தெய்வீக மூலிகைகள் என்று சொல்கின்றோம் அப்படி என்றால் என்ன என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். உங்கள் சந்தேகம் தீர பதில், இதுதான்.
தெய்வீக மூலிகைகளில், சிவனுக்குரிய வில்வ இலை எனப்படுவது. சிறிது துவர்ப்பு ருசி உடையது. இது ஜீரண சக்திக்காகவும் உடலில் விஷத்தன்மையை முறிக்கவும் பயன்படுகிறது. சக்திக்குரிய வேப்பிலை கசப்பு சுவையுடையது. இது உடம்பில் உள்ள நோய்க்கிருமிகளையும், வயிற்றுப் பூச்சிகளையும் அழிக்கப் பயன்படுகிறது, மேலும் நாம் உண்ணும் உணவின் அளவு வெகுவாக குறைந்து உடம்பிற்கு சக்தி கூடுகிறது. பிரம்மாவுக்குரிய அத்தியிலை எனப்படுவது துவர்ப்பு ருசி உடையது இது இரத்தத்தை சுத்தமடையச் செய்வதுடன் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்திப் பயன்படுத்துகிறது.
விநாயகருக்குரிய அருகம்புல் எனப்படுவது சிறிது துவர்ப்பு ருசி உடையது. இது வயிற்றுக் கோளாறை போக்கவும், வயிற்றுப் பகுதியில் உள்ள சுரப்பிகளை நன்கு இயக்கவும் பயன்படுகிறது.
இந்த தெய்வீக மூலிகைகளான வில்வ இலை, வேப்பிலை, அருகம்புல் ஆகியவற்றை பறித்து வந்து தனித்தனியாக வெயிலில் உலர்த்தி, இடித்துப் பொடி செய்து சம அளவில் கலந்து கொண்டு சாப்பிடலாம்.
தெய்வீக மூலிகைப் பொடியை உட்கொள்ளும்போது, அவை, கிருமி நாசியாகவும் ,உடலில் சேரும் விஷத்தன்மை அகற்றவும், உடல் உஷ்ணத்தைத் தணிக்கவும், உறுப்புகள் நன்கு இயங்கவும் பயன்படுகின்றன.