கவுட் கணுக்கால் மூட்டுவாதம்

Spread the love

மனிதனின் உடலில் மூட்டுகளின் இயக்கம் காரணத்தினால் தான் மனிதனால் ஓட, ஆட, குதிக்க, பளுவைத் தூக்க, இறக்க என்று எண்ணற்றப் பணிகளைச் செய்ய முடிகிறது. மூட்டுகள் மனிதனின் பல வித உறுப்புகளில் உள்ளன. இரண்டு எலும்புகள் சந்திக்கும் ஒவ்வொரு இடத்திலும் மூட்டு ஒன்று உண்டு. உடம்பில் உள்ள எலும்புகளின் இணைப்பு மூட்டுகளால் மட்டுமே சாத்தியமாகிறது.

மூட்டுகளை சுற்றி தடிமனான தசை போன்ற பகுதிகள் மூடு நாண்கள் எனப்படுகின்றன. மூட்டைச் சுற்றுப் பாதுகாக்க மெல்லிய சவ்வு போன்ற அமைப்பு உள்ளது. இந்த சவ்வின் உட்பகுதி சுவர், மெல்லிய, நீர் போன்ற திரவத்தைச் சுரக்கும். இது மூட்டுகள் உருவாகும் இடத்தில், மூட்டுகளை அசைக்க கிரீஸ் போல பயன்படும் உராய்வைத் தடுக்கவும் பயன்படும். மூட்டுகளில் ஏற்படும் அழற்சி காரணமாக மூட்டு வாத நோய் தோன்றுகிறது.

நோய் அறிகுறிகள்

மூட்டுகளில் வலி, வேதனை, அசைக்க முடியாத படி பிடிப்பு, வீக்கம் தோன்றும் கை, கால்களில் உள்ள சிறு மூட்டுகளில் இந்த வலி ஏற்படும். குறிப்பாக காலையில் படுக்கையை விட்டு எழும் பொழுது இந்த வலியும் வேதனையும் தோன்றும். கை, கால்களில் உள்ள சிறிய மூட்டுகளில், விரலின் ஆரம்பப் பகுதி சிறு மூட்டுகளை இது அதிக அளவு பாதிக்கும். மணிக்கட்டு மூட்டு, முழங்கால், முழங்கை, கணுக்கால் மூட்டுக்கள், கால் மூட்டுகளையும் பாதிக்கும் மூட்டுகளில் மோனோசோடியம் யூரேட் எனப்படும் உப்பு படிவதால் கவுட் எனக் கூறப்படும் மூட்டு நோய் பாதிப்பு ஏற்படும்.

கவுட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் கூடுதலாக இருக்கும் உடலில் ஏற்படும் பல்வேறு வளர்சிதை மாற்றங்களின் கோளாறுகளால், இவர்களுக்கு ப்யூரின் எனப்படும் வேதிப் பொருள் உடலில் அதிகமாக சிதைவுற்று அதிக அளவு யூரிக் அமிலம், இரத்தத்தில் கலந்து மூட்டுகளில் படிந்து விடுகிறது.

கவுட் கணுக்கால் மூட்டு ஏற்பட காரணங்கள்

1.            உடலில் அதிக அளவில் யூரிக் அமிலம் உற்பத்தியாவதால்.

2.            யூரிக் அமிலம் போத்மான அளவு சிறுநீரின் மூலம் வெளியேற்றப் படாததால் இந்த நோய் ஏற்படுகிறது.

உடனடியாக ஏற்படும் பாதிப்பில், உடலில் கால் பகுதியில் பெருவிரல் காலுடன் சேருமிடத்தில் உள்ள மூட்டில் வீக்கமும், வலியும் ஏற்படும். கவுட் நோயால் பாதிக்கப்பட்ட்வர்களில் 70 சதவீதத்தினரிடம் இந்தப் பாதிப்பு காணப்படும். கணுக்கால், முழங்கால் மூட்டு, கை, காலிகல் உள்ள சிறு மூட்டுகள், மணிக்கட்டு மூட்டு, முழங்கை மூட்டு ஆகியவையும் இந்த நோயின் பாதிப்புக்கு உட்படலாம்.

பாதிக்கப்பட்ட மூட்டுகள் வீங்கி, சிவந்து காணப்படும். அவற்றில் வலியும் வேதனையும் அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்ட மூட்டுகளைத் தொட்டால் அவை தொடும் பொழுது சூடாக இருக்கும். மேலும், தொட்டாலும் வலி அதிகமாகும். இவர்களுக்கு மூட்டு பாதிப்புடன், காய்ச்சலும் ஏற்படலாம். பசியின்மை, உடல் தளர்ச்சியும் ஏற்படலாம்.

ஒருமுறை இவ்வாறு மூட்டு வீக்கம் அடைந்து பாதிப்பு ஏற்பட்டு விட்டால், நோயாளிக்கு அடிக்கடி மூட்டுகளில் வலி, வேதனை, வீக்கம் ஏற்படுவதை உணர இயலும். இவ்வாறு அடிக்கடி மூட்டுப் பாதிப்பு ஏற்படும் பொழுது நோயாளியின் உடலில் நிரந்தரமாக அதிக அளவு யூரிக் அமிலம் உற்பத்தியாகி விடும். இதற்கு காரணம் உடலில் ப்யூரின் அமிலம் அதிக அளவு உற்பத்தியாவது, இரண்டாவதாக ப்யூரின் அதிக அளவு வளர்சிதை மாற்றத்திற்குள்ளாவது.

யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்க என்ன காரணம்?

உடலில் உள்ள பல்வேறு நொதிகளும் யூரிக் அமிலம் உடலில் உருவாக வினை புரிகின்றன. யூரிக் அமிலத்தின் உற்பத்திக்குப் பயன்படும் நொதிகளின் உற்பத்தி அதிகரிப்பதனால், உடலில் யூரிக் அமிலம் அதிகம் ஏற்படலாம்.

இரத்தப் புற்று நோய், சோரியாஸிஸ் நோயாளிகளின் போது இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் உற்பத்தியாகலாம். மேற்கூறிய நோய்களில் ப்யூரின் உடலில் அதிகளவு வளர்சிதை மாற்றமடையும். இதனால் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

யூரிக் அமிலம் ஒரு சிலருக்கு சரியான அளவில் உற்பத்தியானாலும், அவை முறையாக வெளியேற்றப்படுவதில்லை, இதன் காரணமாக இவர்களது உடலில் யூரிக் அமிலம் அதிகமாகி மூட்டுப் பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுநீரகம் சார்ந்த நோய்களினாலும், ஆஸ்பிரின் மேலும் சிறுநீரை வெளியேற்ற உதவும் மருந்துகளினாலும் மூட்டுப் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிக அளவு மது அருந்துதல், அதிக அளவு உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து வருதல், பட்டினி, வாந்தி, கல்லீரல் நோய், பிறவி நோய்கள் காரணமாக யூரிக் அமிலம் முறையாக வெளியேற்றப்படாது, மூட்டு பாதிப்பு ஏற்படுத்தி விடுகிறது.

கவுட் நோயாளிகளுக்கு ஏற்படும் வேறு சில பாதிப்புகள்

மூட்டுப் பாதிப்புடன் வேறு சில உடல் பாதிப்புகளும் ஏற்படுவதால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முயற்சிக்க வேண்டும்.. சிறுநீரில் யூரேட் கற்கள் அதிகமாக வெளிப்படுவதால், சிறுநீரகம் பாதிக்கப்படும். இக்கற்கள் சிறுநீர் கழிக்க உதவும் பாதையில் அடைப்புகளை ஏற்படுத்தி விடும். இதனால், சிறுநீர் தடை, அவற்றின் தேக்கம், இரத்த அழுத்தம் உயர்தல், சிறுநீரக உட்பகுதி அழற்சி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுதலும், சிறுநீரக பாதிப்பும் இந்நோயாளிகளில் 10 முதல் 15 சதவீதத்தினரிடம் ஏற்படுகிறது.

இரத்தப் பரிசோதனை மூலமும், நோயாளிகளின் மூட்டு நீரை உறிஞ்சி பரிசோதனை செய்து பார்த்தால், அந்த மூட்டு நீரில், மோனோ சோடியம் யூரேட் படிவங்கள் இருப்பதைக் காணலாம். நோயாளியின் மூட்டுகளை கதிரியக்கப் படம் எடுத்தும் தெரிந்து கொள்ளலாம். அதில் குழி விழுந்தது போல மூட்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் மூலம் உணரலாம். மேலும், மூட்டுகளில் படிந்துள்ள யூரேட் படிவங்களையும் கண்டு பிடிக்கலாம்.

கவுட் நோயாளிகள் உடல் பருமனாக உள்ளவர்கள் எனில், படிப்படியாக தங்களது உடல் எடையைக் குறைத்து வருதல் அவசியம். மது பானங்கலை அருந்துவதை குறைக்க வேண்டும். முடிந்தால் தவிர்க்க வேண்டும். தங்களது உணவில் ப்யூரின் மருந்து உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும். வாயுப் பதார்த்தங்களான கிழங்கு வகைகள், வாழைக்காய் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதம் வாத நோய்களின் வகைகளாக பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டு வாதம், நடுக்கு வாதம், ஒரு பக்க வாதம் என்று பல வகைப்படுத்தியுள்ளனர். கவுட் என்னும் கணுக்கால் மூட்டுவாதம் குணப்படுத்த வாத நாராயணன் மூலிகை பெரிதும் பயன்படுகிறது. மேற்கூறிய மூலிகையின் இலைகள் புளிய இலை போன்ற அமைப்பு உடையவை.

வாத நாராயணன் இலை ஒரு கைப்பிடி சாறுடன் சுக்கு 10 கிராம், மிளகு 5 கிராம், திப்பிலி 2 கிராம், பூண்டு 5 பல், வெண்கடுகு சேர்த்து அரைத்து, தினசரி காலை வேலை மட்டும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வர கணுக்கால் மூட்டு வாதம், முழங்கால் மூட்டுவாதம், வீக்கம், மூட்டு அழற்சி போன்றவை குணமாகும். அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாத மடக்கித் தைலம் என்று விற்கப்படும் தைலத்தை வாங்கி, தினசரி லு முதல் ஒரு தேக்கரண்டி அளவு கொடுத்து வர வாத நோய்களி குணமாகும்.

ஐங்கூட்டு எண்ணெய்த் தைலம்

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் ஒவ்வொன்றிலும் தலா 100 மி.லி. எடுத்து வாணலியில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலை வந்தவுடன், அதனுடன் எருக்கன் இலைகள் 5 ஒவ்வொன்றாக இட்டுப் பின் இறக்கி ஆறவைத்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய் தைலத்தினை மூட்டுகளின் மேலே வீக்கத்திற்குத் தடவ வேண்டும்.

தலையில் தேய்த்துக் குளிக்கவும் செய்யலாம். மூட்டுகளில் ஒற்றடம் தந்தால் வலி குறையும் இதற்கு புளிய இலை, ஊமத்தன் இலை, எருக்கு இலை, தழுதாழை இலை ஆகியவற்றை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நறுக்கித் தேங்காய்த் துருவல் ஒரு கைப்பிடி சேர்த்துக் கலந்து வாணலியில் இட்டு வதக்கித் துணியில் இட்டுப் பொட்டலாமாகக் கட்டி, அதனை வீக்கம் ஊள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர, வேதனையும் வீக்கமும் உள்ள மூட்டுகளில் எண்ணெய் தடவிய பின் செய்து வர பலன் கிட்டும்.

முடக்கறுத்தான் ரசம் அருந்துங்கள்ஞ் ஓடி விடும் கவுட்

முடக்கறுத்தான் இலை ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டு, நொச்சி இலை ஒரு கைப்பிடி அளவுடன் தோல் நீக்கிய சுக்கு 10 கிராம், பூண்டு 5 பல், பெருஞ்சீரகம் அல்லது சீரகம் 10 கிராம், பெருங்காயம் இரண்டு கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் ஒன்றிரண்டாக தட்டுப் போட்டுக் கொள்ளவும். அதனுடன் துவரம் பருப்பு 4 தேக்கரண்டி எடுத்து வறுத்துக் கொண்ட பின்னர், அதனுடன் சேர்த்து நீர்விட்டுக் கொதிக்க வைக்கவும். இது தான் முடக்கறுத்தான் ரசம் என்று அழைக்கப்படுகிறது. கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் காலை, மாலை என இரு வேளை அருந்தி வரலாம்.

கவுட் நோயாளிகளுக்குரிய உணவுகள்

உடலில் வாயுவைத் தோற்றுவிக்கும். கிழங்கு வகைகள், அதிக குளிர்ச்சி தரும் உணவுகள், போதை தரும் கள், சாராயம், மது வகைகள், அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியமாகும். மேற்கூறிய உணவு வகைகளை சாப்பிட நேர்ந்தால் செரிமானம் நன்றாக அமைவதற்காக இஞ்சி, பெருஞ்சீரகம். பூண்டு, புதினா, பெருங்காயம் போன்றவைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்லது.

எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். உப்பு, புளி, காரம் உணவில் சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். நாம் அருந்தும் குடிநீரானது சீரகம், இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின்னர் பயன்படுத்த வேண்டும். கீரை வகைகள், பழ வகைகள் அதிகளவு உணவாக எடுத்துக் கொள்ளவும். வெந்நீரில் தேன் கலந்து தினசரி இரவு தூங்கச் செல்லும் முன்பு அருந்தி வரலாம். மாதம் போகம் மாதம் இருமுறை என்பார்கள். தாம்பத்திய உறவில் கட்டுப்பாடும் இருத்தல் அவசியம்.


Spread the love