முட்டையின் மறுபக்கம்

Spread the love

முட்டை ஒரு சத்தான உணவுப் பொருளாகும். சத்துணவு போடுகின்ற பள்ளிக் கூடங்களில் முட்டையும் தரப்படுகிறதென்று கேள்விப்பட்டிருக்கிறோம். முட்டையில் புரதமும், விட்டமின்களும், மணிச்சத்துக்களும் உள்ளன. அது உடலுக்கு சக்தி மிகுந்த உணவு என்று கூறப்படுகிறது.

இந்த நல்ல பெயரைப் பெறுவதற்கு முட்டை தகுதியுள்ளது தானா என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. முட்டையைப் பற்றிச் சொல்லப்படுகின்ற செய்திகளில் பாதிக்குமேல் உண்மைக்குப் புறம்பானவை என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன. முட்டையின் உணவுச் சக்தியின் மதிப்பைப் பார்ப்போம். 100 கிராம் அளவு முட்டையில் 13.6 சதவிகிதம் புரதமும் 13.3 சதவிகிதம் கொழுப்பு சத்து உள்ளன. ஆனால் அதே 100 கிராம் அளவுள்ள ஏதாவது ஒரு பருப்பு வகையில் 24 சதவிகிதம் புரதமும் 1.3 சதவிகிதம் தெகட்டாத கொழுப்பும் உள்ளன. உடலுக்கு கேடு விளைவிக்காதது. கொழுப்புக் குறைவான சக்தி இது.

முட்டையில் விட்டமின்களின் நிலை என்ன என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம் தான். ஒரு முட்டையிலிருக்கும் 1200 ஐ.யு. விட்டமின் A கீரைகளில் காணப்படும். 100 கிராம் முருங்கைக்கீரையில் 8000 ஐ.யு. வும் கொத்தமல்லித் தழையில் 10,000 – 12,000 ஐ.யு. வும் விட்டமின் A உள்ளது. பச்சைக் காய்கறிகள், கேரட், மற்றும் கீரை வகைகளில் கெரோட்டீன் என்னும் விட்டமின் A யின் மூலப் பொருள் நிறைந்த அளவில் உள்ளது. அதே போல் முட்டையில் இருக்கும் விட்டமின் D அளவை விட அதிக அளவு விட்டமின் D -யை இந்தியர்களாகிய நாம் சூரிய வெளிச்சத்திலிருந்து பெற முடியும்.

விட்டமின் B என்று எடுத்துக் கொண்டால் முட்டையிலுள்ள விட்டமின் B சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால் பயறு வகைகளிலும் தானியங்களிலும் விட்டமின் B எளிதாகக் கிடைக்கிறது. மேலும் மாவைப் புளிக்கச் செய்து தயாரிக்கப்படும் இட்லி, தோசையில் விட்டமின் B அதிக அளவில் உள்ளது.

100 கிராம் முட்டையில் 400 மி.கி. முதல் 500 மி.கி. வரை கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று தெரிந்தும் அதைப் பாதுகாப்பான உணவு என்று எப்படி சொல்ல முடியும்.

ஒரு சின்ன சோதனைகள் மூலம் நீங்களே உணர்வீர்கள். 1 டம்ளர் பாலில் 5 மி.கிராமும், 125 கிராம் இறைச்சியில் 100 மி.கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஓவ்வொரு முட்டையில் இருக்கும் கொலஸ்ட்ராலில் 5 மி.கி. கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேருகிறது. இது தவிர முட்டையின் ஓட்டில் கண்ணுக்கு தெரியாத சுமார் 25,000 – 30,000 நுண்ணிய துளைகள் முட்டையினுள் வளரவிருக்கும் கருவிற்கு ஆக்சிஜன் செல்லும் வழி இந்தத் துளைகள். இவைகளின் மூலம் பாக்டீரியாக்கள் உள் நுழைந்து நுண்ம தொற்றினை ஏற்படுத்தி முட்டைகளை உண்ணத் தகாதவைகளாக மாற்றி விடுகின்றன.

இதனால் 30 டிகிரி வெப்பத்திற்கு மேற்பட்ட நிலையில் 48 மணி நேரம் வைக்கப்பட்டிருக்கும் முட்டை கெட்ட முட்டை என்று கருதப்படுகிறது.

மேலும் கோழி வளர்ப்பு நிலையங்களில் கோழிகளின் உணவில் பல வகைப்பட்ட பாக்டீரிய எதிர்ப்பிகள் ஹார்மோன்கள் செயற்கை மருந்துகள் மற்றும் மணிச்சத்துக்கள் போன்றவை அதிக அளவில் கலக்கப்படுகின்றன.

இவை கோழி முட்டை மூலம் மனிதர்களின் உடலைச் சென்றடைகின்றன. குறிப்பாக ஜெண்டாமைசின் எனப்படும் பாக்டீரிய எதிர்ப்பிகள் கோழித் தீவனத்தில் அதிக அளவு கலக்கப்படுகிறது. ஜெண்டாமைசீனுக்குச் சிறுநீரகத்திலுள்ள வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிற ஒரு குணம் உண்டு. இதனால் முட்டை அதிகமாக உண்பவர்களுக்கு சிறுநீரக கோளாறுகளும் ஏற்பட ஓரளவு வாய்ப்புள்ளத

To Buy Herbal Products>>>


Spread the love
error: Content is protected !!