பழமா பழச்சாறா

Spread the love

பழங்கள் உடலுக்குத் தேவையான சக்தியை எளிய வடிவத்தில் எளிதாக ஜீரணமாகக்கூடிய விதத்தில் தருகின்றன. பழங்களில் ஆப்பிள் போன்ற பழங்கள் தேவையான சக்தியை கொடுப்பதுடன் உடலில் ஏற்படுகின்ற வளர்சிதை மாற்றங்களை ஒழுங்காக நடைபெறச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள் உடலில் ஏற்படுகின்றன வேதியல் மாற்றங்களை உடல் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக மாற்றி அமைக்க உதவுகின்றன.

பழங்களில் அதிகளவு வைட்டமின்களும், மணிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இதனால் இவை உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகின்றன. உறுப்புகள் எளிதாக இயங்கிட தேவையான சக்தியை தருகின்றன. ஜீரணசக்தியை சீர் செய்கின்றன. வயிற்று உபாதைகளை நீக்குகின்றன அதிக நார்சத்தை வழங்கி எளிதாக மலம் வெளியேற உதவுகின்றன. மலச்சிக்கலை தவிர்க்க உதவுகின்றது. ஆரோக்கிய வாழ்விற்கு பழங்கள் இன்றியமையாதவை பழங்களை அப்படியே உண்பது சாலச்சிறந்தது. இது பற்களுக்கும், ஈறுகளுக்கும் அதிக ஆரோக்கியத்தை தரும். இருப்பினும் பழங்களை அப்படி கடித்து உண்ண முடியாத குழந்தைகளுக்கும் வயதில் மூத்தவர்களுக்கும் சாறாக பிழிந்து கொடுப்பது நல்லதாகும். சாறு எடுக்கும் பொழுது அதிக இனிப்போ அல்லது பிற பொருட்களோ கலவாமல் சாற்றை எடுப்பது பழங்களில் அடங்கியுள்ள சத்துக்களை அப்படியே பெற உதவும்.

சில பழங்களின் குணங்கள்

மாதுளம் பழம் குடல் புண்களையும், வயிற்றுப்புண்களையும் ஆற்றிடக் கூடியது.

பப்பாளி பழம் முதுகு, மூட்டு வலிகளைப் போக்கிடும் மலச்சிக்கலை தவிர்த்திடும்.

கொய்யாப்பழம் நீரிழிவை கட்டுப்படுத்தும் உடல் எடையை குறைக்கும்.

திராட்சை இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் கண்நோயை போக்கும்.

நெல்லிக்காய் நீரிழிவைக் கட்டுப்படுத்தும், நெடு நாள் நோய்களை குணமாக்கும்.

அன்னாச்சிப்பழம் வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும் பசியின்மையை போக்கும்.

சாத்துக்குடி இருமல், தும்மல், சளி, ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை சீராக்கும்.

நாவற் பழம் நீரிழிவை கட்டுப்படுத்தும்.

தினம் ஒரு பழம் உண்டு வர மன அமைதி பெறும். உடல் ஆரோக்கியம் பெறும்.

பழச்சாறுகள் தயாரிக்கும் பொழுது அவற்றில் பால் அல்லது தேங்காய் பால் அல்லது முளை தானியப்பால் சேர்த்திட இன்னும் சத்துக்கள் பல மடங்காக கிட்டும்.

இனிப்பு சுவைக்காக சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது பேரீச்சைச்சாறு அல்லது பேரீச்சம்பழம் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.

உணவு நலம் ஜுன் 2011

பழமா, பழச்சாறா, உடல், சக்தி, ஆப்பிள், பழங்கள், உடலில், வளர்சிதை மாற்றங்கள், உடல் வளர்ச்சி, வைட்டமின்கள், மணிச்சத்துக்கள், ஆரோக்கியம், உறுப்புகள், ஜீரணசக்தி, வயிற்று உபாதை, பற்களுக்கும், ஈறுகளுக்கும், சத்துக்கள், சில, பழங்களின், குணங்கள், மாதுளம் பழம், குடல் புண்கள், வயிற்றுப்புண்கள், பப்பாளி பழம், முதுகு, மூட்டு வலிகள், மலச்சிக்கல், கொய்யாப்பழம், நீரிழிவை கட்டுப்படுத்தும், உடல் எடை, திராட்சை, இரத்த உற்பத்தி, கண்நோய், நெல்லிக்காய், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், நோய்கள், அன்னாச்சிப்பழம், வியர்வை, துர்நாற்றம், பசியின்மையை போக்கும், சாத்துக்குடி, இருமல், தும்மல், சளி, ஆஸ்துமா, சுவாச கோளாறுகள், நாவற்பழம், நீரிழிவு, உடல் ஆரோக்கியம்,


Spread the love