பழங்களும், உடல் நலமும்

Spread the love

பழங்கள் நிறையச் சாப்பிட்டால் உடல் நலம் மேம்படுமென்று அனேகர் மற்ற உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுகின்றனர். இது தவறான கருத்தாகும். இது கேடு விளைவிக்கும். உதாரணமாக வயிற்றில் வலி ஏற்படலாம். பான்கிரியாட்டிஸ் (Parncreatitis) யென்ற வியாதி ஏற்படலாம். மேற்கொண்டு நகங்கள், பற்கள், பழுது படலாம். தோல் வரண்டு காணப்படும். தலைமுடி சேதமடையும். சிகப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும். ஹீமோகுளோபின் அளவும் குறையும். பல் ஈறுகள் வீங்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மனதில் உணர்ச்சி பூர்வமாக பாதிப்புகள் ஏற்படும். வைட்டமின் பி.12, குறைபாடு ஏற்படும்.

பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாகயிருப்பதால், சர்க்கரை நோய் ஏற்படலாம். சோடியம் அளவு குறையும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். சரிவிகித உணவு இல்லாததால் மயக்கம் கூட ஏற்படலாம்.


Spread the love