தேனில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. இந்த தேனில் சாதாரண பூண்டு ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது, என இயற்கை மருத்துவம் தெளிவாக சொல்லியிருக்கிறது, அதை பற்றி பார்க்கலாம்.
பூண்டில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. அதுமட்டுமின்றி கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு டீஸ்பூன் குடித்து வந்தால் அதன் பலன் மிகவும் அதிகம். இந்த கலவைகள் மூலமாக கிடைக்ககூடிய சல்பர் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பூண்டில் இருக்கும் அஜோனின் இதயத்தில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கவும் செய்து, இரத்தம் அதிகரிக்க தேன் மிகவும் நல்லது.
மேலும் இதில் ஊறவைத்திருக்கும் பூண்டின் பெலனும் சேர்ந்து நரம்பு தளர்ச்சியை சரி செய்ய உதவுகிறது. இந்த கலவையை தினமும் குடித்து வர, இதனால் கிடைக்ககூடிய “என்சைம்” உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதினால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது அதி சிறந்த மருந்து. இன்சுலின் சுரப்பதற்கு பூண்டு உதவியாக இருப்பதினால் சர்க்கரை நோயாளிகள் கூட இந்த மருந்தை பயப்படாமல் எடுக்கலாம். அதோடு இந்த மருந்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதனால் பாக்டீரியா மற்றும் வைரஸால் பரவ கூடிய காய்ச்சல், தொற்று நோய்களுக்கு நல்ல தீர்வாக அமையும். பூண்டில் இருக்கும் டையாலிஸ் சல்பைடு அலர்ஜியையும், அலர்ஜியால் ஏற்பட கூடிய சுவாச பிரட்சனைகளையும் குனமாக்குகிறது.