ஓட்ஸ் கீர் எப்படி செய்யலாம்?

Spread the love

ஓட்ஸை மூலப்பொருட்களாக காட்டி நிறைய ப்ராடக்ட் விற்பனை செய்து வந்துள்ளது. இந்த காரணத்திற்காக மட்டுமே அதிகமானோர் வீட்டில் ஓட்ஸ் கலக்கப்பட்டதாக சொல்லியுள்ள பவுடரை அலமாரியில் அடுக்கி வைத்துள்ளனர். வசதி உள்ளவர்கள் இதை வாங்கி வைத்திருந்தாலும்,  வசதி இல்லாதவர்கள் நிலைமை கேள்விக்குறியாதான் உள்ளது. அதை பற்றி கவலைபடவே வேண்டாம். ஏனென்றால்?  இதை பயன்படுத்துவதனால்  gain ஆகுறாங்களா என்றதும் கேள்விக்குறிதான்! இந்த தானியத்தில, நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் உங்கள் உடல் நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஓட்ஸில் அடங்கியுள்ளது.

ஓட்ஸில் இருக்கும் நார்சத்தில், லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள்  இருக்கு. இதிலுள்ள கரையத்தக்க நார்ச்சத்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து  கொலஸ்ட்ராலை உங்கள் குடல் உறிஞ்சுவதையும்குறைக்கும்.  கூடுதலாக, ஓட்ஸில் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்உள்ளது. இது LDL விஷத்தன்மைக்கு எதிராக பாதுகாக்கும். அதனால்கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டும் என்றால், ஓட்ஸ் உணவுடன் ஆரஞ்சு பழம் போன்ற வைட்டமின்சி வளமையாக உள்ள உணவுகளையும் சேர்த்து சாப்பிடலாம்.   அதுமட்டுமின்றி ஓட்ஸில் உள்ள லிக்னன்ஸ் இதய நோய்களைத் தடுக்கும்.இதிலுள்ள பீட்டா-க்ளுக்கான் ஆரோக்கியமான இதயத்தை மேம்படுத்தும்.

ஓட்ஸ் கீர் செய்ய தேவையான பொருட்கள் என்னவென்றால்?

ஓட்ஸ் ஒரு கப், பால் ஒரு கப், சர்க்கரை தேவையான அளவு, வெனிலா எசன்ஸ் சில துளி,  முந்திரி 10, திராட்சை 10  , கடைசியாக நெய் ஒரு டீஸ்பூன். இப்போது ஓட்ஸை மிக்சியில் அரைக்கவும்.  பின் அதை இரண்டு கப் தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.  நன்கு வெந்து வரும்போது,  அதில் பால் பின் சர்க்கரை சேர்த்து இன்னும் சிறிது நேரம் வேக விடவும்.  தனியாக, நெய்யில் முந்திரியும், திராட்சையும் வறுத்து, ஓட்ஸ் தண்ணீரில் சேர்க்கவும்.  கடைசியாக வென்னிலா எசன்ஸ் சேர்த்ததும், அடுப்பில் இருந்து இறக்கி சூடாகவோ அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் குடிக்கலாம்.

To buy Herbal Products>>>


Spread the love