உடல் நலம் காக்க மூலிகை உணவு

Spread the love

பூண்டு ஒரு அற்புத தாவரம். உலக சரித்திரம் ஆரம்பமான காலத்திலேயே பூண்டு சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது சரித்திர படிவேடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்து மதத்தில், அசுரர்களும் தேவர்களும் அமிர்தம் வேண்டி பார்க்கடலைக் கடைந்த பொழுது சிதறி பூமியில் விழுந்த துளிகள் தான் பூண்டு என்ற ஒரு புராணமே உள்ளது. உலகில் ஆரம்ப காலத்தில் எகிப்தியர்கள் தான் பூண்டை அதிகம் பயன்படுத்தியவர்கள். எகிப்தியர்கள் பூண்டின் மகிமையை அறிந்து, பூண்டை தெய்வமாகவே பூஜித்தனர். இத்தகைய பெருமை வாய்ந்த பூண்டு பல அற்புத குண நலன்களைக் கொண்டது.

பூண்டிலிருக்கும் பல வேதிப் பொருட்களில் சிறப்பம்சம் கொண்டவை. அலிஸின், அலின், பீடா கரோடின் போன்றவையாகும். பூண்டு ஆன்டி ஆக்ஸிடண்ட் குணம் கொண்டது இந்த ஆன்டி ஆக்சிடன்ட், ஃப்ரீரேடிகல்ஸ் எனும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளை அளிக்கும். ஃப்ரீரேடிகல்ஸ் திசுக்களை பாதிக்கும், முதுமையை விளைவிக்கும், இதய நோய் புற்று நோய் போன்றவற்றை உண்டாக்கும். இவற்றை எதிர்த்து அளிக்கும் திறன் கொண்ட வேதிப் பொருட்கள் பூண்டில் உள்ளன.

பூண்டு இதய நோயைக் கட்டுப்படுத்தும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும், இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும் இரத்த ஒட்டத்தை சீராக்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். புற்று நோயிலிருந்து பாதுகாக்கும்.

பூண்டு, ஜலதோஷத்தைப் போக்கும், நீரிழிவு நோயாளிகளின்
சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக்கூடியது பூண்டு. ஒர் சிறந்த கிருமி நாசினி, நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பொருமல், வாய்வுத் தொல்லை, அஜீரணம், வயிற்று வலி, மூலம் போன்றவற்றிற்குதிறமையான மருந்து பூண்டு. சரும வியாதிகளுக்கு அருமருந்து.

. ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு. ஒர் சிறந்த கிருமி நாசினி, நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பொருமல், வாய்வுத் தொல்லை, அஜீரணம், வயிற்று வலி, மூலம் போன்றவற்றிற்கு திறமையான மருந்து பூண்டு. சரும வியாதிகளுக்கு அருமருந்து.

பூண்டு புற்று நோயை எதிர்க்கும் சக்தியுடையது என விஞ்ஞான ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. பூண்டை உண்பதால் வயிறு, குடல் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.

ஆறுமாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் 50% நோய் எதிர்ப்பு சக்தியை பூண்டு ஏற்படுத்துகின்றது. கேன்ஸர் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகளை பூண்டு சரி செய்கின்றது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பூண்டு அல்லது பூண்டு எண்ணெய்யாக உபயோகிப்பதை விட பூண்டை எஸன் எடுத்து சாரமாக பயன்படுத்தும் பொழுது பூண்டில் உள்ள அலிஸின் முழுமையாகக் கிடைக்கின்றது.


Spread the love