மனிதர்களிடம் காணப்படும் கீழ்க்கண்ட உடல்நலக் கோளாறுகள் அனைத்திற்கும் இஞ்சி மிகுந்த பலன் தருகிறது என பலவித மருந்துவ ஆராய்ச்சியில் முடிவுகள் எடுத்துக் கூறுகின்றன.
1.எச்ஐவி/எய்ட்ஸ் சிகிச்சையின் போது/காரணமாக ஏற்படும் வாந்தி மற்றும் வாந்தி உணர்வு
2.வலி தரக்கூடிய மாதவிடாய்க் காலங்கள்
3.குடல் எரிச்சல்
4.ஒரு பக்கத்தலைவலி
5.அதிக கொலஸ்ட்ரால் அளவு
6.காலை நேர உடல் அசதி, அலுப்பு
7.ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் எனப்படும் எலும்பு முட்டு வலி
8.சர்க்கரை நோய், அறுவைச சிகிச்சைக்குப் பின்பு ஏற்படும் வாந்தி, வாந்தி உணர்வு குடல், கர்ப்பப்பை புற்றுநோய், உடல் எடை இழப்பு மற்றும் கிறுகிறுப்பு.
அதிக ஆரோக்கியம் தரும் தேங்காய்ப்பால்:
தேங்காயப்பாலில் அதிக அளவு ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்புச்சத்து உள்ளது. நுண்ணுயிரிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட வகைகளில் பயன் தருகிறது.
1.புரதச்சத்து இழப்பைக் குறைக்கிறது.
2.செரிமானப் பிரச்சனையை குணப்படுத்துகிறது. திசுக்கள் சிதைவுறுவதை குணப்படுத்துகிறது. தொற்றுகளுக்கு எதிராக செயல்பட்டு உடலைப் பாதுகாக்கிறது. வளர்சிதை மாற்ற நிகழ்வை ஊக்குவிக்கிறது. கலோரிகளை எரிக்கிறது.
சர்வரோக நிவாரணி மஞ்சள்:
ஒவ்வொருவர் வீட்டின் சமையல் அறையிலும் முக்கியமாக உள்ள ஒரு பொருள் மஞ்சள். மஞ்சள் சர்வரோக நிவாரணி கிருமி நாசினி, உடல் உள் அழற்சியை குணப்படுத்துகிறது. கீழ்க்கண்ட உடல் பிரச்சனைகள் மஞ்சளை பயன்படுத்துவதால் குணப்படுத்துகிறது.
1.மூட்டுவலிகளை குணப்படுத்துகிறது
2. உடலிலுள்ள விஷப்பொருட்களை அழித்து, வெளியேற்ற உதவுகிறது.
3.இரத்தத்தின் கெட்டித்தன்மையைச் சரி செய்வதுடன் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது. உடல் நலமின்மையால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் உடல் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. செரிமானம் நிகழும் உணவுக் குழாய் பாதையில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்து குணப்படுத்துகிறது. அல்சர் என்னும் குடல் புண் நோய் வராமல் தடுக்கிறது. மஞ்சளில் உள்ள மிகவும் முக்கியமான, சிறப்பாக செயல்படும் கர்குமின் என்ற வேதிப்பொருளை உட்கிரகிக்க து£ண்டும் செயலை கரு மிளகு சிறப்பாக செய்கிறது. நயமான தேன் உடலின் எரிச்சலைத் தணிக்கிறது. செரிமானம் எளிதாக, விரைவாக செயல்பட உதவுகிறது து£க்கமின்மையை குணப்படுத்துகிறது. உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. தசை வலியை நீக்குகிறது. இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இன்னும் கணக்கிலடங்கா ஆரோக்கியம் தரும் மருந்தாக, உணவாக பயன்படுகிறது.
இயற்கை மருந்தாக தயாரிப்பது எப்படி?
பெரிய கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். தேனைத் தவிர மற்ற பொருட்களான தேங்காய்ப்பால், இஞ்சி, மஞ்சள், கரு மிளகுப் பொடி இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். அதன் பிறகு மேற்கூறிய கலவையை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி இளம் சூடான வகையில் அடுப்பில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் சூடுபடுத்துங்கள். ஐந்து நிமிடம் சூடுபடுத்தியவுடன் அக்கலவையில் தேனைச் சேர்த்து ஒன்றாக, நன்றாக கலக்கிக் கொண்டு தினசரி இரவு படுக்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்குப் பின்பு இப்பானத்தை அருந்தி விட வேண்டும். இதன் காரணமாக காலையில் எழுந்திருக்-கும் பொழுது முழுசக்தியுடன் இதை அருந்தி வர வேண்டும். இது உங்களை காலை எழும் பொழுது முழுசக்தியை வழங்கி சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.