உணவின் சுவையை கூட்டுவதற்காக தான், நாம் இஞ்சியை உணவில் சேர்த்து கொள்கிறோம். ஆனால், இஞ்சி சமையலுக்கு மட்டும் அல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
பெயர் தோன்ற காரணம்
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என்பது பொருள். நீரை உள்ளிழுக்கும் தன்மையை கொண்டது இஞ்சி, அதனால் தான் இஞ்சி என்று பெயர் வந்தது.
இஞ்சியின் பயன்கள்
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை சாறு செய்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
பசிக்கவில்லை என்று கவலையா? இனி கவலை வேண்டாம். தினமும் காலையில் இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால் பசி உணர்வு அதிகரிக்கும்.
இஞ்சியை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமடையும். உடல் எடையும் படிப்படியாக குறையும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க, இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிடலாம்.
இஞ்சி துவையல்
தேவையான பொருட்கள்
இஞ்சி – லு கப் (தோல் சீவியது )
தேங்காய் துருவல் லு கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 1 லு கரண்டி
கறிவேப்பிலை – 10 இலைகள்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிய நெல்லிகாய் அளவு
புளி – சிறு நெல்லிகாய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
இஞ்சியை முதலில் தோல் சீவி கழுவிய பின் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்பு, அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணையை உற்றி சூடான பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். இஞ்சி துண்டு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரைக்கும் நன்கு வதக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து இறக்கி விட வேண்டும். பின்பு, தேங்காய் துருவல், புளி, பச்சை மிளகாயை கலந்து நன்றாக ஆற விடவும்.
உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை தவிர, மற்ற அனைத்தையும் சிறிது சிறிதாக கரகரவென உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கடைசியில் அரைத்து எடுத்தால் ஆஹா! சுவையான இஞ்சி துவையல் ரெடி.
ஒற்றை தலைவலி உள்ளவர்கள் இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து நீரில் கலந்து நெற்றியில் தேய்த்து வர வேண்டும். படிப்படியாக ஒற்றை தலைவலி குறையும்.
சிறிது நீரில் இஞ்சியை தட்டி போட்டு இறக்கி விட வேண்டும், அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், நெஞ்சில் தங்கி உள்ள நெஞ்சு சளி கரைந்து விடும். அல்லது 5 னீறீ இஞ்சி சாறு, 5 னீறீ ஆடாதொடை இலை சாறு, 5 னீறீ தேன் ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி கரைந்து விடும்.
பல் வலி ஏற்படும் போது சிறிது இஞ்சியை எடுத்து அதை பல்லில் வலி உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். அல்லது இஞ்சியை சிறிது நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பல் வலி படிப்படியாக குறைந்து விடும்.
மணக்கும் இஞ்சி மறக்கவிடாது
உங்கள் குழந்தைகள் படித்ததை மறக்கிறார்களா? இனி கவலை வேண்டாம். தினமும் ஒரு டம்ளர் ஜுஸ் கொடுத்து வாங்க. அவர்கள் படித்ததை மறக்க மாட்டார்கள், இதை தினமும் பெரியவர்களும் குடிக்கலாம். மறதி என்பதே வராது.
இஞ்சி ஜுஸ்
தேவையான பொருட்கள்
இஞ்சி – 100 கிராம்
எலுமிச்சை – பாதி
தேன் – தேவையான அளவு
செய்முறை
இஞ்சியை கழுவி, அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கி மிக்சியில் சிறிது நீர் ஊற்றி அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு, எலுமிச்சை சாறு சிறிது ஊற்றி தேவையான அளவு தேன் கலந்து பரிமாறினால் சத்தான இஞ்சி ஜுஸ் தயார்.
மாதவிடாய்க்கு மருந்தாகும் இஞ்சி
இஞ்சியை மாதவிடாய் சமயத்தில் டீ வைத்து குடிப்பதன் மூலம் அல்லது உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மாதவிடாய் சமயத்தில் வரும் வயிற்று வலியை கட்டுப்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை சரி செய்ய இஞ்சி உதவுகிறது, என்பது பலருக்கு ஆச்சரியமான செய்தி தான்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ?
இஞ்சியிலிருந்து செரிமானத்திற்கு உதவும் சில சத்துக்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது அல்ல. வயிற்றில் சுருக்கம் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க வழி வகை செய்கிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் இஞ்சி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பித்தப்பையில் கல் இருபவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டும்.
இஞ்சி வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் அதுமட்டும் அல்லாமல் உணவை விரைவில் செரித்து விடும். எனவே, உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது.
அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருபவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இஞ்சி அதிக இரத்த போக்கை ஏற்படுத்தும்.
அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
பெரிய நோய்களுக்கு ஆங்கில மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்பவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் பக்க விளைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு அளவோடு உண்டு வந்தால் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
கீ.பி