நார்ச்சத்து உள்ள உணவுகள்

Spread the love

தானியங்கள்

1.       அரிசி

2.       ராகி

3.       ஓட்ஸ்

4.       சோளம்

5.       பார்லி

6.       முழு கோதுமை

7.       கைக்குத்தல் அரிசி

காய்கறி

1.       முருங்கக்காய்

2.       பீன்ஸ்

3.       காலிஃப்ளவர்

4.       கறிவேப்பிலை

5.       பட்டாணி

6.       கீரைகள்

பருப்புகள்

1.       பச்சைபயறு

2.       கடலைப்பருப்பு

3.       சோயாபீன்ஸ்

4.       பாதாம்

5.       வாதாம்

இதர உணவுகள்

1.       தேங்காய்

2.       சூரிய காந்தி

3.       விதைகள்

4.       எள்

5.       வேர்க்கடலை

பழங்கள்

1.       ஆப்பிள்

2.       பேரீட்சை

3.       நெல்லி

4.       வில்வம்

5.       திராட்சை

6.       எலுமிச்சை

7.       ஆரஞ்ச்

நினைவில் வைக்க உதவும் Mnemonics கி.மு. 6 ம் நூற்றாண்டில் சிமோனிடெஸ் (Simonides) என்ற கிரேக்க புலவர் முதன் முதலாக Mnemonics என்ற முறையை, விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளப் பயன்படுத்தினார் எனப்படுகிறது. இதன் அடிப்படை முறை என்னவென்றால் முதலில் நீங்கள் ஒரு சூத்திரம் போல சில மாதிரிகளை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் இந்த அடிப்படை சூத்திரத்தை ஆதாரமாக கொண்டு, தினசரி விஷயங்களை ஞாபகத்தில் கொண்டு வரலாம். இதை சற்று விவரமாக பார்ப்போம்.

நாம் ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்யும் போது அதை ஒரு வரிசைக்கிரமாக செய்யும் போது, சுலபமாக மனதில் பதிகிறது. உதாரணமாக பெருக்கல் வாய்ப்பாடு. எட்டாம் வாய்ப்பாடை எடுத்துக் கொள்ளுங்கள். 8 ஙீ 1 = 8, 8 ஙீ 2 = 16, 8 ஙீ 3 = 24 என்ற பின்பு 8 ஙீ 4 = என்று வரிசையாக வந்தால் தான் வாய்ப்பாடு, தவறின்றி வரும். 8 ஙீ 3 க்கு பிறகு 8 ஙீ 5 என்று தாவுவது கடினம். இதே போல் விஷயங்கள், விவரங்கள், பெயர்கள் இவற்றையும் ஒரு வரிசைக்கிரமாக அல்லது ஒரு டிசைனில் கொண்டு வந்தால் நினைவில் வைத்துக் கொள்வது சுலபம். இதற்கு Mnemonics உதவுகிறது.

உங்கள் வீட்டை நன்றாக சுற்றி வலம் வாருங்கள். அதில் 10 இடங்களை வாசல் படிக்கட்டு, வாசல், ஹால், பூஜை அறை, படுக்கை அறை முதலியன – நன்றாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். சரி, இப்போது உங்கள் மனைவி ஆபிஸிலிருந்து வருகையில் காய்கறிகளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளவும். நீங்கள் உங்கள் வீட்டின் இடங்களுடன் இந்த சாமான்களை இணைத்துக் கொள்ளுங்கள். வாசல் படிக்கட்டுகளில் கேரட், பட்டாணி வாசலில், வாழைப்பழம் ஹாலில், பூக்கள் பூஜை அறையில், தக்காளி படுக்கை அறையில் – இவ்வாறு கிரமாக நினைத்துக் கொள்ளுங்கள். கடைக்கு சென்றவுடன் வீட்டின் இடங்களை ஞாபகத்திற்கு கொண்டு வந்தால், வாங்க வேண்டிய காய்கறிகளும் நினைவிற்கு வரும்.

அக்ரோனிம் (Acronym)

ஒரு சொற்றொடரின் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்படும் சொல் Acronym எனப்படுகிறது. உதாரணமாக RADAR (Radio Detection and Ranging). அக்ரோனிம் இது போன்ற முறையான வார்த்தையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வானவில்லின் வண்ணங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள நம்மில் பலர் ‘VIGBYOR’ என்ற அர்த்தமில்லா வார்த்தையை ஞாபகம் வைத்துக் கொள்கிறோம். இந்த முறையை நீங்கள் பல விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள பயன்படுத்தலாம்.

பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்தல்

முதியவர்களுக்கு தர்மசங்கடமான நிலைமை, தாங்கள் சந்திக்கும் நபர்களின் பெயர்களை மறப்பது. இதை சரி செய்ய சந்திக்கும் நபர் தனது பெயரைச் சொல்லும் போது கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு தடவைக்கு இரு தடவையாக பெயரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

மனதில் பெயரை எழுதிக் கொள்வது போல் நினைத்துக் கொள்ளுங்கள்.

பெயருடன் வேறு படம் (அ) பொருட்களை இணைத்துப் பாருங்கள்.

முடிவாக, முதியவர்கள் தங்களின் புலன்கள் அனைத்தையும் சுறுசுறுப்பாக பயன்படுத்த வேண்டும். ஞாபக சக்தி குறைவைப் பற்றி கவலைப்படாமல் அதை மேம்படுத்தும் உந்துதலை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். முன் பின் தெரியாத இடங்களுக்கு சென்றால், சுற்றும் முற்றும் உள்ள முக்கிய இடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிறிய குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. தவிர தனிமையை தவிர்க்கவும். உற்றோர் நண்பர்களுடன் இனிமையாக பழகி எப்போதும் கலகலப்பாக இருந்தால் மனநலம் ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சி – உடற்பயிற்சியால் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மூளை வலுவடைந்து ஞாபக சக்தி பெருகும். தவறாமல் உடற்பயிற்சி செய்யவும். உடற்பயிற்சியாலும், அளவான உணவாலும் உடல் எடையை சரியான அளவில் வைப்பது மறதியை போக்க உதவும். அதிக உடல் எடையால் பல வழிகளில் ஞாபக சக்தி பாதிக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால், மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுகிறது. மூளையின் திறன் குறையும். பருமனானவர்களின் உடலில் உள்ள கார்டிசால் (Cortisol) ஹார்மோன் மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும்.

தியானம் – தியானம் ஞாபக சக்தியை பெருக்கும். ஏனென்றால் மனதை தியானம் ஒரு முனைப்படுத்துகிறது. மூளையின் திசுக்கள் உந்தப்படுகின்றன. மறதி மறைகிறது. முறையாக கற்றுக் கொண்டு, கட்டாயம் தியானத்தில் ஈடுபடவும்.

பொழுதுபோக்கு – சங்கீதம் கேட்பது, ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு செல்வது, புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் வெளியில் செல்வது, உரையாடுவது, தோட்டக்கலை, கை வேலை, படங்கள் வரைவது என்று பல விஷயங்களை மேற்கொள்வதால் மூளைக்கு அமைதியும், சுறுசுறுப்பும் கிடைக்கும்.

சத்துணவு – முன்பே சொன்னபடி சமச்சீர் உணவு (சிறிது புரதம் கூடுதலாக) மறதியை வெல்ல உதவும்.


Spread the love
error: Content is protected !!