நம் நாட்டில் இரண்டு முக்கியமான உணவுகள் உள்ளன. ஒன்று சாதம் மற்றொன்று சப்பாத்தி. இரண்டுமே இந்தியர்கள் அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட உணவாகும்.
சாதம் சத்தா ?
சாதம் என்றாலே சத்துதான். சிலர் சாதத்தை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று கூறுவார்கள். ஆனால், அந்த சாதத்தை நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று.
இந்த நவீன உலகத்தில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் நாம் எளிமையான வழியை தான் தேடுகின்றோம். அதனால் நாமே நம் உடலிற்கு தேவையில்லா நோய்களை விலைகொடுத்து வாங்குகின்றோம்.
நம் முன்னோர்கள் சாதத்தை வடித்து சாப்பிடுவதுடன், வடிக்கும் போது கிடைக்கும் கஞ்சி தண்ணீரை குடித்து வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் குக்கரில் செய்யப்படும் உணவில் ஸ்டார்ச் சாதத்துடன் தங்கிவிடுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.
சாதத்தில் நீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலுக்கு தேவையான வலிமையையும் தருகிறது. அத்துடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கின்றன.
சாதம் வடித்த கஞ்சி நீரில் சிறிது உப்பை சேர்த்து குடித்து வந்தால் கண் எரிச்சல் மற்றும் பித்தம் ஆகியவை சரியாகும். சாப்பிடும் உணவிற்கு தகுந்த உடல் உழைப்பை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சர்க்கரை நோய் வர வாய்ப்பு குறைவே ஆகும்.
சப்பாத்தி சத்தா ?
அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். அந்த கோதுமையின் மூலம் உருவாக்கும் சப்பாத்தியில் எவ்வளவு நன்மை உள்ளது என்பதை பார்ப்போம்.
இரத்தத்தை சுத்தபடுத்தும்
தினமும் கோதுமையில் செய்யும் சப்பாத்தியை செய்து சாப்பிடுவதன் மூலம் நம் உடம்பில் உள்ள நச்சுகளை வெளியேற்றி நம் உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது.
உடல் எடை குறையும்
சப்பாத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை குறைகிறது.
குறிப்பு : உடல் எடை குறைய வேண்டும் என நினைப்பவர்கள் மைதா மாவு சேர்ந்த உணவை தவிர்ப்பது நல்லது.
செரிமானம் செய்கிறது
சப்பாத்தியை சாப்பிடுவதால் எளிதில் செரிமானம் ஆகிறது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.
இதயத்திற்கு இன்பத்தை தரும்
இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சப்பாத்தி சாப்பிடுவதனால் இதயம் வலிமை அடைகிறது.
இரத்த அழுத்தத்திற்கு
தினமும் சப்பாத்தி சாப்பிடுவதனால் இரத்த அழுத்தத்தை கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றத்திற்க்கு
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கோதுமையினால் ஆன உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம், வாய் துர்நாற்றம் படிப்படியாக குறைய தொடங்கும்
நீரிழிவிற்கு
சப்பாத்தியை நீரிழிவு நோயாளிகள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களின் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை சீராக வைக்க உதவுகிறது.