பூண்டின் மகத்துவம்!
“உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பது தான் பூண்டைப் பற்றி மருத்துவ உலகம் சொல்லும் அதிசயத் தகவல்.ஆனால்,பூண்டின்மகத்துவம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ஸ்டாடின் சாப்பிட்டால் 1% கூட மாரடைப்பு மரணம் குறையாது. ஆனால் சமைத்த பூண்டில் பலன் இல்லை. பச்சையாக அல்லது பொடியாக சாப்பிட்டால் தான் பலன். மஞ்சளின் மகிமை கியுர்கியுமினில் உள்ளதுபோல் பூண்டின் மகிமை அதில் உள்ள அலிசினில் உள்ளது.
முன்பெல்லாம் ஒரு நாளில் பயன்படுத்தப்படும் சமையல் பொருட்களின் லிஸ்டில் பூண்டு, எப்படியும் இருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் நிலைமை அப்படி இல்லை.
மாதவிடாய்க் கோளாறு:
மாதவிடாய்ப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய மருந்துப் பொருளாக பூண்டு இருக்கிறது.குறிப்பாக,நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.
வெள்ளணுத்திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்து ஊளைச் சதையைக் கரைக்கும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தம், நீரிழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.
இதய நோய்:
பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.
வாயு பிரச்சனை:
பூண்டை எண்ணெயில் வேகவைத்தோ ஆவியில் வேகவைத்தோ பயன்படுத்தலாம். இதை தினமும் சாப்பிட்டு வந்தால் நமது உடலையும் இதயத்தையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
தினமும் பூண்டை பாலில் போட்டு காய்ச்சி பூண்டு வெந்ததும் சாப்பிட்டு வர உடல் உபாதைகள் குறைவதோடு வாயு பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கும் சிறந்தது. பூண்டை தினமும் சமையலில் பயன்படுத்தலாம்.
கொழுப்பு குறைப்பு:
மருத்துவர்கள் கொழுப்பு பற்றிய விவரங்களை பூண்டு சாப்பிடகொடுத்து பலரிடம் ஆய்வு செய்தனர். பூண்டு சாப்பிட்ட நான்கு வாரங்களுக்கு பிறகு கொழுப்பின் அளவு 12 சதவீதமாக குறைந்து இருப்பது தெரியவந்தது. ரத்தம் உறைந்து ரத்தகட்டிகள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது என தெரிவித்துள்ளனர்.
சளித்தொல்லை நீங்க:
வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும். பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
மிளகாய் வத்தல், தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோல் உரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
காது அடைப்பு, வலி நீங்க:
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.