முதுமையைத் தள்ளிப் போடலாம் வாங்க

Spread the love

எப்பொழுதும் டென்சன் பரபரப்பு காலையில் எழுந்தவுடன் பால் காரன், பேப்பர் காரன், லாண்டிரி காரன், வேலைக்காள் வரலையா வீட்ல புருஷன், பொண்டாண்டிக்கு டென்சனாயிடும். பிள்ளைகளோ அதை விட சோம்பேறிகளாக சீக்கிரம் பள்ளிக் கூடம் போக ரெடியாகணுமே என அக்கறை இருக்காது. டென்சனின் உச்ச கட்டம் கணவன் மனைவியில் 40 வயதிலிருந்து தான் பொதுவாக காணப்படும்.

இதனால் நமக்கு இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, படபடப்பு, கால் தள்ளாட்டம், கால் தள்ளாட்டம், மூட்டு வலி என ஒன்றன் பின் ஒன்றாக எட்டிப் பார்க்கும். 40 வயதிலேயே முகத்தில் ஒரு களைப்பு, சுருக்கம், கை, கால் சருமங்கள் வயதானவர்களின் சருமம் போல காணப்பட அதை மறைக்க செயற்கைப் பூச்சுகளால் மேக்அப் பண்ண வேண்டியுள்ளது.

வயது கூடுவது பிரச்சனையில்லை. முதுமையை நாம் தள்ளிப் போடலாம். 50, 60 வயது ஒரு வயதில்லைங்க. அதுக்கு நாம என்ன செய்யலாம்? கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க. பல விஷங்களை தெரிஞ்சுக்கிட்டு, அதன்படி முயற்சி பண்ணுங்க. நீங்கள் தான் சுறுசுறுப்பான இளைஞர் என்று கூறி விடுவார்கள்.

சரியான உடல் எடையில் இருக்கிறீர்களா?

பெரும்பாலான மக்கள் தங்கள் உடலில் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை நடுத்தர வயதினை எட்டும் போது பதட்டம் அடைகின்றனர். உடல் சற்றே பருத்து உடுத்தியிருக்கும் ஆடை அளவு சற்று அதிகரிப்பது, ஓரளவு உடல் சுருக்கமும் காணப்பட ஒன்றுமில்லை. உடல் எடையை சற்றே கூடாமல் அடிக்கடி ஒரு கண் வைத்துக் கொண்டால் போதுமானது.

புகை பிடிப்பதால் முதுமையை நீங்கள் வரவேற்கிறீர்கள்

சருமத்தின் வயதான தோற்றம் விரைவாக ஏற்படுவதை சிகரெட், பீடி புகைத்தலால் அடிக்கடி தூண்டப்பட முடிகிறது. நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு புகைப் பிடிக்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு வேகமாக, அதிகமாக உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது.

நீங்கள் புகைப்பிடிக்கும் வழக்கத்தை விலக்குவதால் உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள், மாற்றங்கள் என்ன்?

உங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது.

நரம்புகள் கண் வீங்கி பருத்துவலி தரும் வெரிகோஸ் வெயின்ஸ் என்ற நரம்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கும்.

உடல் பருமன் ஆவதைத் தடுக்கும்.

உடற்பயிற்சி செய்வதை எளிதாக்கி அதிக உற்சாகமான உடல் நிலையை மற்றும் மன நிலையைத் தரும்.

உங்களின் நாக்கு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுக்கள் மேம்பட்டு சுவை உணர்வை அதிகரிக்கும்.

மூக்கின் மூலம் வாசனை நுகரும் சக்தி அதிகரிக்கும்.

அது மட்டுமல்லாமல் நீங்கள் புகைப் பிடிப்பதால் உங்கள் ஆடை, தலை முடிகளில் ஒட்டிக் கொள்ளும் சிகரெட் சுருட்டு வாசனையும் புகையை விலக்குவதால் விலகி விடும்.

அதிக சத்துக்கள் உள்ள உணவைத் தேர்ந்தெடுங்கள்

குறைவான கொழுப்புள்ள, அதிக நார்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் பசுமையான கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் உங்கள் உடலில் நீர்ச்சத்துக்கள் குறையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிக அளவு தண்ணீர் அருந்துவது தான் உடலில் நீர்ச்சத்து வற்றாமல் பார்த்துக் கொள்ள மிகவும் எளிதான மற்றும் சக்தி தரும் வழியாகும். இதன் மூலம் உங்கள் சருமத்தை ஆரோக்கிய நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குங்கள்

விளையாட்டுப் போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் போன்ற உங்களுக்கு விருப்பமான, உற்சாகம் தரும் நிகழ்ச்சிகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்து கொள்ளுங்கள். 18 முதல் 64 வயது உள்ளவர்கள் வரை தினசரி இரண்டரை மணி நேரம் என்று வாரம் இரண்டு முறை ஏரோபிக்ஸ் என்ற உடற்பயிற்சியைச் செய்து வரலாம். இத்துடன் மெதுநடை, மெதுஓட்டம், உடற்பயிற்சி, யோகா என்று மேலும் இணைத்துக் கொள்ளுங்கள்.

சூரியனின் நேரிடையான வெப்பத் தாக்குதலை தவிர்க்க வேண்டும். வெயில் நேரத்தில் வேலை விஷயமாக அல்லது சொந்த வேலையாகச் செல்வதை எப்படி தவிர்க்க இயலும் என்று கேட்பவர்கள் தலைக்குத் தொப்பி, சன் கிளாஸ் அணிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் உடலில் சூரியனின் உஷ்ணம் தாக்காது. முகச் சுருக்கம் தவிர்க்க முகத்திற்கு சூரியக்கதிர் தடுப்பு கிரீம்களை பூசிக் கொள்ளுங்கள்.

போதுமான அளவு தூக்கம் அவசியம்

போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருந்தால் கண்களைச்சுற்றி கருமையான வளையம் ஏற்பட்டு முக அழகைக் கெடுக்கும். இதன் மூலம் உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாகி விடும். சரும செல்கள் புத்துணர்வு பெற்று இயங்க போதுமான அளவு தூக்கம் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு மனிதன் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் வரை உறங்குவது அவசியம். ஆழ்ந்த, தொந்தரவு அற்ற நிம்மதியான தூக்கமாக அது அமைந்திருக்க வேண்டும்.

நிம்மதியான தூக்கம் எளிதாக அமைய நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

இரவு தூங்கச் செல்வதற்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கு முன்பே காபி, டீ, மது வகைகள் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.

தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உங்கள் இரவுச் சாப்பட்டை முடித்து விடுங்கள்.

தூங்கச் செல்லும் முன்பு டி.வி., கம்ப்யூட்டரில் உள்ள வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

இரவு தூங்கும் நேரத்தை எப்பொழுதும் மாறாமல் ஒரே நேர அளவாக அமைத்துக் கொள்ளுங்கள்.

பன்னீரில் உங்கள் கண்களை நனைத்து பின்பு துடைத்துக் கொண்ட பின்பு, ஒரு துளி வெண்ணெய் இட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தூங்கவும்.

பகல் நேரத் தூக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் முக அழகை மேம்படுத்தும் மருத்துவ சிகிச்சைகள்

உங்கள் முகவாய்க் கட்டைக்கு கீழே தொங்கும் சதைகள் சோர்ந்து அல்லது தொளதொளவென்று அமைவதால், இளவயதிலேயே உங்கள் தோற்றத்தை முதுமையாகக் காண்பிக்கும். கண்களைச் சுற்றி கண்களுக்கு கீழே அதிக கொழுப்பின் காரணமாக உப்பளான, வீக்கமான பட்டை போன்று சதை தொங்கும். இது போன்ற தேவையில்லாத சதைகளை குறைப்பதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது முகத் தோற்றத்தை இளமையாக அதிகரிக்கச் செய்யும்.

ஆனால், இதற்கு தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர் அமைவதுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு சிகிச்சை செய்வதும் அவசியம். ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொள்வதும், தினசரி உடற்பயிற்சியுமே உங்கள் முக அழகை மீட்டுக் கொடுத்து விடும்.


Spread the love