இயற்கை உணவுகள் எப்பொழுதும் நமக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. பொதுவாக நாம் காலையில் குடிக்கும் டீ, காபி போன்றவை நமக்கு சில நன்மைகளை வழங்கினாலும் அவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்ளும்போது பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் அதற்கு மாற்றாக வேறு பானங்களை நோக்கி நகர வேண்டியது அவசியம். அவசியம் மட்டுமல்ல அதுதான் ஆரோக்கியமும் கூட. அந்த வகையில் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு அற்புத மூலிகைதான் ஜின்செங் அல்லது குணசிங்கி.
இதில் டீ தயாரிக்க எந்த இலைகளும் இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதன் வேறை வைத்து டீ தயாரிக்கலாம். இந்த டீ உங்களுக்கு உங்களுக்கு எடை குறைப்பு முதல் ஆண்மை அதிகரிப்பு வரை அனைத்து நன்மைகளையும் வழங்கும். ஜின்செங் டீ தயாரிக்கும் முறையையும் அதன் பலன்களையும் பார்க்கலாம்.
தயாரிக்கும் முறை
ஜின்செங் டீ தயாரிப்பது மிகவும் எளிமையான ஒன்று. சில வேர்களை எடுத்து நனவு சுத்தம் செய்து விட்டு இரண்டு ட்மளர் நீரில் அதனை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். இது ஒரு ட்மளர் ஆகும் வரை குறைந்தவுடன் இறக்கவும். பின்னர் இதில் சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு அற்புதமான இயற்கை மருத்துவம் ஜின்செங் டீ ஆகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ச்சியாக ஜின்செங் டீ குடிப்பது அவர்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஹார்மோன் சமநிலை
ஜின்செங் டீ குறிப்பாக பெண்களுக்கு அதிக நன்மைகளை வழங்கக்கூடியது. இது ஹார்மோன் சமநிலை இன்மையால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய். எண்டோமெட்ரோசிஸ் போன்ற நோய்களை சரிசெய்ய உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள ஜின்செனோசிஸ் என்னும் வேதிப்பொருள் பெண்களின் ஹோர்மோன்களை போலவே செயல்படக்கூடியது. இது அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் இழப்பை சரிசெய்ய உதவுகிறது.
உடல் மற்றும் மூளையின் புத்துயிர்
ஜின்செங் டீ குடித்த பலரும் தங்கள் மூளையின் ஆற்றல் மற்றும் செயல்திறன் மற்றும் கவனம் போன்றவை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் உள்ள அடாப்டஜன் அனைத்து விதமான மனஅழுத்தத்தையும், பதட்டமான சூழ்நிலையையும் சமாளிக்கவும் இழந்த ஆற்றலை மீண்டும் பெறவும் உதவும்.
இதய ஆரோக்கியம்
ஜின்செங் டீயை அதிக ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பொருளாகும், இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. ஜின்செங் டீ இதய துடிப்பை சீராக்குவதுடன் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. ஜின்செங் வேரானது இதய தசைகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் இதயத்தில் ஏற்படும் மையோபதி என்னும் நோயை குணமாக்குகிறது.
சரும ஆரோக்கியம்
ஆன்டிஆக்சிடன்ட் அதிகமுள்ள இந்த இயற்கை மூலிகை சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது, இதற்கு காரணம் இதிலுள்ள எதிர் அழற்சி பண்புகள் மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களும் ஆகும். இதில் உள்ள டாதியான் வயதாவதை தாமதப்படுத்த கூடிய பண்புகளை கொண்டது. மேலும் இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வியர்வை வழியாக வெளியேற்றக்கூடியது.
நோயெதிர்ப்பு சக்தி
ஜின்செங் டீ பழங்காலம் முதலே சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கூடும். மேலும் ஜின்செங் டீ தொடர்ந்து குடிக்கும்போது அது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
எடை குறைப்பு
ஜின்செங் டீ உங்களுக்கு எடை குறைப்பில் அதிக உதவிகள் புரிகிறது. இது இயற்கை பசியை அடக்குவது என்று அழைக்கப்படுகிறது. இந்த டீ குடிப்பது மட்டுமின்றி தொடர்ச்சியான உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியது அவசியம்.
பாலியல் ஆரோக்கியம்
பல நாடுகளில் ஜின்செங் டீ மற்றும் வொயின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக ஆண்களால் குடிக்கப்படுகிறது. ஜின்செங் டீ உங்கள் உடலில் டெஸ்டெஸ்ட்ரோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ச்சியாக குடித்து வர உங்கள் உடலில் பாலியல் ஹார்மோன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் உங்களுக்கு இருக்கும் விறைப்பு பிரச்சனையையும் குணப்படுத்தக்கூடும். உறவில் ஈடுபடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இதனை குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக உணர செய்வதுடன் உங்கள் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் உங்களால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட முடியும். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு இயற்கை வயகரா ஆகும்.
பா. முருகன்