உடுத்துவதும்கலர்கலராக விளக்குகளை எரிய விடுவதும் நம்மில் பலருக்கு இருக்கும் ஒருபழக்கம். இதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறோம். உண்மையில் இந்த நிறங்கள் நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தது, என்ன ஆர்ச்சரியமாகஇருக்கிறதா?ஆரஞ்சுவண்ணம் நோய் தீர்ப்பதில் எப்படி பங்குவகிக்கிறது என்றுபார்க்கலாம் இந்த வண்ணமானது  சிவப்பும் மஞ்சளும் சேர்ந்த கலவையாகும். சிவப்பு மஞ்சள் ஆகியவற்றின் தனிப்பட்ட அளவை விட ஆரஞ்சுவண்ணம் அதிகமான உஷ்ணத்தைரத்  தரக்கூடியது.

மருத்துவப் பயன்கள்

ஆரஞ்சு வண்ணமானது நுரையீரலை விரிவு படுத்தப் பயன்படுகிறது. இந்த வண்ணமானது சரீரத்தில் ஜலத்துவத்தை & தேவையான தண்ணீரை பிரித்து மாற்றி அதன் சக்திகளைப் பெற உபயோகிக்கப் படுகிறது.

இதற்கு இண்டிகோ எனும் கருநீல வண்ணத்தைக்கூட உபயோகிக்கலாம். தசைப்பிடிப்புகள், நரம்பு சுருண்டு இழுத்தல் போன்றவற்றுக்கு இந்த ஆரஞ்சு வண்ணத்தை உபயோகப்படுத்தலாம்.

சுண்ணாம்புச் சத்தான நுண்ணிய கால்சியம் உள்ளடங்கிய வண்ணம் ஆரஞ்சு நிறம்தான்.  ஆகவே ஆரஞ்சு ஒளிக் கதிர்கள் சுண்ணாம்புச் சத்தாகிய கால்சியத்தைச் சரீரத்துக்குத் தருகின்றன. ஆகவே இது நுரையீரலுக்கும் உடம்புக்கும் நல்ல  சக்தியைத் தருகிறது. இது வயிற்றில் கெட்டுப்போன அழுகிய தசைகளை அகற்றப் பயன்படுகிறது.

இந்த ஆரஞ்சு வண்ணமானது பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யப் பயன்படுகிறது. இந்த வண்ணமானது மண்ணீரலைப் பலப்படுத்தி, பான்கிரியாஸ் சுரப்பதால் உடலில் இன்சுலின் உற்பத்தியானது சரியாகக் கிடைக்கிறது.

இது சூட்சும சரீரத்தை வலுப்படுத்துகிறது. இது மனிதன் சந்தோஷமாகவும் நல்லபடியாகவும் வாழப் பயன்படுகிறது.

ஆஸ்துமா,  கீல்வாதம் ஆகிய நோய்களைக் குணப்படுத்துவதில்  ஆரஞ்சு வண்ணம் பயன்படுகிறது.

குளிர் சம்பந்தமான நோய்கள், ஜலதோஷம், காக்காய் வலிப்பு போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

ஆரஞ்சு வண்ணமானது கூடுதல் சதை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. ஆரம்பகால சதை வளர்ச்சி புற்று நோயாக இருந்தாலும் தடுக்கிறது. பான்கிரியாஸ் உற்பத்திக்குத் துணை செய்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திரத் தீட்டுகள் சரிவரச் செயல்பட ஆரஞ்சு வண்ணம் உபயோகமாய் இருக்கிறது. ஆரஞ்சு ஒளியை நாபிப் பிரதேசத்தில் பரப்ப வேண்டும்.  


Spread the love
error: Content is protected !!