அரிசியினை குக்கர் மூலம் சமைப்பதற்கு முன்பு முன்பெல்லாம் ஈயப்பாத்திரம், மட்பாண்டங்களில் தான் சோறு பொங்குவார்கள். சோறு சமைத்து முடிக்கும்போது அதன் கஞ்சியை தனியாக ஒரு பாத்திரத்தில் வடித்து வைத்து தனியாக வைத்துக் கொள்வாகள். நமக்குத் தெரிந்து அதனை பசு மாட்டுக்கு உணவாக வழங்குவார்கள் அல்லது அதில் சிறிதளவு ருசிக்காக உப்புச் சேர்த்து ஓரு கோப்பை வேறு உணவு ஏதுமின்றி அருந்திவிடுவார்கள். இதனையும் தாண்டி மிச்சம் மீதி இருக்கும் வடிகஞ்சியை சருமம் மற்றும் கூந்தல் பளபளக்க பயன்படுத்துவார்கள்.
பொதுவாக நமது உடலுக்கு சோப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நாமே வீட்டுத் தயாரிப்பாக சொந்தமாக ஒரு குளியல் பவுடரை தயாரித்து, அதனுடன் தண்ணீர் கலந்து குளிர் காலங்களில் பயன்படுத்த நமது உடலில் சருமம் காய்ந்து கொள்ளும். குளிர் காலங்களில் தண்ணீருக்குப் பதிலாக வடிகஞ்சியை எடுத்துக் கொண்டு அதனுடன் மேற்கூறிய குளியல் பவுடரை கலந்து பூசுவதும் உண்டு. மேலும் நாம் பயன்படுத்தும் சீயக்காய்ப் பொடியையும், வடிகட்டிய கஞ்சித் தண்ணில் கலந்து தலைமுடிகளில் தேய்த்து அலசுவதுண்டு. இது தலை முடிக்குச் சிறந்த பளபளப்பைத் தரும்.
வடிகட்டிய கஞ்சியில் அதிக அளவு அமினோ அமிலம், வைட்டமின் பி, வைட்டமின் இ, மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் உள்ளன. வடிகட்டிய கஞ்சியினை நாம் வெளிப் பிரயோகமாகவும், உள்ளுக்குமாக பயன்படுத்தும் பொழுது நமக்கு பல பலன்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை நாம் இங்கு பாப்போம்.
சருமத்தை மிருதுவாக்குகிறது
சருமத்தின் மீது வடிகஞ்சியினை தொடர்ச்சியாக ஓரிரு மாதங்கள் பயன்படுத்தி வர தோல் மிருதுத்தன்மையும், பளபளப்பும் அடைகின்றன.
அக்னே சரும வியாதியை குணப்படுத்துகிறது
அக்னே என்ற சரும வியாதி பாக்டீரியா தொற்றுக்களினால் ஏற்படுகிறது. வடிகஞ்சியினை மேற்கண்ட பாதிப்பு அடைந்த தோல் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட தோல் அலர்ஜியும் குணமாகும். அக்னே சருமவியாதிக்கு புளிக்க வைத்த வடிகஞ்சியுடன் கடலை மாவு மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சளின் பொடி கலந்து முகத்தில் பூசிவர அக்னே குணமாகும்.
எக்சீமா சரும வியாதி குணமாகும்
வடிகஞ்சிக்கு சருமத்தின் பாதிப்புகளிலிருந்து குணப்படுத்தும் பண்பு அதிகமிருப்பதால் எக்சிமா, சோரியாசிஸ் போன்றவை குணப்படுத்தலாம். வடிகஞ்சியை குளியல் நீருடன் கலந்து நனைக்க வேண்டும். எசென்சியல் ஆயில் எனப்படும் எண்ணெய் ஒரு சில துளிகள் அதில் விட்டுக்கொள்ள கூடுதல் பலன் தரும்.
கூந்தல் பராமப்பில் உதவும் வடிகஞ்சி
இயற்கையான கூந்தல் பராமரிப்புக்கு வடிகஞ்சி மிகவும் பயன்படுகிறது. பழக்கமான குளியல் நீரில் வடிகஞ்சியை வடிகட்டி அத்துடன் ஒரு சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து குளித்து முடிக்கும் வேளையில் கூந்தலை அலச தலை முடியானது மிருதுவாக, பளபளப்பாக மாறும்.
பொடுகை நீக்கும் வடிகஞ்சி
புளிப்பாக்கப்பட்ட வடிகஞ்சியை நெல்லிக்காய்ப் பொடி மற்றும் தயிர் கலந்து தலைமுடியில் ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்த பொடுகுத் தொல்லை நீங்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படும் வடிகஞ்சி
புத்தம் புதிதாக வடிகட்டப்பட்ட அரிசி வடிகஞ்சியுடன் மஞ்சள் பொடி கலந்து அருந்துவதால் சீரணக் கோளாறு குணமாகிறது. அரிசி வடிகஞ்சியை நீங்கள் இரண்டு வகைகளில் தயாரிக்கலாம். நீங்கள் எந்த வகை அரிசியையும் பயன்படுத்தலாம். அரிசியை தண்ணிர் அதிக அளவு சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்த பின்பு கொதிக்க வைக்க வேண்டும். அரிசி சோறு பதத்திற்கு வெந்தவுடன் அத்தண்ணீரை வடிகட்டி நமக்கு கிடைப்பது தான் வடிகஞ்சியாகும். மேற்கூறிய வடிகஞ்சியை வழக்கமான அறை வெப்பநிலையில் புளிக்கும் வரை ஒருநாள் வைத்திருக்க புளித்த வடிகஞ்சி நமக்கு கிடைக்கும். சமையல் செய்யாமல் கிடைக்கும் வடிகஞ்சி என்பது மற்றொரு முறை சிறிதளவு மட்டும் தண்ணீர் எடுத்து அதில் அரிசியை ஒரு மணி நேரம் வரை ஊறப் போட்டுப் பின்னர் அத்தண்ணீரை வடிகட்டி எடுப்பது ஆகும். மேற்கூறிய வடிகட்டிய தண்ணீரையும் ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருந்து தோலை எடுத்தால் புளித்த வடிநீர் கிடைக்கும்.
வடிகஞ்சி பயன்படுத்தி நம்மை அழகுப்படுத்திக்கொள்ள ஒரு டிப்ஸ்
வடிகஞ்சி டோனர்
பேஸ் மாஸ்க், டோனர் என்று அழகுக் கலை நிபுணர்களால் கூறப்பபடும் இவை முக அழகை சீர்படுத்தி அதிகரித்துக் காண்பிக்க உதவும் மேக்-அப் பொருட்கள் ஆகும். டோனர் பொருளை நாம் வடிகஞ்சி மூலம் எளிதாக நாமே தயாரித்துப் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனை தயாரிக்க அதிக செலவும் ஆவதில்லை. நாம் அன்றாடம் மதிய உணவுக்கு அரிசி சாதம் தயாரிக்கும் பொழுது கிடைக்கும் பால் வண்ணத்தில் உள்ள வடிகஞ்சியைப் பயன்படுத்தி முகத்தை அழகு செய்து கொள்ளலாம்.
வடிகஞ்சி பேஸ் மாஸ்க்
முகத்தில் தோன்றும் அக்னே குணமாக வடிகஞ்சியானது சிறந்த பேஸ் மாஸ்க் ஆகும். பேஸ் மாஸ்க் தயாரிப்பதற்கு 4 தேக்கரண்டி மஞ்சள் பொடியும் 2 தேக்கரண்டி கடலை மாவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு போதுமான அளவு வடிகஞ்சி சேர்த்து நன்றாக கலந்து கொண்டு மேற்கூறிய கலவையை பேஸ் மாஸ் ஆக வாரத்திற்கு இரு முறை உபயோகப்படுத்தலாம்.
கூந்தலை பளபளப்பாக்க
முடியை அலசுவதற்கு புளித்த வடிகஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான அளவு அரிசி வடிகஞ்சி எடுத்துக் கொண்டு தண்ணீருடன் கலந்து நீர்த்துப் போகுமளவுக்கு செய்து கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சைச் சாறு ஓரு சொட்டு சேர்த்துக்கொண்டால் கூந்தலை அலசும் பொருள் ரெடியாகிவிட்டது. மேற்கூறிய கலவையை ஷாம்பூ போட்டு கூந்தலை அலசிய பின்பு குளியல் நீருடன் சேர்த்து அலசிக் கொள்ளலாம். முடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பொடுகை நீக்க உதவும் வடிகஞ்சி
ஹேர் மாஸ்க் ஆக உபயோகிக்க சிறிதளவு நெல்லிப் பவுடரை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதே அளவு வீட்டில் தயாரிக்கப்ட்ட கெட்டித் தயிரையும், புளித்த வடிகஞ்சியையும் சேர்த்து கலவையாக்கி முடியில் தேய்த்துக் கொள்ள தலைப்பொடுகை விரட்டிவிடும்.