இந்த காலத்தில் கூந்தல் என்பது மனிதர்களின் மிக முக்கியமான அழகுசார்ந்த அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு கூந்தல் என்பது மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது. இதற்காக ஒவ்வொருவரும் தங்களது கூந்தலை பாதுகாக்க, உறுதியான மற்றும் வலிமையான கூந்தலை பெற என்னவெல்லாமோ செய்து வருகின்றனர். பியூட்டி பார்லர்களுக்கு சென்றால் தான் தெரிகிறது கூந்தல் வடிவமைப்பில் இத்தனை ரகங்களா என்று. கூந்தல் நம்மை மற்றவர்களை விட கூடுதல் அழகுபடுத்திக்கொள்வதற்காக மட்டுமே என்று என்னிக்கொண்டிருக்கும் நமக்கு, கூந்தலின் அறிவியல் விடையங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என தெரியவில்லை? அழகைத் தாண்டி கூந்தல் பற்றய சில சுவாரஸ்யமான தகவல்களையும் அதன் உண்மையான பயன்களையும் பற்றி இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
கூந்தலானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அமைப்பில் இருக்கிறது. பெரும்பாலும் ஜெனிடிக் காரணமாகவே பலருக்கு கூந்தலின் தன்மை வேறுபடுகிறது என்றே சொல்லலாம். வழிவழியாக வளர்ந்து வரும் சந்ததியாகிய நமக்கு நமது மூதாதையர்களின் தலைமுடி அமைப்பே பெரும்பாலும் அமைகின்றது. சிலர்க்கு நீளமாகவும், சிலருக்கு சுருண்டும், சிலருக்கு வளைந்தும் வளர்ந்து வரும். சிலருக்கு கடகடவேனவும், சிலருக்கு மிகவும் மெல்லமாக கூந்தல் வளர்வதை நாம் பார்த்திருப்போம். மனிதனின் சராசரி வளர்ச்சியை வைத்து பார்கையில் ஒருவருடைய கூந்தல், ஒரு மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் உயரம் தான் வளருமாம். சரியான ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளவர்களுக்கே இந்த வளர்ச்சியில் தாமதம் ஏற்படுமாம். “அந்நியன்” படத்திற்காக நடிகர் சியான் விக்ரம் அவர்கள் தொடர்ந்து இரண்டு வருடங்கள் அவரது கூந்தலை வெட்டாமல் இருந்தார் என்று சொல்கிறார்கள்.
நமது உடலில் நகம், பற்கள் மற்றும் கூந்தல் வளர்வதற்கு ஒவ்வொரு விதமான protein ஊட்டச்சத்துக்கள் தான் காரணம் என்று கூறுகிறார்கள். குறிப்பாக கருமையான கூந்தல் நமது தலையில் வளர “keratin” என்கிற protein தான் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முக்கியமாக ஆண்களுக்கு இந்த keratin ஊட்டச்சத்து உடலில் அதிகமாக இருப்பதனால் தான் முகத்தில் தாடி, மீசைகள் அதிகமாகவும், வேகமாகவும் வளர்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதேசமையம் பெண்களின் keratin ஊட்டச்சது அவர்களது தலையில் உள்ள கூந்தல்களில் அதிகமாக வெளிப்படுகிறது உண்மைதானே?
கூந்தல் அதன் வலிமையை இழப்பதை நாம் மிகவும் சுலபமாக கண்டிபிடித்துவிடலாம். பெண்களுக்கு கூந்தல் நீளமாக வளர்வதனால் ஊட்டச்சத்து குறைதால் அவர்களது கூந்தல் பாதி பாதியாக உடைந்துவிடும். இல்லையென்றால் கூந்தலின் நுனியில் திரி மாதிரி பிரிந்து வரும். ஆண்களுக்கு கூந்தலில் வலிமை குறையும் பொழுது மிகவும் மிருதுவாக மாறிவிடும். சில தினங்களில் கொட்ட ஆரம்பித்துவிடுமாம். இதனால் பலரும் பலவிதமான ஷாம்பூ, மற்றும் கண்டிஷனர்களை வாங்கி உபயோகப்படுத்துவார்கள். குறிப்பிட்ட அவர்களுக்காகவே இந்த தகவல். ஒரு சராசரி மனிதருக்கு ஒரு நாளைக்கு ஐம்பதில் இருந்து நூறு முடி வரை தலையில் இருந்து உதிருமாம். இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்.
இயற்கையின் ஆற்றலில் மண்ணில் வளரும் செடி கோடிகள் பருவநிலை பல உதவிகளை செய்கின்றது. செடி கோடி இலைதழைகளின் வளர்ச்சி வெயில் காலங்களில் அதிகமாகவும், மழை காலங்களில் குறைவாகவும் இருக்கும். அதே மாதிரிதான் நமது கூந்தலும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் வாசகர்களே வெயில் காலங்களில் நமது கூந்தல் அதிக வளர்ச்சியை அடைகிறதாம். அதே சமையம் குளிர்காலங்களில் நமது கூந்தலின் வளர்ச்சி குறைந்துவிடுகின்றதாம். அதே மாதிரி செடிகள் மரங்கள் வெட்ட வெட்ட வேகமாக வளரும் என்று சொல்லுவார்கள். நமது உடல் உறுப்புகளிலேயே வெட்ட வெட்ட வளரக்கூடிய ஒரே உடல் உறுப்பு நமது கூந்தல் தானாம். ஆனால் வளர்ச்சியில் வேகம் இருக்காது அதே சமையம் வளர்ச்சியில் எந்த வித வித்தியாசங்களும் இருக்காது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இப்பொழுது கூந்தலின் அடர்த்தி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல். கூந்தல் அடர்த்தியாக இல்லாதவர்கள் அடர்த்தியான கூந்தல் கொண்ட நண்பர்கள் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ பொறாமை கொள்வது சகஜமாகிவிட்டது. ஒரு சராசரி மனிதனுடைய கூந்தல் எவ்வளவு அடர்த்தியை கொண்டதாக இருக்குமென்று உங்களுக்கு என்றாவது தோன்றியது உண்டா வாசகர்களே. அதற்கான பதில் இதோ, ஒரு சராசரி மனிதனுக்கு அவனுடைய தலையில் ஒருலட்சத்தில் இருந்து ஒருலட்சத்தி ஐம்பதாயிரம் முடிகள் வரை இருக்குமாம். நமது உடலில் இருக்கும் மிருதுவான ஸ்கின்னானது பல அடுக்குகளை கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த பல விதமான ஸ்கின் அடுக்குகளில் ஒன்று தான் “FOLLICLE”. நமது ஸ்கின்னின் ஒரு அடுக்கான இந்த “FOLLICLE” எனும் இடத்தில் இருந்துதான் ரோமங்கள் வளர்ந்து வருகிறதாம். ஒரு கூந்தல் அதன் தன்மையை இழந்து உதிர்ந்த அடுத்த நொடியில் புதிய கூந்தலின் வளர்ச்சி தொடங்கிவிடுமாம்.
மனிதனுடைய கூந்தலின் சராசரி வளர்ச்சியை பற்றி பார்த்தோம். அப்படி வளரும் கூந்தலின் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா? குறைந்தபட்சம் இரண்டில் இருந்து ஏழு வருடங்கள் என்கின்றனர். அதாவது நமது உடலில் ஒரு கூந்தலானது வளர்ந்தால், அந்த குறிப்பிட்ட கூந்தலுக்கு அனைத்து protein ஊடச்சதுகளும் சரியாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டால் சுமார் ஏழு வருடம் வரை அந்த கூந்தல் நமது தலையில் இருக்கும் என்று கூறுகின்றனர். நமது உடம்பில் அதிக வளர்ச்சியை கொண்ட திசுக்கள் எலும்பில் இருக்கும் மஜ்ஜைகள் தான் என்கின்றனர் மருத்துவர்கள். உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் அதிவேகத்தில் வளரும் இரண்டாவது உறுப்பு நம்முடைய கூந்தல் தானாம். திருப்பதியில் கோடானுகோடி பக்தர்கள் தொடர்ந்து தங்களது கூந்தலை இறைவனுக்கு சமர்ப்பிப்பது இந்த காரணத்திற்காக தானோ?
நமது கூந்தலை வேகமாகவும் மற்றவர்களை விட அடர்த்தியாகம் வளர்க்க ஒரு எளிய வழியை நான் உங்களுக்கு இப்பொழுது சொல்லப்போகிறேன். இந்த எளிய வழியை நீங்கள் வீட்டில் இருந்தே செய்துவிடலாம். எந்த வித செலவுகளும் ஆகாதா இந்த எளிய வழி உங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். தினமும் அதிகமாக ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் படுக்கையில் படுத்து தூங்கிவிடும்கள். நான் பிதற்றவில்லை வாசகர்களே உண்மையை தான் சொல்கிறேன். நாம் இயல்பாக இயங்கிக்கொண்டிற்கும் நேரங்களை விட ஓய்வெடுக்கும் நேரங்களில் தான் நமது கூந்தல் வேகமாக வளருமாம். நாம் இயங்கிக்கொண்டிருக்கும் நேரங்களில் பத்து சதவிகிதமும் உறங்கும் நேரத்தில் தொண்ணூறு சதவிகித வளர்ச்சியை அடையுமாம் நமது கூந்தல்.