ஒமேகா 3 என்ற கொழுப்பு மீன் மற்றும் மீன் எண்ணெய், ஃப்ளாக்ஸ் சீட்ஸ் மற்றும் கீரை வகைகளில் அதிகம் கிடைக்கிறது. கடல் மீன்களில் ஒரு சில வகை மீன்களில் குறிப்பாக நீல், ட்யூனா, சாளை மற்றும் கொடுவா வகைகளில் அதிகம் உள்ளது. இவை தெளிவான கண் பார்வை மற்றும் சீரான வளர்ச்சிக்கும், தாயின் கருவிலிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. கடல் மீன் உணவுகளை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது உட்கொள்வது நல்லது. மனித உடலில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் சரியான விகிதம் இருப்பது அவசியமான ஒன்று. (ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் அளவு விகிதம் 5:1 என்று இருக்க வேண்டும்.) ஒமேகா 6 கொழுப்பு அமிலம் அளவை மீறி அதிகரிக்கும் பொழுது புற்று நோய்க் கட்டிகள் வர வாய்ப்புண்டு, இதனை மட்டுப்படுத்துவது ஒமேகா 3 கொழுப்பு அமிலமேயாகும். உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு அதிகம் பாதிக்கப்படும் நோயாக மார்பகப் புற்று நோய் அமைந்துள்ளது. இவர்கள் மீன் எண்ணெய் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன் எண்ணெயில் காணப்படும் கொழுப்புச் சத்தான ஒமேகா 3 அதிகம் இருப்பதன் காரணமாக டியூமாஸ் என்னும் தசைக் கட்டிகள் வராமல்தடுக்கப்படுகிறது. டியூனா, சால்மன், சார்டைன்ஸ் மீன் வகைகளில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், மூட்டுக்களின் இணைப்புகளில் தோன்றும் வலி, காலை நேரத்தில் எழுந்தவுடன் காலை நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் சிரமப்படும் மூட்டு சார்ந்த வலிகளை குறைக்க முடிகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத் துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்குவதுடன் இரத்தம் உறைதலையும் தவிர்க்கிறது. மனிதனின் மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகிய முக்கிய உறுப்புகளைச் சீராக செயல்பட வைக்கிறது. மீன் உணவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிகலங்கள் மூன்றில் EPA எனப்படும் ஈக்கோசா பெண்டாயினிக் அமிலமும், டோக்கோசா செக்சாயினிக் அமிலமும் அடங்கும். தாயின் வயிற்றினுள் குழந்தை உருவாகி வளரும் போது, குழந்தையின் பல உறுப்புகளும் வளர்ச்சியடைகின்றன. அவற்றுள் வேகமாய் வளர்ந்து அதிகபட்ச வளர்ச்சியை (சுமார் 70 சதவீதம்) பெறுவது மூளைதான். மூளையானது கொழுப்பு நிறைந்த உறுப்பாகும். அதன் மொத்த உலர் எடையில், 50 சதவீதம் ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலத்தால் ஆனது. மூளை முழுமையான வளர்ச்சி அடைவதற்கும், பிறக்கும் குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருப்பதற்கும் மூளை வளர்ச்சியானது சிறப்பாய் அமைந்தால் தான் சாத்தியமாகும். இதனைக் கணக்கில் கொண்டு கருவைச் சுமக்கும் பெண்கள், அதற்கு ஏற்ப உள்ள மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கருவுற்ற பெண்கள்எடுத்துக்கொள்ளும் ஒமேகா 3 அமிலம் குழந்தைக்கு தேவையான அளவில் சென்றடைய வேண்டும். இல்லையெனில் தாயிடம் உள்ள அமினோ அமிலங்கள் மட்டுமே, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். இதனால் குழந்தைக்குக் கிடைக்கும் அமினோ அமிலம் குறைவது மட்டுமல்லாமல் தாயின் சேமிப்பில் உள்ள அமினோ அமிலமும் குறைவதால் தாய்க்கும் சில மனநலம் சார்ந்த குறைபாடுகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
சாலமன் மீனின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் லெக்டின்ஸ் என்னும் புரதப் பொருள் விப்ரியோஸிஸ் நோயை ஏற்படுத்தும் பாக்டிரியாவின் புறச் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதன் காரணமாக சிறப்பான நோய் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளதால், நோய்களை ஏற்படுத்தும் பாக்டிரியா மற்றும் வைரஸ்களிலிருந்து மீளலாம். உடலின் வளர்சிதை மாற்றம் ஏற்படுவதற்கு கன்றாய்ட்டின் சல்ஃபியூரிக் அமிலம் காரணமாக உள்ளது. இந்த அமிலம் தேவையான அளவுக்கு இல்லையெனில் கண்களில் உள்ளிருக்கும் திரவம் குறைந்து இதன் காரணமாக, கண்கள் பொலிவிழந்து வயதான தோற்றத்தைதரும். இந்த அமிலம் ஆஸ்ட்ரியோஸ் க்ளெராஸிஸ் இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைந்து கட்டுதலை மட்டுப்படுத்தும். மற்ற நோய்களும் வராமல் தடுக்கும். காய்ட்டர் எனக் கூறப்படும் தைராய்டு சுரப்பியின் குறைபாடு காரணமாக முன் கழுத்துக் கழலை நோய் ஏற்படுகிறது. இது அயோடின் பற்றாகுறை காரணமாக ஏற்படுகிறது. இதனை கடல் நீர் மற்றும் நன்னீரில் வாழும் மீன்களை உட்கொள்வதால் அயோடின் மற்றும் ஃபுளோரின் சத்தை பெறலாம். பற்கள் சேதமடையாமலும், அவற்றின் எனாமல் பாதிக்கப்படாமலிருக்கவும் ஃபுளோரின் உதவுகிறது.