ஆட்டுப்பாலில் என்னென்ன சத்துக்கள் உள்ளது? ஆட்டுப்பால் குடிப்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் நெருங்காது? ஆட்டுப்பால் ஆண்மை பலத்திற்கு நல்ல மருந்து என்று கூறுவது உண்மையா! ஆட்டுப்பாலின் மருத்துவ பலன்களை விரிவாக தாருங்கள்?
ஆட்டுப்பாலில் உள்ள சத்துக்கள்
கீழே வெள்ளாட்டுப்பாலில் உள்ள சத்துக்கள் தரப்பட்டுள்ளன. கூடவே, ஒரு ஒப்பீட்டுக்காக பசு மற்றும் எருமைப்பாலில் உள்ள சத்துக்களும் கொடுக்கப்படுகின்றன.
வெள்ளாட்டுப்பாலின் மருத்துவ குணங்கள்
காடுகள், மலைகள், மலைச்சாரல்கள், ஆற்றங்கரைகள் என பலவகை மூலிகைச் செடிகள் நிறைந்த புதர்ப்பகுதிகள் போன்ற இடங்களில் பலவித செடிகொடிகளையும், மூலிகைகளையும் மேய்ந்து வருகின்ற வெள்ளாடுகளின் பாலை பூலோக தேவாமிர்தம் எனக் கூறலாம்.
நம் தேசதந்தை காந்தியடிகள் வெள்ளாட்டுப் பாலைத் தினமும் அருந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததை நாம் அறிவோம்.
வெள்ளாட்டின் பாலை வயதிற்கு ஏற்ப 5 மி.லி. முதல் 100 மி.லி. வரை சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சிப் பருகி வர, எத்தகைய நோய், வலி வியாதிகளை உடையவர்களுக்கும் சிறந்த பலன் கிடைக்கும். வெள்ளாட்டுப் பாலை கறந்த உடனேயே அருந்தக்கூடிய வசதியுடையவர்கள் சம அளவு தண்ணீர் மட்டும் கலந்து காய்ச்சாமலேயே அருந்திட மேலும் மிகுதியான பலனைப் பெறலாம்.
வெள்ளாட்டுப் பால் – வலிப்பு, ஷயரோகம், குஷ்டரோகம், புற்றுநோய், நீரிழிவு, சரும நோய்கள், யானைக்கால் வியாதி, மஞ்சள் காமாலை போன்ற எவ்வித கொடூர நோய்களையும் குணப்படுத்தக்கூடியது. ஆண்மைக்குறைவு, வீரியக்குறைவு உடையவர்கள் வெள்ளாட்டுப் பாலை தொடர்ந்து 3 – 4 மாதங்கள் தினசரி ஒரு வேளை குடித்து வர நல்ல பலன் தெரியும்.
சித்த வைத்தியம்
வெள்ளாட்டுப் பாலுக்கு மேவியநற் றீ பனமாந்
தள்ளாட்டு வாதபித்தஞ் சாந்தமாம் – உள்ளிரைப்புச்
சீத மதிசாரஞ்சிலேஷ்மமறும் புண்ணாறும்
வாத கிலேசமும்போ மாய்ந்து.
வெள்ளாட்டுப் பாலினால் வாத, பித்த, கப தொந்தங்களினால் ஏற்படக் கூடிய நோய்களைப் போக்குவதுடன் சுவாச காசம், சீதாதி சாரம், கபத்தோடம், விரணம், வாதத்தினால் உண்டாக்கிய வீக்கங்கள் முதலிய துன்பங்களைத் தீர்ப்பதுடன் பசியையும் உண்டாக்கும்.
என் – இப்பாலை மஞ்சள்காமாலை நோய் உடையவர்களுக்குத் தினமும் கொடுக்க விரைவில் குணமடையும்.
செம்மறியாட்டுப்பாலின் குணங்கள்
செம்மறியாட்டுப்பால் மூத்திரப்பையின் கற்களை அகற்றும் மற்றும் இதனுடன் சேர்த்து காய்ச்சிய தைலத்தினால் தலைமுடி செழித்து வளரும் என்று சொல்லப்பட்டாலும், செம்மறியாட்டுப் பாலை தவிர்க்கவும். பலருக்கு ஒத்துக் கொள்ளது. பல வியாதிகளை கிளப்பி விடும். வாயுவை அதிகரிக்கும்.
சித்த வைத்தியம்
செம்மறிப் பால்பித் தஞ்சிலேஷ்மத்தை யுண்டாக்கும்
விம்மும் வயிறுமிக மேன்மூரச்சாங் – கொம்மை
வருமுலையாய் பத்தியத்தில் வாராது வாய்வாம்
பருகுவர்க்கு நாளு பகர்.
செம்மறி ஆட்டின் பால் பித்த கப தொந்தங்களையும், வயிற்று உப்புசம், மேற்சுவாசம் ஆகியவற்றை உண்டாக்கும். பத்தியத்திற்கு ஆகாது. ஆனால் வாயுவை அதிகரிக்கச் செய்யும். இப்பாலிற்று அநேக நோய்களை உண்டாக்கும் குணத்தைப் பெற்றிருக்கிறது.
– எஸ். சக்திவேல், திருப்பூர்.