பீன்ஸ் சாலட்
தேவையான பொருட்கள்
இளசான பீன்ஸ் – 150 கிராம்
வெங்காயம் – 1
கொத்தமல்லி இலை – 4 டேபிள் ஸ்பூன்
முள்ளங்கி – 1
சீஸ் – 25 கிராம்
ஆரிகேனோ – 1/2 டீஸ்பூன்
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2
செய்முறை
தக்காளியை வட்டமாக நறுக்கி அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முள்ளங்கியை லேசாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸை 1 இன்ச் துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். சீஸை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பீன்ஸ், வெங்காயம், கொத்தமல்லி, முள்ளங்கி முதலியவற்றைப் போட்டு கலக்கவும். ஒரு பாட்டிலில் ஆரிகேனோ, வினிகர், ஆலிவ் ஆயில், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் குலுக்கி இதனை கலந்து வைத்துள்ள பீன்ஸ் சாலட்டில் ஊற்றி நன்றாகக் கிளறவும். மேலே சீஸை துருவிச் சேர்த்து பரிமாறவும்.
கேரட் ஆரஞ்சு சாலட்
தேவையான பொருட்கள்
கேரட் – 2
ஆரஞ்சு – 2
எலுமிச்சம் ஜுஸ் – 11/2 டீஸ்பூன்
சீனி – 1 டீஸ்பூன்
கிஸ்மிஸ் – 15
முந்திரி – 15
ஏலக்காய்ப்பொடி – 1 சிட்டிகை
ஆலிவ் ஆயில் – 11/2 டீஸ்பூன்
செய்முறை
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஆரஞ்சின் தோலை உரித்து விதைகளை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். நறுக்கும் பொழுது ஆரஞ்சிலிருந்து ஜுஸ் வந்தால் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸிங் பௌலில் எலுமிச்சம் ஜுஸ், சீனி, ஆலிவ் ஆயில் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு ஜுஸ் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கேரட் துருவல், நறுக்கி வைத்துள்ள ஆரஞ்சு, கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
டொமேட்டோ குடமிளகாய் சாலட்
தேவையான பொருட்கள்
சிவப்பு குடமிளகாய் – 3
தக்காளி பெரியது – 4
கொத்தமல்லி இலை – 1 கப்
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
குடமிளகாய், தக்காளி முதலியவற்றை ஒரே மாதிரியாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயின் விதைகளை எடுத்து விடவும். கொத்தமல்லியை சுத்தம் செய்து இலையாக 1 கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயை மைக்ரோ வேவ் அவனில் 3 நிமிடம் Medium Temperature – ல் வைக்கவும். அதனுடன் தக்காளியையும் வைத்து மேலும் 2 நிமிடம் வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து அதனுடன் பூண்டு, கொத்தமல்லி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
கீரின் பீஸ் சாலட்
தேவையான பொருட்கள்
ஃப்ரஷ் பச்சைபட்டாணி – 1/4 கிலோ
தக்காளி – 2
பேசில் இலைகள் – 3 டீஸ்பூன்
சீஸ் – 50 கிராம்
ட்ரஸ்ஸிங்
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 1 பல்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை
தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியின் தோலை உரித்து விதைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து பட்டாணி சூடாக இருக்கும் பொழுதே அதனுடன் சேர்த்துக் கலக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பேசில் இலைகளை சாலடுடன் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சீஸை துருவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.
பனீர் ஃப்ரூட் சாலட்
தேவையான பொருட்கள்
பனீர் – 250 கிராம்
கறுப்பு திராட்சை – 1 கப்
பச்சை திராட்சை – 1 கப்
மாம்பழம் – 1
செர்ரி தக்காளி – 1/2 கப்
பைனாப்பிள் – 4 ஸ்லைஸ்
எள் – 2 டேபிள் ஸ்பூன்
லெட்டூஸ் – 6 இலைகள்
தேன் – 1/4 கப்
எலுமிச்சம் ஜுஸ் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகு பொடி – 1 டீஸ்பூன்
கடுகு பொடி – 1/4 டீஸ்பூன்
செய்முறை
பனீரை 1/2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனுடன் எலுமிச்சம் ஜுஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊற வைக்கவும். மாம்பழத்தின் தோலை சீவி 1/2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பைனாப்பிளையும் 1/2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். லெட்டூஸ் இலைகளை தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்படி செய்வதால் இலைகள் ஃப்ரஷ்ஷாக இருக்கும். நறுக்கி வைத்துள்ள பழங்களை ஒன்றாகக் கலந்து அதன் மேல் தேனை ஊற்றி கடுகு பொடியையும் தூவி நன்கு கிளறவும். பின்னர் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பரிமாறும் சமயம் தண்ணீரில் உள்ள லெட்டூஸ் இலைகளை எடுத்து ஒரு தட்டில் பரப்பவும். ஃப்ரிட்ஜில் குளிர வைத்துள்ள பழங்களை எடுத்து அதனுடன் ஊற வைத்த பனீரைச் சேர்த்துக் கிளறி இலைகளின் நடுவில் வைக்கவும். இலைகளின் விளிம்பில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, செர்ரி தக்காளி முதலியவைகளை மாற்றி மாற்றி அடுக்கவும். சாலட்டின் மேல் வறுத்த எள்ளைத் தூவி பரிமாறவும்.
ஹவாயின் சாலட்
தேவையான பொருட்கள்
பனீர் – 250 கிராம்
ஆரஞ்சு – 2
வெள்ளரிக்காய் – 1 (அ) 2
ஆப்பிள் – 1
பைனாப்பிள் ஸ்லைஸ் – 6
லெட்டூஸ் – 1
ட்ரஸ்ஸிங்
வினிகர் – 1/4 கப்
ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்
சீனி – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
கடுகுப்பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகு பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை
பனீரை துருவிக் கொள்ளவும். லெட்டூஸ்ஸை தண்ணீரில் மூழ்குமாறு வைக்கவும். ஆரஞ்சுப் பழத்தின் தோலை உரித்து விட்டு அதை இரண்டிரண்டாக கட் பண்ணவும். வெள்ளரிக்காயின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிளை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பைனாப்பிளில் மூன்று ஸ்லைஸ் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மீதியுள்ள பைனாப்பிளை அலங்கரிக்க இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் உள்ள லெட்டூஸை எடுத்து நன்கு துடைத்துக் கொள்ளவும். பின்னர் இலை இலையாக எடுத்து பரிமாறும் தட்டுகளில் பரப்பவும். இதன் மேல் முதலில் வெள்ளரிக்காய் துண்டுகளை பரப்பவும். அதன் மேல் பைனாப்பிளையும், ஆரஞ்சையும் பரப்பவும். கடைசியாக துருவிய பனீரை தூவி ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒரு பாட்டிலில் போட்டு மூடி நன்கு குலுக்கவும். பரிமாறும் சமயம் சாலட்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அதன் மேல் செய்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங்கை தெளித்து பாதி பாதியாக நறுக்கி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
பீட்ரூட் சாலட்
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 400 கிராம்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
வினிகர் – 3/4 டீஸ்பூன்
பூண்டு பல் – 2
ஸ்பிரிங் ஆனியன் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு 25 முதல் 30 நிமிடம் வரை வேக விடவும். வெந்தவுடன் பீட்ரூட்டை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதே நேரம் ஆலிவ் ஆயில், வினிகர், பொடியாக நறுக்கிய பூண்டு, ஸ்பிரிங் ஆனியன், உப்பு முதலியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி, வேக வைத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டில் ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்.
சைனீஸ் டொமேட்டோ சாலட்
தேவையான பொருட்கள்
பெரிய தக்காளி – 1
ட்ரஸ்ஸிங்
பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் – 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன்
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சீனி – 1 சிட்டிகை
செய்முறை
ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருள்களையெல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ளவும். தக்காளியை வட்ட வட்ட ஸ்லைசுகளாக நறுக்கி ஒரு தட்டில் அடுக்கி அதன் மேல் செய்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங்கை தூவி பரிமாறவும்.
ஹாட் அண்ட் சோர் வெஜிடபிள் சாலட்
தேவையான பொருட்கள்
கேரட் – 2
ப்ரக்கோலி – 1
சிவப்பு குடமிளகாய் – 1
மஞ்சள் குடமிளகாய் – 1
பேபி கார்ன் – 4
இஞ்சி – 1 இன்ச்
வெங்காயம் – 1
சில்லி ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
ட்ரஸ்ஸிங்
கடலை எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ஆயில் – 1 டீஸ்பூன்
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் ஜுஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
கேரட், ப்ரக்கோலி, சிவப்பு குடமிளகாய், வெங்காயம், மஞ்சள் குடமிளகாய், பேபி கார்ன் முதலியவற்றை ஒரே அளவுள்ள நீளமான துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். ஒரு கடாயில் கடலை எண்ணெய்யை சுட வைத்து அதில் இஞ்சி, வெங்காயம் போட்டு வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு லேசாக வதக்கவும். பின்னர் ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்தள்ள பொருள்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து லேசாக வதக்கியுள்ள காய்களின் மேல் ஊற்றிக் கலந்து பரிமாறவும்.
உணவு நலம் செப்டம்பர் 2011
பச்சை காய்கறிகளை எளிமையாக உண்ண, பீன்ஸ் சாலட், பீன்ஸ் சாலட் செய்முறை, கேரட் ஆரஞ்சு சாலட், கேரட் ஆரஞ்சு சாலட் செய்முறை,
கீரின் பீஸ் சாலட், கீரின் பீஸ் சாலட் செய்முறை,