பொதுவாக நாம் சாப்பிடும்போது, தெரியாமல் பச்சை மிளகாயை கடித்து விட்டால் ஆ…. என கூற்றலிட்டு அலப்பறை பண்ணுவோம்… ஆனால் சில பேர் உணவில் காரம் குறைவாக இருந்தால், பச்சை மிளகாயை வெங்காயம் மாதிரி கடித்து சாப்பிடுவார்கள். கார சுவைக்காக உபயோகப்படுத்தும் இந்த பச்சைமிளகாயில், அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் மினெரல்ஸ் அடங்கியிருக்கிறது. எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு பச்சை மிளகாய் மிகவும் உதவியாக இருக்கும்.
இதில் கலோரிகள் குறைவு, அதனால் உடலில் உள்ள கொழுப்புகளை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால் வாயு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.இயற்கை மருத்துவத்தில், பச்சை மிளகாய் சருமத்திற்க்கு பரிந்துரைக்க படுகிறது. இதில் அதிகபடியான வைட்டமின் சி இருப்பதினால், அது சருமம் பொலிவு பெற உதவுகிறது.
புகை பழக்கம் உள்ளவர்கள், தினசரி உணவில் பச்சை மிளகாயை சேர்ப்பது மிகவும் நல்லது. இதனால் புற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகபட்சம் குறையும். குறிப்பாக ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் உருவாகாமல் தடுக்கும்.பச்சை மிளகாயில் இருக்கும் b6 b9 போன்ற உயர் வகை விட்டமின்ஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நமது உடலுக்கு ஆன்டிஆக்சிடண்டா செயல்பட்டு, இரத்தத்தில் பாக்டீரியா உருவாகாமல் தடுக்க உதவுகிறது. இதனால் உடல் உறுப்புகள் பாதிப்படையாமல், இதயம் மற்றும் நுரையீரல் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கிறது.பச்சை மிளகாய் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம்.
இது வீக்கம், கீல்வாதம், மற்றும் முடக்கு வாதம் போன்ற எலும்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. பச்சை மிளகாயில் இருக்கும் உயர் வகை கால்சியம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் மிகவும் நல்லது. அதுமட்டும் இல்லாமல், புதிய இரத்தம் உற்பத்தியாகவும் உதவுகிறது.பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சாய்சின், எதிர்மறை சிந்தனைகளை போக்கி மனரீதியாக, நமது மைண்ட் பாஸிட்டிவாக மாற்றி, நல்ல எண்ணங்களை உருவாக்குகிறது என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து பச்சை மிளகாயை சாப்பிட்டு வருவதால் அதில் இருக்கும் ஆண்டி- பாக்டீரியல் பண்புகள் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றிலிருந்து தப்பிக்க உதவும்.குறிப்பாக பச்சை மிளகாயில் இருக்கும் வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. அதோடு வயதாகும் போது ஏற்படும் பார்வை குறைபாட்டையும் சீராக்கி, எந்த வயதிலும் சீரான கண்பார்வையை வழங்கும்.