பழத்தோலில் இருக்குது பல சத்து

Spread the love

பழங்கள் சாப்பிடும் பொழுது தோலை ஒதுக்கிவிடாதீர்கள். அதில்தான் பல சத்துக்கள் இருக்கின்றன.

சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை பழங்கள் எதையாவது சாப்பிட்டால், அதன் தோலை உரித்து ஒதுக்கி விடுவது, பழச் சதையை மட்டும் வெட்டியெடுதுது சாப்பிடுகிறார்கள். தோலை நீக்கிய பின் உள்ள பழச் சதையை நீர், சர்க்கரை, சேர்த்து பழரசமாகவும் அருந்துகிறார்கள். இது தவறான பழக்கம் ஆகும். இவ்வாறு செய்வதால், தோலில் உள்ள சில சத்துக்களை அவர்கள் இழந்து விடுகின்றனர். நாம் உண்ணும் பழவகைகள் ஒவ்வொன்றிலும், அதன் தோலில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சில சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை என்ன என்று நாம் அறிந்து கொண்டோம் என்றால் பழத்தோலை இனிமேல் வெளியே எறிய மனது இடம் தராது.

சப்போட்டா, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலை நீக்க, பழச்சதையை மட்டும் பிழிந்து வடிகட்டி சாறாக குடிக்கும் பொழுது நார்ச்சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகளுக்கு வைட்டமின் ‘ஏ’ ‘சி’ சத்துக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் தேவை. இச்சத்துக்கள் ஆப்பிள் பழத்தோலில் அதிகம் உள்ளது. ஆப்பிள் பழத்தோலில் கால்சியம், பொட்டாசியம் தாது உப்புக்கள் உள்ளன. ஆன்டி ஆக்சடன்ட் பொருட்கள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகறிது. ஆப்பிள் பழத் தோலுடன் சாப்பிட மேற்கூறிய சத்துக்கள் நமது உடலுக்கு கிடைத்துவிடுகின்றன. இதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவு விரைவாக அதிகரித்து விடாது. ஆனால், ஆப்பிளை தோல் நீக்க சாறு எடுத்து அருந்தும்பொழுது மேற்கூறிய சத்துக்கள் கிடைக்காது என்பதுடன் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.

கொய்யா பழத்தோல்

கொய்யா பழத்தோல் சருமப்பாதுகாப்பை உறுதி செய்கிறது. சருமத்தைப் பாதுகாக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. சருமத்தில் வறட்சி ஏற்படுவது குணமாகும்.

ஆரஞ்சு பழத்தோல்

இப்பழத்தின் தோலில் கொழுப்புச் சத்துக்களை குறைக்க உதவும் சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நமது உடலில் உள்ள மோசமான லிஞிலி வகை கொழுப்புகளை எதிர்த்துப் போராடி இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தாமல் தடுக்கும். ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால் புற்று நோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சி முற்றிலும் தடுக்கப்படுகிறது. ஆரஞ்சுப் பழத்தோலை, 20 நாட்களுக்குப் பயன்படுத்தி வர, நெஞ்செரிச்சல் குணமாகும். இதில் உள்ள வேதிப் பொருட்கள் நெஞ்செரிச்சலை குணப்படுத்துகிறது. 100 கிராம் ஆரஞ்சு பழத் தோலில் 10.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆரஞசு பழத் தோல் கொண்டு தயாரிக்கப்படும் தேனீர் செரிமான உறுப்புகளை உறுதிப்படுதுதுகிறது. ஆரஞ்சு பழத்தோலில் வைட்டமின் ‘சி’ ல் உள்ள ஆக்சிஜன் எதிப்புப் பொருட்கள் மூச்சுக்குழாய் சுழற்சி, பிராங்கிடிஸ், சளி, ஃபுளு, ஆஸ்துமா நுரையீரல், புற்றுநோய் போன்றவற்றில் இருந்து விடுபட உதவுகிறது.

வாழைப்பழம்

தோலை வெளியில் நன்றாக உலர்த்திய பின்பு பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடலாம். இதில் புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ளது. முழு உணவாக செயல்படும். வயது அதிகரிக்க, அதிகரிக்க மனித உடலில் கால்சியம் சத்து குறைவதால் மூட்டுவலி ஏற்படும். ஒரு சிலருக்கு இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. தினசரி வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிட்டுவர மூட்டு வலி குறையும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். வாழைப்பழத்தோல சற்றே கசப்பாக இருக்கும். வாழைப்பழத் தோலில் கால்சியமும், யூரிக் அமிலத்தை சமன்படுத்தும் செலினியம் தாதுப் பொருளும் இருக்கறது.

தக்காளிப்பழம்

தக்காளிப் பழத் தோலில் வைட்டமின் ‘ஏ’, ’சி’ மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தோல் நீக்காமல் சாப்பிடுவதும், சமைப்பதும் நல்லது.

திராட்சைப்பழம்

திராட்சைப் பழததை தோலுடன் சாப்பிடும் பொழுது சாறு எடுத்து அருந்தும் பொழுது சத்துக்கள் குறைந்து விடும்.

மாம்பழம்

மாம்பழததில் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் குணம் உண்டு. ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்தின் அளவு அதன் தோலிலும் உள்ளது. மாம்பழத்தோலை கூழாக்க அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வர கருமையான வளையங்கள் நீங்கும். இத்துடன் சிறிது தேன் கலந்து கழுத்தில் கருமையான பகுதிகளில் தடவி வர குணம் பெறலாம்.

சப்போட்டாப்பழம்

உடலில் எங்கேனும் காயம் ஏற்பட்டால்,  விரைவில் குணமாக வேண்டுமா? சப்போட்டாப் பழத்தை தோலுடன் சாப்பிடுங்கள். உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் இருந்தால் அதனை அழிக்கும் ஆறறல் உண்டு. உடலில் ஆறாத புண் உள்ளவர்கள் தினசரி சாப்பிட்டு வரலாம். மருத்துவர் ஆலோசனைப்படி இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திய பின்பு சப்போட்டாப் பழத்தை அளவோடு சாப்பிட இயலும்.


Spread the love