பழங்களில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளன. பொதுவாக பழங்களை சாப்பிட்டால் விரைவாக செரிமானம் ஆகும். ஏனெனில் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதுபோன்று பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வயதைக் குறைக்கக்கூடிய ஆண்டி ஆக்சிடென்டுகள் அதிக அளவில் உள்ளன.
வாழைப்பழம்
இதில் பல வகை உண்டு. பச்சை வாழைப், பூவன், மோந்தன், ரஸ்தாளி, கற்பூர வாழை, கருவாழை, மலைவாழை என்பனவாம். பச்சை வாழை குளிர்ச்சி இயல்பினை உடையது. வாத நோயாளிகள் இதனைச் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. ஜீரண சக்தியை அளிப்பது பூவன் வாழைப் பழத்திற்கு நிகரே இல்லை. இது உடல் தேற்றி மருந்தாகப் பயன்படும். பூவன் பழம் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் நீடித்த மலச்சிக்கல் உள்ளவர் பேயன் வாழைப்பழம் சாப்பிடலாம். இப்பழங்களைப் பெரியவர்களும் சாப்பிடலாம் குழந்தைகளுக்குப் பேதியானால் ரஸ்தாளி வாழைப்பழத்தைத் தண்ணீர் கரைத்துக் கொடுக்கலாம். வாழைப்பழம் ஏழைக்களுக்கான முழுத் தன்மைப் பெற்ற உணவு என்ற உண்மையை அவர்கள் உணர வேண்டும். நமது மக்கள் வாழைப்பழங்களின் பயனை இன்னும் சரியாக உணரவில்லை. மிகவும் மலிவாகவும் ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியதுமான வாழைப்பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சாத்துக்குடி
ஆரஞ்சுப் பழ இனத்தைச் சேர்ந்து. ஆரஞ்சுப் பழத்தின் சத்துக்களும், மருத்துவக் குணங்களும் இதற்கும் ஓரளவு உண்டு. இரத்த விருத்திக்கு சாத்துக்குடி பழம் சிறந்த முறையில் உதவுகிறது. சாத்துக்குடி பழத்தின் தோலைச் சிலர் ஊறுகாய் செய்தும் பயன்படுத்துவர். அறிவாற்றலைப் பெருக்கும் இயல்பு இதற்கு உண்டு. ஜீரண சக்தியைப் பெருக்கும் ஆற்றலும் இதற்குண்டு.
தக்காளிப்பழம்
இப்பழத்தை சமயலுக்குப் பயன்படுத்துவோம். இதைச் சமைக்காது சாப்பிடுவது பல வகையிலும் உடல் வளத்தை, பலத்தைப் பெருக்கும் பலவிதமான உடலுக்கு தக்காளி டானிக் போல பயன்படும். எப்படி எவ்வகையில் சாப்பிட்டாலும் அதன் ஆற்றல் அப்படியே நமக்கு கிடைக்கும். இரத்த உற்பத்திக்கும், இரத்த சுத்திக்கும் அருமையான மருந்து. இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் நோய் உண்டாவதில்லை. தக்காளியை காலை, மாலை சூப்பாக அருந்த உடல் ஆரோக்கியம் பெற்று திகழும். சருமம் மென்மையாய்ப் பட்டுப்போல் மாறும். சருமநோய்கள் எதுவும் அனுகாது. இப்பழத்தை ஜாம் செய்து வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
சீத்தாப்பழம்
இதில் வைட்மின் சத்துக்கள் இல்லை எனினும் இதைய வலிமைக்கு நல்லது. இது குளிர் தன்மை கொண்டது. ஆகையால் இதனை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாய் சாப்பிட்டால் பசியை மந்தப்படுத்தும்.
பப்பாளி
இதில் அதிக சக்தி உண்டு. அற்புதமான பழம். மாம்பழத்துக்கு அடுத்தது பப்பாளிப்பழத்தில் தான் வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது. ஆப்பிள் பழத்தை விட மிக அதிகமான உயிர்ச் சத்துக்கள் இதில் உள்ளது. இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிக நல்லது. இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தொற்று நோய் உண்டாவதில் நரம்புகளை முறுக்கேறச் செய்யும் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடவேண்டும். இப்பழத்தைச் சாப்பிடுபவர் சுறுசுறுப்பாக இயங்குவதைக் காணலாம்.
எலுமிச்சம்பழம்
இதில் அற்புதமான சக்தி உண்டு. நோய் அகற்றும் குணமுடையது. கல்லீரல் கோளாறு தொடர்பான எந்தக் குறைபாட்டையும் அகற்றும் சக்தி இதற்குண்டு. மஞ்சள் காமாலை நோய்க்கு மணிக்கு 1 தடவை இப்பழச் சாறு தண்ணீர் கலந்து குடித்துவர நோய் குணமாகும். மூல வியாதிகளைக் குணப்படுத்தும். உணவு உண்டதும் வயிறு ஊதல், பொருமல், வாயு கோளாறு இருப்பின் வெந்நீரில் பழத்தைப் பிழிந்து உடன் குடிக்க குறைபாடு அகலும். வாந்தி ஏற்படின் அதை நிறுத்த எலுமிச்சப்பழ இலைகளைப் பயன்படுத்தலாம். இலையை அரைத்து தண்ணீருடன் கலந்து உப்பு போட்டு பருக வாந்தி உடனே நிற்கும்.
அன்னாசிப் பழம்
பல விதமான சத்துக்கள் நிரம்பிய இனிய சுவையுடையது. உடல் வலிமையும் வனப்பும் பெறுவதற்கு இப்பழம் உதவுகிறது. தொடர்ந்து இப்பழம் சாப்பிட பித்தம் அகலும். இப்பழத்தில் சர்பத்தும் செய்து சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட எல்லாப் பிணிகளும் அகலும்.
பேரிச்சம் பழம்
இதில் வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து அதிகமுண்டு. இரத்தத்தை விருத்தி செய்யும். ஒவ்வொரு நாளும் இரவில் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு பசுவின் பாலை அருந்தி வர இரத்தம் விருத்தி ஏற்படும்.
திராட்சைப்பழம்
இதில் பல வகைகள் உண்டு சில பச்சை, கருப்பு நிறமாய் உள்ளன. பல வகையான குடல் கோளாறுகளுக்கு பச்சை திராட்சை நல்ல வகையில் பயன்படுகின்றது. நரம்பு தளர்ச்சிக்கு சீர் செய்யும் உலர்ந்த திராட்சையை பசுவின் பாலிட்டு ஊறச் செய்து பாலுடன் சாப்பிடலாம். கருப்பு திராட்சையில் பச்சை திராட்சையை விட சில வகை சத்துக்கள் அதிகமாக இருக்கின்றனர்.
கலைச்செல்வி இளங்கோவன்
மேலும் தெரிந்து கொள்ள…