உடலின் அரிப்பு நீங்க…

Spread the love

கொப்புளங்கள் தோன்றினால் என்ன செய்வது?

பித்த சீற்றம் இரத்தத்தில் கலந்தால் நீர்க் கொப்புளங்கள் ஏற்படும். பித்த சீற்றம் ஏற்படக் காரணங்கள் பல, தேவையற்ற கோபம், மனவருத்தம், ரொம்ப பட்டினி, புளி, உப்பு, காரம் சேர்ந்த பதார்த்தங்களை உண்பது, புண்ணாக்கு, கடுகு, மதுபானம், கொள்ளு, வெங்காயம், தயிர், வெள்ளாட்டுக் கறி, முள்ளங்கி, மீன், திரிந்த மோர் அதிகமாகச் சேர்ப்பது இரத்தத்தைக் கெடுக்கும். இச் சமயத்தில் வெயிலில் அலைதல், சோர்வடைதல், அடுப்படியில் வேலை, பகல் உறக்கம், ஜீரணமாகாத உணவு, போன்றவை மேலும் கெடுத்து நீர்க் கொப்பளத்தை ஏற்படுத்தும்.

முதலில் பேதி மருந்து சாப்பிட்டு குடலைச் சுத்தப்படுத்த வேண்டும். உட்புறக் கழிவுகளை அகற்ற இம் மருந்தைச் சாப்பிட வேண்டும். படோல கடுரோஹிண்யாதி கஷாயம் 15 மில்லி, 60 மில்லி சூடான தண்ணீரில் சேர்த்து ஒரு கண்மத பஸ்பம் என்ற கேப்ஸ்யுலுடன் காலை, மாலை வயிற்றில் இரண்டு வாரங்கள் சாப்பிடவும். சாப்பிட்டவுடன் கொப்புள நீர் வற்றிவிடும். பித்த நீர் குடலுக்கு திரும்பி விடும். இப் பித்த நீரை வெளியேற்ற மாணிபத்ரம் என்ற லேகியத்தை காலையில் பசியோடு இருக்கும்பொழுது 15&20 கிராம் நக்கிச் சாப்பிடவும். சூடான தண்ணீர் அடிக்கடி குடிக்கவும். பின்னர் சூடான மிளகுரசம், சுட்ட அப்பளத்தைச் சாப்பிடவும். பிற்பாடு மோரைச் சுடப்பண்ணி நல்லெண்ணையில் தாளித்த கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை கலந்த சாதத்தைச் சாப்பிடவும்.

குடல் சுத்தமான மறுநாள் முதல் மதுஸ்நுஹி யென்ற மருந்தை ஒரு ஸ்பூன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். என்னென்ன பத்தியச் சாப்பாடு சாப்பிட வேண்டும்.

காலையில் சூடான சாதத்துடன் பருப்பு, நெய் சேர்த்துச் சாப்பிடவும். வேப்பம்பூ ரசம், தக்காளி ரசத் தெளிவு, மணத்தக்காளிக் கீரை, வாழைப்பூ, வடைகறி, மோர் சேர்க்கவும். மதியம் சுண்டைக்காய் சாம்பார் சாதம், எலுமிச்சம் பழம் ரசம், கடைந்த மோர் சாப்பிடவும்.

இரவில் கோதுமை ரவை உப்புமா சாப்பிடவும். சப்ஜீ சேரலாம். இவ்வுணவு வேண்டாத கழிவுகளை, கிருமிகளை வெளியேற்றிவிடும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love