வீடுகளிலும், அலுவலகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஹாலஜன் விளக்குகளால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எலிகளில் இதற்கான பரிசோதனை ஆக்ஸ்போர்டு இம்பீரியல் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எலிகளை A, B, C என்று மூன்று பிரிவாகப் பிரித்து, வகைக்கு நான்கு எலிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.
A பிரிவு எலிகளை சாதாரண ஹாலஜன் விளக்கொளியிலும், B பிரிவு எலிகளை தினமும் பன்னிரண்டு மணி நேரம் 50 வாட் ஹாலஜன் விளக்கின் கீழிலும், சி பிரிவு எலிகளை மெல்லிய பிளாஸ்டிக்காலான மூடியால் மூடி சாதாரண விளக்கு ஒளியிலும் ஏறத்தாழ 12 மாதங்கள் வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மூடி யிடப்படாது, நேரடியான ஹாலஜன் விளக்கொளியில் இருந்தA,B பிரிவு எலிகளில் லேசான, ஆனால் வலி அதிகமற்ற (non malignant) தோல் புற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
எனினும், “புற்றுநோய்க்கும், 100,000 ஹெர்ட்ஸீக்குக் குறைவான ஒளியை உமிழும் மின்சாதனங்களுக்கும் இடையே (ஹாலஜன் விளக்குகள்) தொடர்பு இருப்பதற்கான மூல ஆதாரம் எதுவும் காணப்படவில்லை என்று அதே இம்பீரியல் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்
ஆயுர்வேதம்.காம்