நல்ல கொலஸ்ட்ரால் எது?

Spread the love

அண்மைக் காலமாக மக்கள் கூடுகின்ற விழாக்களில் அடிக்கடி நம் காதில் விழுகின்ற வார்த்தை கொலஸ்ட்ரால் என்பது தான். அவ்வளவு பிரபலமாகப் பேசப்படும் அந்தக் கொலஸ்ட்ரால் என்பது தான் என்ன?

கொலஸ்ட்ரால் என்னும் மெழுகு போன்ற பொருள் நம் உடலில் உற்பத்தியாகின்ற ஒன்று தான். உருப் பெருக்கியில் வைத்துப் பார்த்தால் நீண்ட, கூரான ஊசி போல் படிக (Crystal) உருவில் காணப்படுகிறது. கல்லீரலினால் உற்பத்தி செய்யப்படுகின்ற இப்பொருள் குடலினுள் சென்ற பின்னர் இரத்தத்திலுள்ள பிற கொழுப்புப் பொருள்களுடன் சேர்கிறது.

இரத்த நாளங்களில் இரத்தமானது அதற்குரிய அழுத்தத்தோடு பாய்ந்து பயணிக்கின்ற போது சிறு சிறு துகள்களாக இப்பொருள்கள் இரத்த நாளங்களின் சுவர்களுக்குள் சென்று தங்குகின்றன. இவை பின்னர் கெட்டிப்பட்டு இரத்தக் குழாய்களில் கூர்மையான ஊசி போன்ற சிறு சிறு படிகங்களாகின்றன(Crystals). இதயத்தில் தமனித் தடிப்பு (Arteriosclerosis) என்னும் நோய் ஏற்படுவதற்கு கொழுப்பு இரத்தக் குழல்களில் படிவது தான் காரணம். இதில் 70 சதவிகிதம் கொலஸ்ட்ரால் ஆகும். இது கனத்துக் கெட்டிப்படும் போது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு அஞ்ஜைனா (Angina) என்னும் இதய நெறிப்பும் வலியும் ஏற்படுகிறது.

இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு பெரும்பாலும் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகிறது. அன்றியும் இது உண்ணும் உணவையும் கல்லீரல் பித்த நீராக வெளியேற்றும் தகவைப் (Equilibriuim) பொறுத்து அமைகிறது. கொழுப்பானது கொலஸ்ட்ராலுடனும் உணவுப் புரதங்களுடனும் சேர்ந்து Lipoproteions என்னும் கொழுப்புப் புரதங்களை உண்டாக்குகின்றன. இக்கொழுப்புப் புரதங்கள் இரண்டு வகைப்படுகின்றன. உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம் (HDL) High Density Lipoprotein தாழ் அடர்த்தி கொழுப்புப் புரதம் (LDL) Low Density Lipoprotein.

LDL எனப்படும் தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டின் கொலஸ்ட்ராலை உடற் திசுக்களுக்கு எடுத்துச் சென்று அங்கு பயன்பட செய்கிறது. HDL எனப்படும் உயர் அடர்த்தி லிப்போ புரோட்டின், பயன்படுத்தப்பட்டு எஞ்சிய கொலஸ்ட்ராலைக் கல்லீரலுக்கு எடுத்து செல்ல. அங்கிருந்து அது வெளியேற்றப்படுகிறது. தேவைக்கு அதிகமான கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுவதால் (HDL) அது நல்ல லிப்போ புரோட்டீன் என்று பெயர் பெறுகிறது.

கொழுப்புகள் செறிவுற்ற கொழுப்புகள் (Saturated Fats) எனவும் (Unsaturated Fats) செறிவுறாக் கொழுப்புகள் எனவும் இரு வகைப்படுகின்றன. செறிவுற்ற கொழுப்புகளே கொலஸ்ட்ரால் அளவை உயர்த்துக்கின்றன. நெய், பாலாடை, (Cheese) வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவைகள் செறிவுற்ற கொழுப்புகளாகும். எனவே இவை போன்ற கொலஸ்ட்ரால் அளவை உயர்த்துகின்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

PUFA என்னும் பல்வகை செறிவுறா அமிலங்கள்

Poly unsaturated fat acids எனப்படும் செறிவுறா அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அவை உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கு உதவுகின்றன. எனவே நம்முடைய தினசரி உணவில் எவ்வளவு கொழுப்புணவு உட்கொள்கிறோம் என்பதை விட எவ்வகையான கொழுப்பு உட்கொள்கிறோம் என்பதுவே முக்கியமானது. PUFA நிறைந்த உணவுகள் பித்த நீர் உப்புக்களாக மாறி உணவில் எளிதாகக் கலந்து கலந்து பயன்பட்டபின் எஞ்சிய கொலஸ்ட்ராலாக வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படாமல் கொலஸ்ட்ரால் உடலில் தங்கும் போது இரத்த நாளங்கள் கெட்டிப் பட்டுத் தடித்துப் போகின்றன. உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உண்டாக இதுவே காரணமாக அமையும்.

To buy Herbal Products>>>


Spread the love