மனிதனுக்கு ஏற்படும் சில வகை நோய்களை, அவன் வாழும் இடத்தில் இருக்கும் பழங்கள், கீரைகள், மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்த இயலும் என்பதை ஆயுர்வேத மருத்துவம் வலியுறுத்துகிறது. இதில் மூலிகைக்கு அடுத்தபடியாக இருப்பது பழங்கள் தான். எல்லா பழங்களையும், நீங்கள் நினைத்த எல்லா நேரங்களிலும் வாங்கி சாப்பிட முடியாது. இயற்கை அதற்கென்று பல விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து, இன்ன மாதத்தில் இந்த பழங்கள் காய்க்கும் என்றும் அவை இந்த மாதத்தில் தான் சாப்பிட வேண்டுமென்றும் தீர்மானித்துள்ளது. அந்தந்த காலகட்டத்தில் விளையும் பழங்களை அந்தந்த காலத்தில் தான் சாப்பிட வேண்டும்.
இன்று சந்தையில் விற்கப்படும் பழங்கள் எல்லாமே இரசாயனம் கலந்ததாக காணப்படுகிறது. ஒரு நல்ல விவசாயியிடம் நல்ல ப்ழங்களை வாங்க வேண்டிய சூழலுக்கு நாம் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். இப்படி நல்ல பழங்களை தேடி பார்த்து சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் விளைகின்றன. பழங்களை சாப்பிடுவதால், அந்தந்த சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு நமது உடலுக்கு வரும் தீங்குகளை முறியடிக்கலாம். பழங்களை சாப்பிடுவதால் உடல் மட்டுமல்லாது, மனமும் ஆரோக்கியம் பெறும். இப்படிப்பட்ட அதிசயங்கள் நிறைந்த பழங்களைப் பற்றி எடுத்துரைக்கவே இந்த கட்டுரை.
என்ன பழங்களில் என்னென்ன சத்துக்கள், பயன்கள்?
ஆரஞ்சு
வைட்டமின் C நிறைந்துள்ளது. Anthocyanins நிறமி அதிகமாக இருக்கிறது ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடுவதால், இதயம் பலம் பெறும். தோல் நோய்கள் நீங்கும்.
பப்பாளி
உடல் திசுக்களை புதுப்பிக்கிறது. உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது. சூரிய ஒளித் தாக்குதல்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. முகப் பரு பிரச்சனையைச் சரி செய்ய உதவுகிறது. இந்த பழம் மார்ச், ஏப்ரல், மே போன்ற காலங்களில் கிடைக்கும். இதனை சாப்பிட்டு வருவதால் ஆயுளும் கூடும்.
மாம்ப்ழம்
முக்கனிகளில் முதல் கனி. சுவை மிகுந்த கனியாகும். இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. புற்று நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
பலாப்பழம்
அதிக புரதச் சத்தைக் கொண்டுள்ளது. சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கிறது. பெருங்குடல் புற்று நோயைத் தவிர்க்க உதவுகிறது.
எலுமிச்சம் பழம்
இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து உணவுகளில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உள் உறுப்புகள் பலம் பெறும். வெளிப்புற அழகை கூட்டுவதற்கு பெண்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. காலையில் ஒரு டம்ளர் தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதால், நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை. கல்யாணம் ஆன பெண்கள் அதிக தாம்பத்தியத்தால் உண்டான கண் கருவளையங்களை நீங்க ஆப்பிள் உதவுகிறது. எடையைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது. சருமப் புற்று நோயைத் தடுக்கிறது. நீரிழிவு நோயைத் தடுக்கிறது. தினம் ஆப்பிளைச் சாப்பிட்டால் பல் பளபளப்பாக இருக்கும்.
வாழைப் பழம்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதயத்தை வலுப்படுத்துகின்றது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பெண்கள் சிறு தொந்தியைக் குறைக்க தினமும் 2 பச்சை வாழைப் பழத்தினை சாப்பிட்டு வரலாம்.
ஸ்ட்ராபெர்ரி
கண் பிரச்சனைக்கு மாற்று மருத்துவத்திற்காக பயன்படுகிறது. இதய நோய் ஆபத்துக்களை தடுக்கிறது. புற்று நோய்க்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே நீக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை கூடுதல் படுத்துகிறது.
பேரிக்காய்
இதைக் காய் என்று பெயர் வைத்துக் குறிப்பிட்டாலும், இது ஒரு பழ இனம் தான். எலும்புகளை வலிமைப் படுத்துகிறது. காது, மூக்கு, தொண்டைப் பிரச்சனைகளுக்கு இப்பழத்தை ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. உடலின் பல்வேறு நரம்பு திசுக்களுக்கு வலு கொடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அசதியைப் போக்குகிறது. வயதுக்கு வந்த பெண்களுக்கு நோய் எதிர்பாற்றலை அதிகம் கொடுக்கிறது.
திராட்சை
சருமப் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. பெண்களின் மார்பகப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்கிறது. திராட்சையில் பச்சை திராட்சையை விட கருப்புத் திராட்சை அதிக விட்டமின்களைக் கொண்டுள்ளது. எடை குறைய உதவுகிறது. மாலைக் கண் நோயுள்ளவர்கள் இப்பழத்தை அடிக்கடி உண்ண, கண் பார்வை மேம்படும். எலும்புகளுக்கு வலு கொடுக்கிறது. தலை முடி பராமரிப்பில் பெரும் பங்காற்றுகிறது. சருமத்திற்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
அன்னாசி
தினமும் தொடர்ந்து உண்டால், பெண்களுக்கு இரகசிய இடங்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள் விரைவில் குணமாகும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரத்தப் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. இருமல், சளியைக் குறைக்க உதவுகிறது.
அத்தி
எலும்புகளை வலுவாக்குகிறது. அதிக நார்ச் சத்தைக் கொண்டுள்ளது. உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் C மற்றும் இ அடங்கியுள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது. சருமப் பாதுகாப்பில் முக்கிய இடத்தை அத்தி பெற்றுள்ளது.
கொய்யா
மன அழுத்தத்தினை போக்கும் மாமருந்து ஆகும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒரே பழ வகை இது மட்டுமே.
விளச்சி (Lychee)
இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. கண், இதயம், சருமப் பாதுகாப்பிற்கு உதவுகிறது.
சர்க்கரைப் பாதாமி (Apricot)
எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம். கண் பார்வைக்கு உதவுகிறது. இதய நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. ஆஸ்துமா நோயுள்ளவர்கள் எல்லாரும் இந்த பழத்தை அடிக்கடி உண்டு வர வேண்டும்.
சர்க்கரைப் பாதாமி (Apricot)
அதிக சத்துக்கள் நிரம்பியுள்ள இந்த பழத்தின் தோற்றம் பொன் நிறமாக இருக்கும். ஒரு வித புளிப்புச் சுவையுடன் இருக்கும். இதன் தாவரவியல் பெயர் ப்ருனஷ் அர்மனியகா. ரோச்சியே என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் ஆரஞ்சு நிறப் பழங்களை மட்டுமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பித்தப் பையில் உள்ள கற்களைப் போக்குகிறது.
குடல் புழுக்களை அழிக்கிறது. சரும நோய்களை நீக்குகிரது. அதிக தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளதால் ஆஸ்துமா, மார்புச் சளி, காச நோய், இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. சர்க்கரைப் பாதாமியில் அதிக நார்ச் சத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருக்களை நீக்க வல்லது. சருமப் புற்று நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
தவறான பழக்கத்தால் வீரியத்தை இழந்த ஆண்களுக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். இப்பழம் நரம்புகளை வலுப்படுத்துகிறது. வலுவான தோற்றத்தை உடலுக்கு வழங்குகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் வானிலி மற்றும் ருபின் நறுமண எண்ணெய் வகைகள் கை, கால் வலிகளைப் போக்குகிறது. இதில் இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் இரத்த உற்பத்திற்கு அதிக பங்காற்றுகிறது.
கரோட்டின் உடலி சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதய நோயைத் தடுக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடல் செல்லின் முதிர்வை தடுக்கிறது. நரம்புகளை வலுவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதால் இப்பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய்களினையும், சில வகைப் புற்று நோய்களையும் வராமல் பாதுக்காக்கிறது.
எப்படி பக்குவப்படுத்துவது?
இப்பழத்தினை நன்கு கழுவி இட்லியை வேக வைப்பது போன்று வேக வைத்து சாப்பிட்லாம். ஒரு கடாயில் நறுக்கிய பழத்தினைப் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, நீர் வற்றியவுடன் எடுத்து சாப்பிடலாம். சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம். இப்பழத்தை மசியல் செய்து விட்டு குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் சக்தியை கொடுத்து கண் பார்வையை கூர்மையாக்கும்.
சர்க்கரைப் பாதாமியை தினமும் 3 பழங்களை இரவில் சாப்பிட்டு வர உடலில் அவ்வப்போது வீணாக செல் இழப்பு ஏற்படுகையில், அந்த இழப்பைச் சரி கட்டும்.
மலை வாழைப் பழத்தோடு சேர்த்து கூழாக்கி, தயிர் கலந்து கடைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து இரவில் சாப்பிட்டு வர வேண்டும். இதனால், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கு பார்வைத் திறம் அதிகரிக்கும்.
சர்க்கரைப் பாதாமி அதிக விட்டமின் ஏ மற்றும் C, அதிக சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்தைக் கொண்டுள்ளது. கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும், கார்போ ஹட்ரேட்டும் குறைவாக உள்ளன. மனித உடலில் Oxygen Radical அதிகமாக இருந்தால் அதிக நோய்கள் ஏற்படும். இப்பழத்திற்கு Oxygen Radical களை உறிஞ்சும் தன்மை உண்டு.