தேன்நெல்லி தெரிந்து கொள்வோம்!

Spread the love

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும் படி பலரும் வலியுறுத்துகின்றனர். இந்த ‘தேன்நெல்லி’ தற்பொழுது சில கடைகளில் கிடைக்கிறது.

இதை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

நம் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக்கப்படுவதோடு, இரத்த அணுக்களின் அளவுகள் அதிகரித்து, இரத்த சோகை நீங்கும், இதயத்திளுள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். முகப் பொலிவு அதிகரிக்கும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும், முடி கொட்டுதல் தவிர்க்கப்படும். ரோமக்கால்கள் வலு வடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

கண்களில் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள், இதை தினமும் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிட்டும்.

அடிக்கடி ஜலதோஷம் மற்றும் தொண்டைப்புண்ணால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வர அதன் மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறி விடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

தேன் நெல்லி சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தவிர்க்கப்படும், அப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அவை சரியாகிவிடும். அசிடிட்டி சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால்,  நிவாரணம் கிடைக்கும். 

மொத்தத்தில் பலவித உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு ஒரு ‘தேனான தீர்வு” தேனில்  ஊறவைத்த நெல்லிக்காய் தான்!

தேன் நெல்லிக்காய் செய்ய

தேவையானப் பொருட்கள்

பெரியநெல்லிக்காய்-1/2கிலோ                                                  வெல்லம்-1/4கிலோ                                                        தேன்-3ஸ்பூன்                                                      எண்ணெய் –  4 டீ ஸ்பூன்

செய்முறை:

பெரிய நெல்லிக்காயை நன்றாகக் கழுவி ஈரம் போக துடைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு குறைந்த தீயில் நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் சிறிது சுருங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். நெல்லிக்காய் ஆறியதும் அதன் மேல் உள்ள எண்ணெயை மெல்லிய பருத்தி துணியால் ஒற்றியெடுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கிப் போட்டு, 1கப் தண்ணிர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்சவும். கம்பிப்பாகு பதம் வந்ததும் இறக்கி வைத்து, தேன் மற்றும் நெல்லிக்காய்களைச் சேர்க்கவும். இரண்டு நாள் வெல்லப்பாகில் நெல்லிக்காய் நன்றாக ஊறியதும், பத்திரப்படுத்தி வைத்து பயன்படுத்தலாம். இது பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

ஏ. ஆர் எஸ்      

        


Spread the love