நீங்கள் அறிந்திடாத இஞ்சியின் மருத்துவ பலன்கள்..

Spread the love

இஞ்சியை உணவில் பயன்படுத்தாத வீடுகள், இந்தியாவில் இருக்காது என்று தான் கூற வேண்டும். கார சுவை, இனிப்பு சுவை போன்ற எந்த சமையலுக்கும் இஞ்சியின் தேவை முக்கியமானதாக இருக்கின்றது. இதன் பலன்களை பார்க்கலாம். உடலில் ஏற்படக்கூடிய வெட்டு புண்களுக்கு இஞ்சியின் வேர் மற்றும் இஞ்சி பவுடர் வைத்து குணப்படுத்தலாம். மேலும் இதில் இருக்கும் குணப்படுத்தும் தன்மை காயங்களை போக்குவதோடு, தொற்றுகள் பரவாமலும் தடுக்கின்றது.

இஞ்சி மிகசிறந்த வலியை நீக்க கூடியதாகும். இஞ்சியை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால், கீழ்வாதம், வயிற்று பிடிப்பு, முதுகு வலி, மூச்சுக்குழாய், மூச்சுக்குழாய் அழற்சி, கழுத்து விறைப்பு, சீதளம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் வீக்கம் போன்ற பிரட்சனைகளை நீக்கி, அதனால் ஏற்படும் வலியும் மறையும். இரத்த சுத்திகரிப்பிற்கு இஞ்சி மிகசிறந்த மருந்து. உணவில் இஞ்சியை கூடுதலாக சேர்த்து வந்தால் இரத்தத்தில் இருக்கும் தொற்றுகள் வெளியேற்றப்பட்டு இரத்த சுழற்சி அதிகமாகும்.

இஞ்சியில் இருக்கும் நார்சத்து வயிற்றிற்கு சீக்கிரமாகவே ஒரு பூர்த்தியை கொடுக்கின்றது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இஞ்சி சரியான உணவாக இருக்கின்றது. இயற்கை வைத்தியத்தில் இஞ்சியின் வேர், பல மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இது நரம்புகளை பலப்படுத்தி தலைவலி, பித்தம், வாந்தி, மயக்கம் போன்ற பிரட்சனைகளை தீர்த்து உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கி, தசைகளை உறுதிபடுத்துகிறது. இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. தினசரி சுத்தமான இஞ்சியை சாப்பிட்டு வந்தால் கேன்சர் செல்கள் அழிந்து, வியாதி எதுவும் வருவதில்லை என கூறப்படுகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இஞ்சி சாற்றை குடிப்பதோடு, வெங்காய சாற்றையும் சேர்ந்து குடித்து வர சர்க்கரை அளவை கட்டுபடுத்தலாம். இஞ்சி சாற்றோடு தேன் கலந்து குடித்து வர செரிமான மண்டலம் சீராவதுடன், வயிற்றில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கும். ஏற்கனவே கூறியது மாதிரி இது உடல் பருமன் குறைய நல்ல தீர்வு.  அதுவும் இஞ்சியோடு புதினாவை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் அஜீரணம், பித்தம் மற்றும் வாய் நாற்றம் நீங்கும்.

நார்சத்து வயிற்றிற்கு சீக்கிரமாகவே ஒரு பூர்த்தியை கொடுக்கின்றது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இஞ்சி சரியான உணவாக இருக்கின்றது. இயற்கை வைத்தியத்தில் இஞ்சியின் வேர், பல மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இது நரம்புகளை பலப்படுத்தி தலைவலி, பித்தம், வாந்தி, மயக்கம் போன்ற பிரட்சனைகளை தீர்த்து உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கி, தசைகளை உறுதிபடுத்துகிறது. இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. தினசரி சுத்தமான இஞ்சியை சாப்பிட்டு வந்தால் கேன்சர் செல்கள் அழிந்து, வியாதி எதுவும் வருவதில்லை என கூறப்படுகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இஞ்சி சாற்றை  குடிப்பதோடு, வெங்காய சாற்றையும் சேர்ந்து குடித்து வர சர்க்கரை அளவை கட்டுபடுத்தலாம். இஞ்சி சாற்றோடு தேன் கலந்து குடித்து வர செரிமான மண்டலம் சீராவதுடன், வயிற்றில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கும். ஏற்கனவே கூறியது மாதிரி இது உடல் பருமன் குறைய நல்ல தீர்வு.  அதுவும் இஞ்சியோடு புதினாவை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் அஜீரணம், பித்தம் மற்றும் வாய் நாற்றம் நீங்கும்.


Spread the love