1. பிருங்கராஜ் (கரிசிலாங்கண்ணி – Eclipta Alba)
முடியின் கருமையை காப்பாற்றும் கீரை மூலிகை பிருங்கராஜ். இதை பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத தைலங்களில் பயன்படுத்தி வரப்படுகிறது.
2. வல்லாரை (மண்டூக பரணி – Centella Asiatica)
ஞாபகசக்தியை ஊக்குவிக்கும் இந்த மூலிகை, கூந்தல் தைலத்தில் தேங்காய் அல்லது நல்லெண்ணையுடன் தயாரிக்கப்படுகிறது. மன அமைதியையும், நல்ல தூக்கத்தை கொடுப்பது மட்டுமில்லாமல், மன அழுத்தம் (Stress) ஏற்படுவதை குறைக்கும். முடி ஆரோக்கியத்தை காப்பாற்றும்.
3. மருதோன்றி (Lawsonia Intermis) – ஹென்னா)
உடலையும், கேசக்கால்களையும் குளிர்ச்சியாக வைக்கிறது. இது தான் பெண்கள் உள்ளங்கை விரல்களில் ஆசையாக இட்டுக் கொள்ளும் மருதாணி – மெஹந்தி. நல்ல மணமுள்ளது மருதோன்றி.
4. தான்றிக்காய் (பஹீரா – TerminaliaBalerica)
முடிஉதிர்வதை தடுத்து நிறுத்துகிறது. முடிக்கால்களை பலப்படுத்தும்.
5. நெல்லிக்காய் (ஆம்லா – EmblicaOfficinalis)
வைட்டமின் ‘சி’ நிறைந்தது நெல்லிக்கனி. ஆயுளை அதிகப்படுத்துவதற்காக ஔவையாரிடம் அதியமான் கொடுத்தது நெல்லிக்கனி. உலர்ந்த நெல்லிக்கனியில் உள்ள டேனின் (Tannin) முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
6. மஞ்ஜிட்டி (மஞ்ஜிட்டி – Rubia Cordifolia)
மஞ்ஜிட்டியின் வேர், சரும நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகளில் இடம் பெறுகிறது. சருமமும், முடியும் இணைந்து வாழ்வதால், மஞ்ஜிட்டியால் முடியும் பயனடைகிறது. கூந்தலை ஆரோக்கியமாக வைக்க மஞ்ஜிட்டி உதவுகிறது.
7. பூவரசு (ThespesiaPopulnea) – டானிக். தலை மண்டையோட்டை நோய்களை குணப்படுத்தும்.
8. கருப்பு தாமர் (Cannarium Strictum) – முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
9. கோவைக்காய் (Coccina Inidica) – சருமத்தையும், மண்டை தோலையும் ஆரோக்கியமாக வைக்கும்.
10. புங்கு (கரஞ்சா – Pongamia Glabra) – தலை மண்டை தோல் தொற்று நோய்களையும் அரிப்பையும் கண்டிக்கும்.
11. கீழ்கண்ட மூலிகைகளின் வேர் இவற்றின் நறுமணத்திற்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் மற்றும் கிருமி, பூஞ்சனம், பாக்டீரியா தாக்குதலிருந்தும், தலை முடிகளை காப்பாற்றவும் ஆயுர்வேத தைலங்களில் சேர்க்கப்படுகின்றன. வெட்டிவேர் – (உஷிரா, கஸ் – Vetiveria Zizanides), கோரை (முஸ்தா, Cyperus rotundus), சீமைக்கிச்சடி கிழங்கு, ஜடமான்சி, ரோஜ இதழ்.
12. தவிர புதினா பூக்களும், கற்பூரமும், வாசனைக்காகவும், பொடுகு, பேனை ஒழிக்கவும் ஆயுர்வேத கூந்தல் தைலங்களில் பயன்படுகின்றன.
13. துளசி – கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும்.
கூந்தல் தைலங்கள்
இயந்திரங்களுக்கு உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய், கீரீஸ் (Grease) போடுவது போல, சருமத்திற்கும், முடிக்கும் எண்ணெய் தேவை. நம் நாட்டில் தலைக்கு தடவ தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் பயன்படுகிறது. கூந்தல் பிரச்சனைகள் ஏற்படாமல் வருமுன்காக்க ஆயுர்வேத மூலிகைகள் கலந்த தைலங்களை பயன்படுத்தினால், கூந்தல் மட்டுமல்ல – உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.