அவரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்த பச்சை பட்டாணியில் தான், காய்கறிகளியிலேயே அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது இதில் தான். பச்சை பட்டாணியை நாம் சமைத்து தான் சாப்பிட வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் நலம் பெற பச்சை பட்டாணி மிகச்சிறந்த உணவு.
100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள் எவ்வளவு?
103 கலோரி பச்சை பட்டாணியில் உள்ளது. இது உலர்ந்த பட்டாணியில் 365 கலோரி ஆற்றல் உள்ளது. பச்சை பட்டாணியில் கொழுப்பு சத்து 2.1 மி.கி, கால்சியம் 0.96 மி.கி, பாஸ்பரஸ் 1.9 மி.கி மற்றும் மாவுச்சத்து, புரதம், இரும்சத்து, வைட்டமின் ஏ, சி, அதிகம் உள்ளது.
சாம்பார், சன்னா மற்றும் குழம்பில் வெந்த பட்டாணியின் சுவை சிறுவர்களுக்கு மட்டுமல்ல எல்லாவயதினருக்கும் பிடித்தமானது. குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் மாலை நேரத்தில் உணவுகளை கொடுத்து வழங்க வேண்டும். பச்சை பட்டாணியில் சுண்டல் செய்து, குருமாவில் சேர்த்து அல்லது பச்சையாக ஆவியில் வேக வைத்து சாப்பிட மிகச்சுவையாக இருக்கும்.
பச்சை பட்டாணி தரும் உடல் ஆரோக்கியம்:
பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் ஏ, கண்பார்வையை கூர்மையாக்குகிறது. வைட்டமின் சி, உடல் வலி, தலைவலியை போக்குகிறது. எலும்பு பற்களுக்கு வலிமை தருகிறது. வைட்டமின் பி, உடலில் உள்ளுறுப்புகளுக்கு வலிமையை தந்து சீராக செயப்பட உதவுகிறது. நரம்பு தளர்ச்சி, பசியின்மை, உடல் பலவீனம், தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு குணம் பெற உதவுகிறது. அசைவ உணவுகள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், முதுமை தோற்றம் மிக விரைவில் ஏற்பட்டுவிடும். ஆனால், பச்சை பட்டாணியை சாப்பிட்டு வரும்போது எப்பொழுதும் இளமையான தோற்றம், உடல் வலிமை மற்றும் சுறுசுறுப்பை பெறலாம்.