உடல் நலம் காக்க தவிர்க்க வேண்டிவை

Spread the love

அருகில் உள்ளவரையும் பாதிக்கும் என்பதால் எப்படியாவது புகை பிடிப்பதை நிறுத்துவது. மருந்துகளின் வேலையை தடுத்து விடும் என்பதால் மது வகைகளை நிறுத்துவது. “பீ” கூட மதுவகை தான். எப்போதாவது கூட மது வகைகளையும் உட்கொண்டு மருந்துகளையும் உட்கொண்டால் மருத்துவம் சரியாக வராது. டாக்டரிடம் இன்னும் சரியாகவில்லை என குறை கூற முடியாது. வெற்றிலை, புகையிலை, கோழிக்கறி மற்றும் உணவு வகைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுத்தினால் அதை வாழ்நாள் பூராவும் நீக்க வேண்டும். கடைசியாக பார்த்த நாளிலிருந்து 6 மாதத்திற்குள் வருவோர் மறுமுறை மாத்திரைச்சீட்டு கொண்டு வந்தால் தான் கார்டை கிளினிக்கில் விரைவாக எடுக்க வசதியாக இருப்பதோடு தாங்கள் முழுமையாக மருந்து வாங்கி உட்கொண்டீர்களா என்பது டாக்டருக்கு தெரியும் என்பதால் மறுமுறை மாத்திரை சீட்டின்றி டாக்டரை பார்க்க வரவேண்டாம். 6 மாதத்திற்கு மேல் வருவோர்க்கு கிளினிக்கில் பழைய கார்டு இருக்காது.

24 மணி நேரத்தில் உடம்பில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்படும் என்பதால் 6 மாதம் கழித்து வரும்போது புது கார்டு போட்டு பார்க்க வேண்டியதாயிருக்கும். டாக்டரின் கடமை “சிறந்த வைத்தியம்”. நோய் குணமாவதில் டாக்டருக்கு மேற்பட்ட ஓர் சக்தியும் உள்ளது. 10 சதவீதம் குணமாக்க முடியாத விஷயங்களும் உண்டு. அதை டாக்டர் தெளிவாக கூறிவிடுவார். 100 சதவீதம் உத்திரவாதம் கொடுக்க டாக்டர் கடவுள் அல்ல. அவ்வாறு உறுதி கொடுக்கும் போலி மருத்துவர்களிடம் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.

தவறான வாசகங்கள் கொண்ட விளம்பரங் களைப்பார்த்து வியாதியே இல்லாதவற்றிற்கெல்லாம் பயப்படாதீர்கள். பயத்தால் மனோவியாதி பெறுபவர்கள் அதிகம். உடல் ரீதியாக மருத்துவர் சரி செய்தாலும், மனோரீதியாக பயந்து கொண்டே இருந்தால் பின் மனோதத்துவ மருத்துவரையும் பார்க்க வேண்டும். கால இடைவெளியின்றி சரியாக மருந்துகளை உட்கொண்டால், மறுபடி புதிதாக மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டியதில்லை, கடைசி ஒரு முறை கூட பாக்கியில்லாமல் அவரவர்க்கு சொல்லும் கால கட்டம் வரை மருத்துவம் பார்த்தால் தான் பூரண குணம் கிடைக்கும்.

அடிக்கடி மருத்துவரை மாற்றாமல் ஒரே மருத்துவரிடம் மருத்துவம் பார்த்துக் கொண்டால் உடலுக்கும், மனதிற்கும் நல்லது. டாக்டர்களிடம் பொய் கூறினால் அது தங்கள் உடலுக்குத்தான் தீங்காக அமையும். டாக்டர் மாற்றுமுறை மருத்துவத்தில் பதிவு பெற்றிருப்பதால், நோய்களின் தன்மைக்கேற்ப மாற்று முறை மருந்துகளை பரிந்துரைப்பார்.

முக்கியமான வேண்டுகோள்

25 வருடங்களுக்கு மேல் இத்துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் டாக்டரிடம் மருத்துவம் பெற வந்த தங்கள் வரவு நல்வரவாகுக. 100 ல் 99 பேர் டாக்டர்களை நண்பர்களாக நினைக்கும் அதே நேரத்தில் ஒரே ஒருவர் மட்டும் சந்தேகத்துடனேயே டாக்டர்களை நினைக்கும் இந்த காலகட்டத்தில் அந்த ஒருவர் இங்கு மருத்துவம் பெற தேவையில்லை.

“பாலியல் பிரச்சனை” என்பது உடலால் மட்டுமல்ல, மனதாலும் ஏற்படுவது. நாலு சுவருக்குள் நடப்பதை நாம் நிர்ணயிக்க இயலாது. ஆண் அல்லது பெண் பொய் கூட கூறலாம். மனதளவில் பிடிக்கவில்லையெனில் “ஆண்மையில்லை” என கூறலாம். இதனால் ஆணுக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டு உண்மையிலேயே “ஆண்மையின்மை” ஏற்படலாம். இதே போல் இன்று இல்லையென் சொல்லப்படும் வீ.டி. வியாதிகள் சில காலம் கழித்து கூட வர வாய்ப்புள்ளது. எனவே இங்கு எதற்கும் எவ்விதமான “சர்டிபிகேட்களும்” கொடுக்கப்படமாட்டாது. இதற்கு சம்மதிப்போர் மட்டும் மருத்துவம் பெறவும்.

டாக்டரின் துறை சம்பந்தமில்லாத நோய்கள் எனின் இன்னாரிடம் அல்லது தங்களுக்கு தெரிந்த இவ்வகையான சிறப்பு வல்லுனரிடம் பார்த்துக் கொள்ளுங்கள் என டாக்டர் தெளிவாக கூறிவிடுவார். தாங்கள் டாக்டர் அறிவுரைப்படி மருந்துகள் கால இடைவெளியின்றி எடுத்துக் கொள்வதை பொறுத்தே தங்களுக்கு பிரச்சனை தீரும்.

நூறில் ஒருவர் விதண்டாவாத பேர்வழி. அவருக்கு என்ன சொன்னாலும் புரியாது. அவரைப் போன்றோர் இங்கு மருத்துவம் பெற தேவையில்லை. 30 வருடங்களுக்கு மேல் எண்ணற்றோர் பயனடைந்துள்ளனர். அவர்களை போல் தாங்களும் பயனடைய வாழ்த்துக்கள்.


Spread the love