நோய் தொற்றுகளிலிருந்து நம்மை காக்கவும், நம்முடைய செல்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கவும் ஊட்டசத்துகள் மிகவும் அவசியம். முதலில் நம்முடைய உடலிற்கு தேவை வலிமை தான். அதற்கு இரும்பு சத்து அவசியமான ஊட்டசத்து. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையையும் மேம்படுத்தும். குழந்தைகளில் இருந்து, பெரியவர்கள் வரை இரும்புசத்து உணவுகள் தவறாமல் உட்கொள்வது அவசியம்.
அடுத்து விட்டமின் டி, இது அவசியமான ஊட்டச்சத்து. ஆனால் மற்ற உணவுகள் மூலமாக இதை பெறுவது கடினம். இது சூரிய ஒளியில் இருந்து தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. இது மூலமாக மனஅழுத்தம், நெஞ்சு வலி போன்ற பிரட்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அதோடு கால்சியமும் இந்த ஊட்டச்சத்தில் இருந்து கிடைக்கும். அதை தொடர்ந்து, தினமும் கால்சியம் நமக்கு பால், சீஸ், பாதாம் இவற்றிலிருந்து கிடைக்கின்றது.
இருப்பினும் கால்சியத்தின் பயன்பாடு குறையவே கூடாது. இதனால் பற்களும், எலும்புகளும் உறுதியாகி, ஒரு 35 வயதிற்கு மேலான பெண்களுக்கு எலும்பு தேய்மானம், எலும்பு சிதைவு போன்ற பிரட்சனைகள் தடுக்கப்படுகின்றது. கீரைகளில் பசலை கீரையில் கால்சியம் அதிகமாக நிறைந்திருக்கின்றது. விட்டமின் சி, மனித உடலின் தடுப்பாக இருக்கின்றது. இதில் இருந்து கிடைக்க கூடிய ஆண்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயின் தாக்குதல்களை எதிர்க்கும்.
விட்டமின் E-யிலும் சிறந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட் இருக்கின்றது. இது வைட்டமின்கள், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, முருங்கை கீரையில் தாராளமாக கிடைக்கும். அடுத்து ஒமேகா 3, கொழுப்பு அமிலம், இது கடல் மீன்களில் அதிகமாக உள்ளது. குறிப்பாக இரத்த அழுத்தம் மற்றும் பெண்களுக்கான எதிர்ப்பு ஆற்றல் வழங்கும். ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் பயனாக இருக்கும் மற்றொன்று தான் நார்சத்து. இந்த சத்து செரிமான மண்டலத்தை தடையில்லாமல் இயங்க செய்யும். இது மலச்சிக்கலை போக்கி, தோல் அழற்சி மற்றும் புற்றுநோய் வரைக்கும் ஏற்படாமல் காக்கும். இது பச்சை காய்கறி மற்றும் கீரைகளில் அதிகளவு நிறைந்திருக்கும்.