பொதுவாகவே மனிதர்களின் அதிகாலையை உற்சாகமாக்கும் உற்சாக பானமாக மாறிவிட்டது டி, காபி எனும் தேநீர் வகைகள். இப்படி அதிகாலை தேநீர் பிரியர்கள் ஒருபுறமிருக்க, அன்றாடத்தில் ஐந்து அல்லது ஆறு டீ அல்லது காபி சாப்பிடும் தேநீர் பிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். வேலைப் பளுவோ அல்லது நான்கு பேர் சந்தித்தாலோ. . . தேநீர் குடிப்பது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது.
அப்படிப்பட்ட தேநீர் பிரியர்களாக நீங்களும் இருக்கலாம். இதோ . . இந்த செய்தி உங்களுக்குத்தான்.
தினமும் 3 கோப்பைக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு பக்கவாதம் போன்ற நோய்த் தாக்குதல் வரும் ஆபத்து மிகவும் குறைவு என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள டேவிட் ஜெப்பின் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராக இருக்கும் லினோர் அரப் இது தொடர்பாக ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்துள்ளார்.
குறிப்பிட்ட ரக செடியில் (Camellia Sinensis) இருந்து கிடைக்கும் தேயிலையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேநீரை தினமும் மூன்றுக்கும் அதிகமாக கோப்பை குடிப்பவர்களுக்கு பக்கவாதம் குறைவாக இருக்கிறது. இதற்கு காரணம் அந்த தேநீரில் Anti Oxidant epigallocatectin gallete) எனப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் தியானின் (Theanine) எனப்படும் அமினோ அமிலங்கள்தான். இவை ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக ஆரோக்கியமான உடல்நிலையும் பக்கவாதம் போன்ற நோய் தாக்குதல் வராமலும் பாதுகாக்கின்றன என்று பேராசிரியர் அரப் கூறியிருக்கிறார்.