கீரின் சில்லீஸ் இன் வினிகர்

Spread the love

தேவையான பொருட்கள்

பச்சைமிளகாய்       –     10

வெள்ளை வினிகர்   –     3/4 கப்

உப்பு                 –     தேவையான அளவு

சீனி                  –     1 டீஸ்பூன்

சோயாசாஸ்         –     5 முதல் 7 சொட்டு

செய்முறை

பச்சை மிளகாயை வட்டமாக பொடியாக நறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கொதிநிலை வரும் வரை கொதிக்க விடவும். ஆறியவுடன் பாட்டிலில் ஊற்றி தேவைப்படும் போது பரிமாறவும்.

ஆனியன் இன் வினிகர்

தேவையான பொருட்கள்

சிறிய வெங்காயம்    –     15

வெள்ளை வினிகர்   –     1/4 கப்

அஜினமோட்டோ     –     1 சிட்டிகை

சீனி                  –     1 சிட்டிகை

உப்பு                 –     1/4 டீஸ்பூன்

செய்முறை

சிறிய வெங்காயத்தின் தோலை உரித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஊறியவுடன் உபயோகிக்கவும்.

ஸ்பைசி சில்லி ஆயில்

தேவையான பொருட்கள்

ஸ்பிரிங் ஆனியன்   –     1

இஞ்சி                –     1 இன்ச்

பூண்டு                –     10 பல்

சிவப்பு மிளகாய்      –     2

எண்ணெய்            –     1 கப்

மிளகாய் பொடி       –     1 டீஸ்பூன்

மிளகுத்தூள்          –     1/2 டீஸ்பூன்

செய்முறை

சிவப்பு மிளகாயை உடைத்துக் கொள்ளவும். ஸ்பிரிங் ஆனியன், இஞ்சி, பூண்டு முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைத் தவிர எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். அடுப்பில் எண்ணெயை சூடாக்கி இறக்கவும். அதில் கலந்து வைத்துள்ள பொருள்களைப் போட்டு நன்றாகக் கிளறி ஒரு மூடியைப் போட்டு மூடி 3 முதல் 4 மணி நேரம் வரை விடவும். பின்னர் ஒரு வடிகட்டியில் வடிகட்டி அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி தேவைப்படும் போது உபயோகிக்கவும்.

வொர்செஸ்டர்ஷையர் சாஸ்

தேவையான பொருட்கள்

வினிகர்        –     1 கப்

கிராம்பு         –     5

இஞ்சி          –     1 இன்ச்

பூண்டு          –     4 பல்

மிளகாய் பொடி –     1/2 டீஸ்பூன்

மிளகு பொடி    –     1/4 டீஸ்பூன்

புளி பேஸ்ட்    –     1 டேபிள் ஸ்பூன்

சீனி            –     3/4 கப்

செய்முறை

இஞ்சி, பூண்டு, கிராம்பு முதலியவற்றை வினிகர் விட்டு நைசாக அரைக்கவும். 3/4 கப் சீனியை வாணலியில் போட்டுச் சிறிது பழுப்பாகும் வரை வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் வினிகரை சீனியுடன் சேர்த்து மிளகு பொடி, மிளகாய்ப் பொடி மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது, புளிபேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

உணவு நலம் நவம்பர் 2011

ஸ்டார் ஓட்டல் சமையல்

கீரின் சில்லீஸ் இன் வினிகர், கீரின் சில்லீஸ் இன் வினிகர் செய்முறை,

ஆனியன் இன் வினிகர், ஆனியன் இன் வினிகர் செய்முறை, ஸ்பைசி சில்லி ஆயில், ஸ்பைசி சில்லி ஆயில் செய்முறை, வொர்செஸ்டர்ஷையர் சாஸ்,

வொர்செஸ்டர்ஷையர் சாஸ் செய்முறை,


Spread the love