இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, மற்ற நாடுகளில் அறிமுகமான பாசிபயிரில், அதிக அளவபுரதசத்தும், குறைந்த அளவு கொழுப்பு சத்தும் அடங்கியிருக்கின்றது. இதனால் ஓபிசிட்டி மாறும்கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தாராளமாக, பாசி பயிறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது தமிழ்நாட்டில் பொங்கல், பாயாசம், கஞ்சி போன்ற சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் அடங்கியிருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட், இரும்புசத்து, நார்சத்து,தாதுப்பொருள் உடலிற்கு பல ஆரோக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. வயிற்றுகோளாறுகளால் அவதிபடுகிறவர்கள் பாசி பயிரை வேக வைத்து தண்ணீரை, சூப் மாதிரி குடித்து வரவயிற்று கோளாறு நீங்கும். பாசி பயிரை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் கொலஸ்ட்ரால்அளவு குறைவதோடு இரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். இதில் இருக்க கூடிய நீர்சத்து உடல்வளர்ச்சியை நீக்கும். பண்டைய காலங்களில் இரும்புசத்திற்காக அடிக்கடி பாசி பயிரை வேக வைத்துஅந்த தண்ணீரோடு சேர்த்து சாப்பிடுவார்கள். இது இரும்புசத்தை வழங்குவதோடு இரத்த சோகைஏற்படுவதையும் தடுக்கும்.
பாசி பயிரில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதினால் உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள்அதற்கான டயட்டில் பாசிபயிரை சேர்ப்பதோடு, உடல் பருமனை குறைத்து, நல்ல உடல் கட்டைகொடுக்கின்றது. இந்த உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி எடுத்து வருவது நல்ல பலன் கிடைக்கும்.வைரஸ் காய்ச்சலான மலேரியா, டைபாய்டு, காலரா போன்ற வியாதிகளுக்கு பாசிப்பயிறு நல்லமருந்து பொருளாக இருக்கின்றது. இது உடலிற்கு ஊட்டம் அளித்து காய்ச்சலால் ஏற்படும் மன சோர்வு,உடல் சோர்வு ஆகியவற்றை குணப்படுத்தும்.
பித்தம், மலசிக்கல் போன்ற பிரட்சனை நீங்க பாசிபயிறு,பொங்கல் சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளி கீரையோடு பாசிபயிரையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம்,ஆசன வாய் கடுப்பு, மூலம் போன்ற கொடிய வியாதிகள் படிப்படியாக குணமாகும். அதுவே பாசிபயிரைவல்லாரை கீரையோடு சமைத்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நினைவு திறன் மேம்படவும் செய்யும்.