நமது இந்திய நாட்டின் உணவு வகைகளை எந்த நாட்டு உணவுகளாலும் தோற்கடிக்கவே முடியாது. அதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால்? இந்திய உணவுகளில் நாம் உபயோகப்படுத்தும் கார சுவை தான். நமது நாட்டை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற ஒரு முக்கிய காரணம் இந்த காரசுவை என்றே கூறலாம்.
நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இங்கிருந்து பிரிட்டிஷ்காரர்கள் போகும் பொழுது சில மூலிகை பொருட்களை எடுத்து கொண்டு அவர்கள் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த மூன்று மூலிகை பொருள் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
“சீரகம்” – இந்தியாவில் தான் சீரகம் அதிகளவில் உற்பத்தியாகின்றது. அதாவது 7௦ சதவிகித சீரக உற்பத்தி இந்தியாவில் தான் நடந்து வருகிறது. இந்த சீரகத்தை leyden cheese – ல் சேர்க்கின்றன. அதோடு france – ல் ஒரு leyden cheese செய்யும் போது சீரகம் சேர்க்கின்றன. பிரிட்டிஷ் ஹோட்டல்களில் மட்டன் செய்யும் பொழுது சீரகம் அதிகப்படியாக சேர்க்கின்றன.
“பட்டை” – hot சாக்லேட், காஃபி, ஆப்பிள் pie, baking என அதிகமான பொருட்களில் இந்த பட்டையின் வாசனை மிகவும் பிடித்ததால், ஆங்கிலேயர்கள் சேர்க்கின்றன.
“pepper” – நமது நாட்டிற்கு வாஸ்கோட காமா வருவதற்கான ஒரு முக்கிய காரணமே இந்த மிளகு தான், என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இந்த மிளகு நம் நாட்டிலேயே விலை அதிகம் என்றால், வெளிநாடுகளில் நிச்சயமாக அதிகமான விலையில் இருக்கும். எவ்வளவு தான் விலை அதிகமாக இருந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு இந்த மிளகு மிகவும் பிடித்தமான ஒரு மூலிகை பொருள் என்று தான் கூற வேண்டும்.