பொதுவான மருக்கள்:
கெட்டியான மருக்கள். மஞ்சள் அல்லது பருப்பு நிறத்தில் வட்ட வடிவமாக இல்லாது வேறு பல வடிவத்தல் இருக்கும். தொட்டால் கெட்டியாக இருக்கும். கைகளில் தோன்றும்.
பாத மருக்கள் (Planter Warts):
இந்த மருக்கள் பாதங்களில் தோன்றும். நடக்கும் போது வலிக்கும். பாதத் தோல் கெட்டியாகி விடும். ஒருவருக்கொருவர் உடனே பரவி விடும். இந்த வகை மருக்கள் மாத்திரம் தான் வலியை உண்டாக்கும்.
பாலியல் மருக்கள் (Veneral Warts : Genital Warts):
உடலுறுப்புகள், குதம், கர்ப்பப் பை, இவற்றில் காலி ஃப்ளவரின் பூக்கள் போல் தோன்றும்.
நூல் மருக்கள் (Filiform Warts):
நூலிழை போல் நீட்டமாக, குறுகலாக சிறு மருக்கள் கண், இமை, முகம், கழுத்து, உதடுகளில் தோன்றும். மருக்களை நீக்க தற்போது பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன.
சருமத்தை தாக்கும் எட்டு வைரஸ்கள்
ஆ. ஹெர்பஸ் வைரஸ்கள் (Herpus Virus):
எட்டு வகையான ஹெர்பஸ் வைரஸ்கள் உடலைத் தாக்கும். இவற்றில் முக்கியமானவை ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் (Herpus Simplex) மந்றும ஹெர்பஸ் ஜோஸ்டர் (Herpus Zoster) ஆகியவைகளே.
ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் (Herpus Simplex):
இது தோலில், உடலின் ஈர ஜவ்வுகள் இவற்றில் சிறிய வலி கொடுக்கும். சீழ் நிரம்பிய கொப்புளங்கள் உண்டாக்கும். இந்த தொற்று திரும்பத் திரும்ப தோன்றும் என்பது தான் மிகப் பெரிய தொந்தரவு. இவற்றால் ஏற்படும் வாய்ப்புண்கள் 10 நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை இருக்கும். சாப்பிடுவது மட்டுமல்ல தண்ணீர் குடிப்பது கூட கஷ்டமாகி விடும். ஹெர்பஸ் வைரஸ் கிருமிகள் HSV1, HSV2 என்று இரண்டு வகை உள்ளன. ஹெர்பஸ் வைரஸ் உண்டாக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது சீதளம் (Cold sores) என்று கூறப்படும் புண்கள். இந்த புண்களை ஜலதோஷம் தூண்டி விடுவதால் தான் புண்கள் உதட்டில் ஏற்படும். திராட்சைக் கொத்துக்கள் போல ஈறு, மேல் அண்ணம் இவற்றில் தோன்றும். இந்த வைரஸ் ஆண், பெண்களின் பிறப்புறுப்புக்களிலும் கொப்புளங்களை உண்டாக்கும். வேதனை தரும் ‘நகச்சுற்று ’(Herpetic Whitlow) விரலில் ஏற்படக் காரணமும் இந்த ஹெர்பல் கிருமிகள் தான்.
ஹெர்பஸ் ஜோஸ்டர் (Herpus Zoster):
இது வலி, சீழ் நிறைந்த கொப்புளங்களை தோற்றுவிக்கும். சின்ன அம்மை (Chicken Pox), அக்கி இவற்றைத் தோற்றுவிக்கும். ‘அக்கி’யானது ஹெர்பஸ் ஜோஸ்டர் நரம்புகளைத் தாக்குவதால் ஏற்படும் திராட்சைக் கொத்துக்கள் போல் கும்பலாகத் தோன்றும். அக்கி உடலில் ஒரு பக்கத்தைத் தான் தாக்கும். அக்கி முற்றினால் சின்னம்மை உண்டாகலாம்.
சூரிய வெப்பத்தினால் ஏற்படும் சரும பாதிப்பு: சூரியன் வெளிவிடும் புற ஊதா கதிர் வீச்சின் தாக்குதலால் சருமத்தில் சுருக்கங்கள், செம்புள்ளி, கரும் புள்ளிகளையும், பல இடங்களில் நிற வேறுபாட்டையும் உண்டாக்கும். சருமம் கருத்து தடிமனாகி விகாரமடையும். புற ஊதாக் கதிர் வீச்சால் டி.என்.ஏ. மரபணுக்கள் பாதிப்படைகின்றன. தோல் செல்கள் தயாரிக்கும் இரசாயன பொருட்களையும் மாற்றுகின்றன. சருமம் உலர்ந்து போதல், வயது ஆவதற்கு முன்பே சுருக்கங்கள் உண்டாதல் மற்றும் சரும புற்று நோய்களும் உண்டாகலாம். இந்தக் கதிர் வீச்சினை நம்மால் காண இயலாது. வெயில் காலங்களில் பகல் 10 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை இந்தக் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். வெயிலில் அலைந்தால் சருமம் கருத்துப் போவதற்கு காரணம், மெலானின் அதிகமாக உற்பத்தியாகி கதிர் வீச்சை தடுக்க முயலும். அதிக மெலானின் உற்பத்தியை சருமம் கருப்பாக்கும். இதில் ஆறுதலான விஷயம், வெள்ளைக்காரர்களை பாதிக்கும் கதிர் வீச்சும், தோல் நோய்களும் பழுப்பு அல்லது கருப்பு தோல் உள்ள ஆசிய ஆப்பிரிக்க மக்களை அவ்வளவு பாதிப்பது இல்லை. தோல் புற்று நோய்கள் கூட வெள்ளைத் தோல் உடையவர்களைத் தான் அதிகம் தாக்குகிறது