நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ எப்போதும், இயற்கை மூலிகை சாறு, குடித்தால் போதும், அதோடு சத்தான பழங்கள், கீரைகள் அவை அனைத்தும் உடல் வெப்பத்தை தனித்து, சுருசுறுப்பாக இருக்க உதவுகிறது, ஒரு கைப்பிடி அருகம்புல், மிளகு, சீரகம், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து, தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு சுண்ட வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், ஊளசதை போன்ற பிரட்சனைகள் நீங்குவதோடு, குறட்டை பழக்கம் நின்று, தலைமுடியும் நன்கு வளரும். மேலும் இளநரை நீங்கி, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இந்த கசாயம் சளி, நரம்பு தளர்ச்சி, ஆஸ்துமா, தோல்வியாதி போன்ற பிரட்சனைக்கு முற்றுபுள்ளி வைப்பதோடு புற்றுநோய்க்கும் நல்ல மருந்து.
அடுத்து சீரக தண்ணீர், இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் தண்ணீராக குறைந்ததும் அதை குடித்து வரலாம். இது இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பிற்கு உதவுகிறது. அதோடு கண் எரிச்சல், வயிறு எரிச்சல், வாய் துர்நாற்றம், பற்சிதைவு, இரத்த மூலம், வயிற்று வலி, இருமல், அஜீரணம், மந்தம் நீங்கும்.
மூன்றாவது, செம்பருத்தி தண்ணீர், மகரந்தமும், காம்பும் நீக்கப்பட்ட செம்பருத்தி பூ, ஒரு டீஸ்பூன் பனை வெல்லம், ஒரு ஏலக்காய், இதை, இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீராக குறைந்ததும் அதை எடுத்து குடித்து வர பெண்களின் கர்ப்பபை வலுபெறும், அதோடு மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கி, முகப்பொலிவு பெரும். உடல் பளபளப்பாகி தலைமுடி உதிர்வு நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.