இரைப்பையில் ஏற்படும் வாயுத் தொல்லை (கேஸ்ட்ரைடிஸ்)

Spread the love

வயிற்றில் வாயுத்தொல்லை ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்பட்டுத் தொல்லை தரும். இது நோயாளிகள் அமிலம் அதிகமாக உள்ள உணவுகளையோ, அதிக காரம் கலந்த உணவுகளையோ அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படுகிறது. மேற்கூறிய உணவுகள் அதிகமாக சாப்பிடுவதால், இரைப்பையில் உள்ள இரத்த நானங்கள் பாதிக்கப்பட்டு, கடுமையான வாயுத் தொல்லை ஏற்படும். இரைப்பையில் தேவைக்கு மேல் அதிகமான அமிலம் காணப்படுவதை ‘ஹைப்பர் அஸிடிட்டி’ என்றுகூறுவார்கள்.

இது யார் யாருக்கு ஏற்படும்? அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்கள், கவலை, கோபப்படுவர்கள், மன இறுக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பரம்பரை காரணமாகவும் ஏற்படுகின்றன.

இரைப்பையில் உள்ள கேஸ்டிரிக் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் திரவத்தில் 0.3 முதல் 0.5 சதவீதம் ‘ஹைட்ரோகுளோரிக்’ அமிலம் காணப்படுகிறது. இது தவிர ‘பெப்ஸினம் லைபேஸ்’ என்ற இரண்டு வகையான ‘என்சைம்கள்’ சுரக்கின்றன. மேற்கூறியவைகளினால் உணவில் இருக்கு பாக்டிரியாவைக் கொல்ல இயலுகிறது.

பெப்ஸின் என்ற என்சைமானது, புரதம் கலந்த உணவு வகைகளையும், ‘லைபேஸ்’ என்ற என்சைமானது கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும் செரிக்க உதவிபுரிகின்றன. நாம் சாப்பிடும் உணவானது, இரைப்பையில் சுமார் 2 மணி முதல் 4 மணி நேரம் வரை இருக்கும். அப்பொழுது அந்த உணவு கூழ் போல மாற்றம் பெறுகிறது. செரிமானச் செயலானது, ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உறுப்புகளின் அமைப்பைப் பொறுத்து உள்ளது.

நாம் நன்றாக மென்று சாப்பிட்ட  உணவை, இரைப்பை கூழ் போல ஆக்குவது எளிதாகிறது. உணவு அப்படி கூழ் ஆகும் பொழுது வாயு வெளிப்படுவதுண்டு. இதனை நாம் எளிதில் புரிந்து கொள்வதற்கு, நமது வீட்டில் நன்றாக அரைத்து வைக்கப்பட்ட இட்லி மாவை, மறுநாள் காலையில் பார்க்கும் பொழுது, அந்த மாவு சற்றும் நுரைத்துக் காணப்படும். அல்லவா? இது எவ்வாறு நிகழ்கிறது என்று அறிந்திருக்கலாம்.

ஈஸ்டுகளினால் இவ்வாறு மாறுகிறது. அந்த மாவில் காற்று நிறைந்த நீர் குமிழ்களும் உடன் காணப்படும். இது போலத்தான், இரைப்பையில் உணவானது கூழாக்கப்படும் போது சிறிதளவு வாயுவும் தோன்றுகிறது. இந்த வாயு தோன்றுவது எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுவது தான். ஒரு சிலருக்கு, இந்த வாயுவானது இரைப்பையிலேயே தங்கி விடுவதுண்டு.

இதன் காரணமாக மார்புப் பகுதிகளில் வலி ஏற்படுவதுண்டு. இதனை சிலர் மாரடைப்பிற்கான அறிகுறி என்று எண்ணி மிரண்டு விடுவார்கள். அவர்களுக்கு, ஏற்கெனவே மூட்டுவலியும் இருந்தால், வயிற்றில் தோன்றும் வாயுவானது, அந்த வலியை மேலும் அதிகரிக்கச் செய்து விடும்.

வயிற்றிலிருந்து ஒரு சிலருக்கு ஏப்பம் வந்து விடும். இந்த ஏப்பம் இரைப்பையில் தங்கி விட்ட வாயு வெளியேறுகிறது என்பதை நமக்கு எடுத்துக் கூறுகிறது. எனவே ஏப்பம் விடுவதால் நல்லது தான் எனலாம்.

வாயுவை தோற்றுவிக்கும் உணவுகளை, காய்கறி, தின்பண்டங்களை நாம் தவிர்ப்பது மூலம் குணம் பெறலாம். வாழைக்காய், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளை வேக வைத்தாலும் எண்ணெயில் பொரித்தாலும், அவை இரைப்பையில் இருக்கும் போது விரிவடையும் தன்மை கொண்டவை. இதன் காரணமாகவும் வாயு தோன்றுவதுண்டு. இதைத் தவிர, வேறு எந்த எந்த உணவுப் பொருட்களில் வாயுத் தொல்லை ஏற்படுகிறது என்பதை அறிந்து கூடியவரை அந்த உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் வாயுத் தொந்தரவை நாம் தவிர்த்து விடலாம்.

T. H.              


Spread the love