இஞ்சியில் இருக்கு உன்னதம்

Spread the love

இஞ்சி அதன் மருத்துவக் குணத்திற்காக பண்டையகாலத்திலிருந்தே இந்தியா, சீனா, தூர கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சியில் சுமார் 1 முதல் 4% வரை வோலடைல் ஆயில் (volahile oil)  அடங்கியுள்ளது. இந்த எண்ணெய் இஞ்சியின் மருத்துவக் குணத்திற்கும் வாசனை மற்றும் ருசிக்கும் மூலகாரணமாக உள்ளது. ஜின்ஜிபெரேன், பிசா பொலின் (zingiberene , bisabolene ) பிசா பொலின் என்று இரண்டு நறுமண மூட்டிப் பொருட்களும் ஜின்ஜரோல்ஸ்  என்ற காரணமான பொருளும் இஞ்சியில் இருப்பதால் வாந்தி வரும் நிலையை தடுக்கிறது. இஞ்சியை பயன்படுத்துவதால் செரிமான கோளாறு, ருசியின்மை, பசியின்மை, வாந்தி, கிறுகிறுப்பு போன்றவைகள் குணமாகிறது.

மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் ஆண்மையின்மை குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நுரையீரல் சம்பந்தப்பட்ட சளி, இருமல் வியாதிகளையும், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால் பெரும்பாலான இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது.

உணவு செரிமானம் ஆகாமல் இருத்தல்

 நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 கிராம் இஞ்சிப்பவுடர் உட்கொள்ளவும் (அ) புத்தம் புதிதான இஞ்சித்துண்டு சிறிது எடுத்துக்கொண்டு அதன்மேல் பாறை உப்பு தூவிக்கொண்டு சாப்பாட்டுக்கு முன்பு உட்கொண்டு வர சீரண சக்தியை வலுப்படுத்தும். உணவு நன்றாக செரிமானம் ஆகிவிடும். சுக்கு பவுடர் உடன் திப்பிலி மற்றும் கருமிளகு சேர்த்து உட்கொண்டு வர ஜீரண மண்டல பாதை நன்றாக செயல் பட ஆரம்பிக்கும்.

பிரயாண களைப்பு வராமல் தடுக்க

சுக்குப்பவுடர் 1 கிராம் பிரயாணம் செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு கோழி அல்லது ஆட்டு இறைச்சி சூப்பில் அல்லது ஆப்பாயில் முட்டையில் சுக்குப்பொடி சேர்த்துக்கொள்ள ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் பிரச்சனைகள் குணமாகும்.

பொதுவான ஜலதோஷம் & ஒரு டம்ளர் தண்ணீரில் புதிய இஞ்சி துண்டுகளை சிறியதாக நறுக்கி போட்டு கொதிக்க விடவும். இதனை தினசரி 4 முதல் 6 வேளை அருந்தவும்.

மாதவிடாய்க் கோளாறுகள் குணமாக

புதிய இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சர்க்கரை இத்துடன் சேர்த்து சாப்பாட்டுக்குப் பின்பு தினசரி 3 வேளை அருந்தி வரவும். மாதவிடாய்வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் குணமாகும்.


Spread the love