முதுமையை தள்ளி போடும் நிலக்கடலை

Spread the love

வேர்கடலையில் இருக்க கூடிய அதிக அளவு புரத சத்து,  தசை வளர்ச்சிக்கும், உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை சீராக அமைக்க உதவுகிறது.

இதில் இருக்கும்  ரெஸ்வராடிரால் மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். வேர்க்கடலை, மூளை அதிர்ச்சியையும், விரைவாக முதுமை தோற்றம் வாராமையும் பாதுகாக்கும்.

இதில் நிறைந்திருக்க பாலி, மற்றும் மோனோ அன் சாச்சுரேட் கொழுப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடன்டும் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை  குறைக்கிறது.

நமக்கு தேவையான விட்டமின்கள், மற்றும் தாது உப்புகள் நிலக்கடலையில் அதிகமாக உள்ளது,  இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.  அதிக நார்சத்தும், ஆன்டி ஆக்சிடன்டும்,  மலச்சிக்கல்,  மற்றும் இரைப்பை புற்று நோயாளிக்கு நிலக்கடலை பலன் தரும்.

நிலக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

ஆயுர்வேதம்.காம்

Click to Buy Herb Products >>>


Spread the love