உடலை உரமாக்கும் கடலை எண்ணெய்

Spread the love

நமது பத்திரிக்கைகளில் நமது உடலுக்கு அவசியமான சத்துக்கள் நாம் சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்களில் உள்ளவற்றை, ஒவ்வொரு எண்ணெய் வகைகளையும் கூறி வருகிறோம். இதற்கு முன்பு நாம் ஆலிவ் எண்ணெய், அவகேடா எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றைப் பற்றிக் கூறியிருந்தோம். இந்த இதழில் நாம் தெரிந்து கொள்ளப் போவது, கடலை எண்ணெய் ஆகும். உடலுக்குள் உள்ள உறுப்புகளுக்கு எவ்வளவு சத்துக்கள் அவசியமோ அதுபோக உடலின் மேல் பகுதியாக உள்ள நமது சருமத்திற்கும் ஊட்டச் சத்துக்கள் அவசியம். அவ்வகையில் சில வைட்டமின் எண்ணெய் வகைகளை பரிந்துரை செய்கிறோம். இம்மாத இதழில் வைட்டமின் இ எண்ணெய் மற்றும் அதன் பயன்களை நாம் அறிந்து கொள்வோம்.

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இதில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. சருமம் காக்கும் வைட்டமின் இ எண்ணெய்

பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் குறிப்பாக கிரீம்களில் வைட்டமின் இ எண்ணெய் சேர்த்திருப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவு இருப்பதன் காரணமாக சரும பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் இ எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தோல் சருமச் சுருக்கம், இளமையிலேயே வயதான தோற்றம் தரக் காரணமாக உள்ள பிரிராடிக்கல்களைத் தடுக்கிறது. வைட்டமின் இ எண்ணெயைப் பயன்படுத்தும் பொழுது தோல் சுருக்கம், தோல் வறட்சி, வெடிப்பு போன்றவை தடுக்கப்படுகிறது. சருமத்தின் பளபளப்பும் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. தழும்புகள், பருக்களை குணப்படுத்த உதவுகிறது. சூரியனின் கதிர்கள் பட்டு ஏற்படும் சரும எரிச்சல் பொதுவாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும். இவற்றை வைட்டமின் இ எண்ணெய் பயன்படுத்த சரும எரிச்சல் இன்றி ஒரு வித குளுமை உணர்வு கிட்டும். குழந்தை பிரசவித்த பெண்கள், அதன் பின்னர் வயிற்றுப் பகுதியில் சருமமானது, வரிவரியாக தழும்பு போன்ற நீட்சியாக காணப்படும். மேற்கூறிய  ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை பிரசவித்த பின்பும், பிரசவிப்பதற்கு முன்பும் அடிவயிறு, வயிற்றுப் பகுதியில் மசாஜ் எண்ணெயாக தடவித் தேய்த்து வர வயிற்றின் மேல் உள்ள மடிப்புத் தோற்றம் சிறிது சிறிதாக மறையும். சரும அரிப்பையும் குறைக்கும் ஆற்றல் வைட்டமின் இ எண்ணெயில் உள்ளது.

கண்களைச் சுற்றிக் காணப்படும் கருவளையத்தை குறைக்க வைட்டமின் இ எண்ணெயை சுற்றி தடவி வர வேண்டும். இமை முடிகளின் மீது எண்ணெயை சிறிது தடவி வர இமை முடியும் வளரும். சருமம் காய்ந்து போனது போல நீங்கள் உணர்கிறீர்களா? உங்கள் சருமம் எப்போதும் ஈரத்தன்மையுடனும் மிருதுவாக அமையவும், எக்ஸிமா, சோரியாஸில் போன்ற சரும நோயினால் சருமப் பாதிப்பு உள்ளவர்களும் வைட்டமின் இ எண்ணெயை பயன்படுத்தி வர பலன் கிடைக்கும். போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து விடும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்துக் குறைவதால் இரத்த சோகை நோய் ஏற்படும். மேலும், போலிக் அமிலம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்படுவதை தவிர்க்கிறது. இதில் மாங்கனீசு சத்து அதிகம் உள்ளது. மாவுச் சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீசு பெரும் பங்காற்றுகிறது. நிலக்கடலையில் உள்ள ரெஸ்வாரட்ரால் என்ற சத்து இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் பராமரிக்கிறது. கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக தருகிறது. மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.


Spread the love