அடுத்த உலக அதிசயமாக மாறிகிட்டு வர்ற “GOLDEN BRIDGE OF VEITNAM”

Spread the love

நிறைய பாலங்களை நாம் பார்த்திருப்போம்,இந்த அளவிற்கு நம்மை பிரமிக்க வைக்கும் பாலத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்.இந்த பாலங்கள் வியட்நாமில் உள்ளது, இந்த பாலங்களின் பெயர் “CAU-VANG BRIDGE”. இந்தபாலத்தை மக்கள் அனைவரும் “GOLDEN BRIDGE” என்று அழைக்கின்றனர். இந்த பாலத்தின்புகைப்படம், VIDEOS சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகின்றது.


அப்படி இந்த பாலத்தில்என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? இந்த பாலத்தை தாங்கி பிடித்த மாதிரி இரண்டுபிரமாண்டமான கையை உருவாக்கியுள்ளனர். அதை பார்ப்பதற்கு என்னமோ, கடவுளே பாலத்தை தாங்கிபிடித்த மாதிரி ஒரு உணர்வு வருகின்றதாம். கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தபாலத்தை PEDESTRIAN BRIDGE என கூறுகின்றனர்.

அதாவது இந்த பாலத்தில் நடந்து தான்போக முடியும். 15௦ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டிருக்கும் இந்த GOLDEN BRIDGE.
ஜூன் 2018-ல் தான் இந்த பாலத்தை பொது மக்கள் பார்வைக்கு திறந்துள்ளனர்.இந்த பாலத்தை கட்டி முடிக்க ஒரு வருடம் ஆகியுள்ளதாம். இந்த பாலம் இவ்வளவு பிரபலமாகும்என்று இந்த பாலத்தை  வடிவமைத்த ARCHITECTஎதிர்பார்க்கவே இல்லை என்று கூறுகின்றார். இந்த பாலத்தின் இரண்டு பக்கத்திலும்அழகான பூக்கள் தோட்டம் வைத்து இன்னும் அழகாக்கியுள்ளனர். இந்த பாலத்தில் சிறிது தூரம்நடந்துபோனால் ஏதோ வானத்துடன் சேர்ந்த பாலமும் உள்ளது போன்று தோன்றுகிறது என்று சுற்றுலாபயணிகள் சொல்வதாக கூறுகின்றனர். 


இந்த GOLDEN BRIDGE-அ வட்ட வடிவத்தில் கட்டி உள்ளனர்.ஆனால் இந்த பாலத்தை தாங்கி பிடிப்பதற்கு கை இரண்டு மட்டும் தான் உள்ளது. பாலத்தின்பக்கத்திலேயே ஒரு அழகான RESORT-ம் இருக்கிறது. இந்த GOLDEN BRIDGE-க்கு வரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றதாம்.


Spread the love