வாய்வும், வயிறும்

Spread the love

நாம் உழைப்பது, சம்பாதிப்பது எல்லாமே நமது எண் சாண் வயிற்றுக்கு தான். வயிறு நன்றாக இயங்கினால் வாழ்வு நன்றாக இருக்கும். நல்ல சீரண சக்தி உடையவர்கள் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்கிறார்கள். ஆயுர்வேதத்தின் படி, உடலில் உணரத்தக்க 14 இயற்கை உந்துதல்களில், பசியும், தாகமும் அடங்கியுள்ளன. வயிற்றில் ‘வாய்வு’ சேர்ந்தால் வாழ்வு நோயால் அவதிப்படும்.

                த்ரிதோஷங்களில் முதன்மையானது வாதம். இது தான் வாயு என்றும் சொல்லப்படுகிறது. குடலில் தங்கும் வாய்வு, பல தொல்லைகளை தரும். வயிற்று ஒப்புசம், அதிக தடவைகள், அதிக அளவுகளில் ‘அபான வாயு’ பிரிதல் பரவலாக காணப்படும் வயிற்றுக் கோளாறுகள். வாய்வழியாக வாயு பிரிவதை ஏப்பம் என்கிறோம். சாப்பிட்ட பின் ஏப்பம் விடுவதை சிலர் வயிறு நிரம்பியதை காட்டுகிறது என்று எண்ணுகிறார்கள்.

                ஏப்பத்தில் நாம் முன்பு விழுங்கிய காற்றை வெளியேறுகிறது. இந்த ஏப்பம் பித்தமாக, புளிப்பு சுவையிடன் வெளி வந்தால் ஜீரணசக்தி குறைபாடு என்று கருதலாம். குதத்தின் வழியே வெளியேறும் வாயு பிரிதலை தடை செய்யாதீர்கள் என்கிறது ஆயுர்வேதம். ஆனால் இது ஒரு தர்ம சங்கடமான நிலை – அதாவது பொது இடங்களில், அபான வாயு பிரிவது. மூன்றாவது முறையாலும் அதிக வாய்வு வெளியேறுகிறது. சீரண மண்டல தாரையின் சுவர்களால் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் கலந்து, பிறகு உடலிலிருந்து நுரையீரல் மூலம் வெளியேறுகிறது. வாய், குதம், நுரையீரல் அதிக வாய்வு வெளியேறும் வழிகள்.

                வயிற்றில் உள்ள ‘கேஸ்’ (நிணீs), வயிற்றில் உள்ள உணவை பேக்டீரியாக்கள் புளித்து நுரைக்க வைக்கும் போதும் மற்றும் நாம் வெளியுலகின் காற்றை விழுங்கும் போதும் உண்டாகும் காற்றும் கலந்தது. இதை ஆங்கிலத்தில் ‘திறீணீtus’ எனப்படும். ஆயுர்வேதத்தில் ‘ஆத்மானா’ எனப்படும். இந்த வாய்வு, ஹைட்ரஜன், கார்பன் – டை – ஆக்ஸைட் மற்றும் மீதேன் ( விமீtலீணீஸீமீ), வெவ்வேறு விகிதங்களில் கலந்த ஒரு கலவை. இந்த அதிகப்படியான வாய்வுத் தொல்லை திறீணீtuறீமீஸீநீமீ – வயிற்று உப்புசம் எனப்படுகிறது.

அறிகுறிகள்

1.            அடிவயிற்று வலி, வயிறு வீங்கியது போன்ற உணர்வு. குதத்தின் வழியே அதிக தடவை காற்று, நாற்றத்துடன், சப்தத்துடன் வெளியேறுதல்.

2.            வயிற்றில் ‘கடமுடா’ சப்தங்கள் ஏற்படுவது.

காரணங்கள்

1.            அஜீரணம் மற்றும் வயிற்றிலிருந்து மலங்கள் பூர்த்தியாக வெளியேறாதது. நாம் உண்ணும் உணவு பூர்த்தியாக செரிக்கப்படாவிட்டால் வாயு உற்பத்தி ஆகும். நம் உடலில் உணவு சேர்வதற்கு நாம் உண்ணும் உணவை சர்க்கரையாகவும், அமினோ அமிலங்களாக மாறினால் தான் முடியும். சில உணவில் உள்ள கூட்டு சர்க்கரைகள் இம்மாதிரி மாற்றுவதை தடுக்கும். காரணம் என்ஸைம் குறைபாடு / என்சைம் சுரக்காதது. இந்த லாக்டோஸ் ( லிணீநீtஷீsமீ ) என்ஸைமை சில மனிதர்களால் ஏற்றுக் கொள்ள சகித்துக் கொள்ள முடியாமல் போகும். எனவே இந்த என்ஸைம் இல்லாவிட்டால், கூட்டு சர்க்கரைகள் முழுமையாக பெருங்குடலை சென்றடைந்து அங்கு ‘செட்டில்’ ஆகி சிதைந்து, வாயுவை உண்டாக்க ஆரம்பிக்கும்.

2.            லாக்டோஸ் குறைபாடு, கணைய குறைபாடு மற்றும் உஷ்ண பிரதேசங்களில் உண்டாகும்  ஜிக்ஷீஷீஜீவீநீணீறீ sஜீக்ஷீuமீ நோய். ( பேதி, சோகை, எடை) குறைவு இவை இருக்கும்.

3.            பீன்ஸ§ம், முட்டை கோஸ§ம் காரணமாகலாம். அதிகமாக புரதம் செறிந்த உணவுகள் தவிர பழங்களும் காரணம். பீன்ஸிலிருக்கும் அதிகமான கூட்டு சர்க்கரை, ஜீரணத்தை குறைக்கும். ஜீரணமாகாததால் அப்படியே நேரடியாக இந்த மாவுச்சத்துகள் குடலில் போய் அங்குள்ள பேக்டீரியாவுக்கு இரை ஆகின்றன. பேக்டீரியாக்கள் இவற்றை சாப்பிட்டு விட்டு, வாயுவை வெளியிடுகின்றன. பாலும் வாயுவை உண்டாக்கும்.

4.            சில லாகிரி வஸ்துக்கள், சில மருந்துகளும் ‘கேஸை’ உண்டாக்கும். சோடா, சோடா கலந்த குளிர் பானங்களும் காரணமாகலாம்.

நிவாரணம்:-

1.            புகை பிடிப்பது, டீ, குளிர்பானங்களை தவிர்க்கவும்.

2.            பால், இனிப்பு இவற்றை தவிர்க்கவும்.

3.            கேஸை உண்டாக்கும் பதார்த்தங்கள் அனைத்தையும் திடீரென்று நிறுத்த வேண்டாம். ஒவ்வொன்றாக கை விட்டு வரவும்.

4.            சாப்பிட்டவுடன் படுக்க வேண்டாம். வீட்டிலேயே மெதுவாக நடை பயிலவும்.

5.            செயற்கை பல் பொறுத்திக் கொண்டிருந்தால், அது சரியாக பொறுத்தப்படாமல் இருந்தால், அடிக்கடி காற்று கலந்த உமிழ் நீரை விழுங்கும் படி நேரும். இதனால் வயிற்றில் காற்று சேரும்.

6.            வேகமாக சாப்பிட்டால் காற்று உள்ளே செல்ல வாய்ப்பு ஏற்படும். அதே போல் சாப்பிடும் போது பேசக் கூடாது.

7.            ஷிtக்ஷீமீss,  டென்ஷன், பரபரப்பு இவற்றை குறைக்கவும். யோகா, தினசரி உடற்பயிற்சி இவை டென்ஷனை குறைக்கும்.

8.            சில பருப்புகள் ( கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு), வேர்கடலை, முந்திரி பருப்பு, சில முழுதானியங்கள், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள். அதிக கொழுப்புள்ள உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், கேக், சாம்பார், இவைகளெல்லாம் வாயுவை உண்டாக்கும் உணவுகள்.

9.            அசைவ உணவை தவிர்க்கவும், பீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், பட்டாணி, உருளைக்கிழங்கு, பூண்டு, காலிஃப்ளவர், முள்ளங்கி கத்தரிக்காய் இவை வாயுவை உண்டாக்கும் காய்கறிகள்.

10.          பழங்களில் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் இவைகள் வாயுவை உண்டாக்கலாம்.

கை மருந்துகள் 

1.            5 கிராம் ஏலக்காய் பொடியுடன் நீர் சேர்த்து குடிக்கவும்.

2.            பெருங்காயம் நெய்யில் வறுத்து பொடி செய்தது, கரு உப்பு, ஏலக்காய், சுக்கு, இவை ஒவ்வொன்றிலும் 5 கிராம் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினம் 2 – 3 வேளை இந்த பவுடரை 1/2 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கரைத்து குடிக்கவும். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

3.            வெது வெதுப்பான, ஒரு கப் நீரில், இரண்டு துளி புதினா சாறை விட்டு கொடுக்கவும். லவங்கப்பட்டை, இஞ்சி சாறு இவற்றையும் இதே போல் உபயோகிக்கலாம்.

ஆயுர்வேத மருந்துகள்

                ஹிங்கு வஷ்டாக சூரணம், குமாரி அஸவா, ஹிங்கு த்ரீகுண தைலம், ராஜ் வடி, லசூணாகி வடி.

ஆயுர்வேத சிகிச்சை

தீபனா                        – வாயுவை கண்டிக்கும் மருத்துவ சிகிச்சை.

பாச்சானா                  – ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

வாத அனுலோமனா   – வாயுவை வெளியேற்றும்.


Spread the love