நீரிழிவு நோயாளிகளுக்கான நொறுக்ஸ் மற்றும் ஃபுருட்ஸ்

Spread the love

சர்க்கரை உடலில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏறிவிட்டது. இனி மருந்துகள் சாப்பிட்டால்தான் வாழ்க்கை நீடிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டீர்களா? கவலைப்படவேண்டிய அவசியமில்லை. நீங்கள் விரும்பும் எல்லா வகை உணவுகளையும் சாப்பிட இயலாது. ஒரு சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்துடன் மருத்துவர் உங்களுக்கு வழங்கிய அறிவுரைப்படி மருந்துகளை தவறாது உட்கொண்டு வந்தாலே போதும்…

சுகர் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது உடலில் அமைந்துள்ள கணையம் என்ற உறுப்பானது இன்சுலினை சுரக்க இயலாமல் போவதே. இதனால் சர்க்கரை (குளுக்கோஸ்) சக்தி உடலில் சேராமல் போய் இரத்தத்தில் தங்கி விடுகிறது. நீரிழிவில் டைப் ஒன்று, டைப் இரண்டு என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. தினமும் கட்டாயமாக இன்சுலினை ஊசி மூலம் ரத்தத்தில் ஏற்றிக்கொள்ளும் நிலைமை டைப்-1 என்றும், மருந்து, மாத்திரைகளாலேயே இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும் நிலைமையை டைப்-2 என்றும் கூறப்படுகிறது.

மேற்கூறிய நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல் பருமன் அளவுக்கு மீறி இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. கொலஸ்ட்ரால் அளவு குறைவதால், உடல் பருமன் குறைகிறது. மாதம் ஒரு முறை தங்கள் உடல் எடையை ஒரே எடை இயந்திரத்தின் மூலம் எடுத்துக் குறித்துக் கொள்வது நல்லது. உணவில் உப்பைப் குறைப்பது நல்லது. பருப்பு காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு கெட்டியாக இருக்கக் கூடாது. நெய், வெண்ணெய், வனஸ்பதியை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வறுத்த உணவுகள், காய்கறிகளை விட, கூட்டு, அவியல் செய்து சாப்பிடுவது சிறந்தது.

நீங்கள் மூன்று வேளை உட்கொள்ளும் உணவை ஆறுவேளை உணவாக பிரித்துக் கொண்டு சாப்பிட வேண்டும். மூன்று வேளை உணவின் அளவையும் ஆறுவேளைக்கு பிரித்துக் கொள்ள வேண்டுமே தவிர அதற்கு மேல் உணவின் அளவை எடுத்துக் கொள்ளக் கூடாது. முள்ளங்கி தவிர மற்ற எந்த கிழங்கு வகைகளையும் சாப்பிட வேண்டாம். கிழங்கு வகை உணவில் உள்ள கார்போஹைட்ரேட் சீக்கிரம் செரிமானம் ஆகி ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். உணவு முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் உங்களது உடல் நிலை, உயரம், எடை போன்றவைகளை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இதற்குரிய ஆலோசனையை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்குரிய ஸ்நாக்ஸ் வகைகள்

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் (நொறுக்குத் தீனி) வகைகளில் 15 கலோரிகள் மற்றும் அதற்கு குறைவாக உள்ள உணவாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பசி ஏற்படும் வேளையில் மட்டும் கீழ்க்கண்ட ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடலாம். குறைந்த கொழுப்பு உடைய ஸ்நாக்ஸ்களை மக்கள் சுமார் 30 சதவீதம் பேர் சாப்பிடுகின்றனர். இவைகள் கலோரிகளை குறைக்கும் என்று எண்ணுகின்றனர். இருப்பினும் குறைந்த கொழுப்புடைய ஸ்நாக்ஸ் வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது. பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு, வேர் கடலை மற்றும் முந்திரி போன்ற குறைந்த கொழுப்புடைய ஆரோக்கியமான மோனோ சாச்சுரேடட் வகை கொழுப்புகள் இதய நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். அவைகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு அதிகளவு காணப்படுவதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

சாலட்டும் சூப் வகைகளும்

திராட்சை, தக்காளி, கேரட், சிகப்பு மற்றும் பச்சை குடை மிளகாய், வெள்ளரி, பிராக்கோலி மற்றும் காலி ப்ளவர் போன்ற காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது தயிர் சேர்த்துச் சாப்பிடலாம். சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம். காய்கறிகளின் சூப்பை அருந்தலாம். ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளான கீரை, வெங்காயம், பச்சை பீன்ஸ், செலரி, மற்றும் ஒரு சில காய்கறி கலவையை சேர்த்து சூப் தயாரித்துக் கொள்ளலாம். சிறிய கோப்பை அளவு அருந்தலாம்.

பழ வகைகள் சிறந்தது

ஆப்பிள் மற்றும் அதன் தோலில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆப்பிள் தோலில் சுகாதாரமான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும் இதய நோய் வராமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டது. உறைய வைக்கப்பட்ட திராட்சை, மற்றும் தோல் உரித்த வாழைப்பழம் இவற்றை நன்றாக ஒரு சான்ட்விச் பையில் வைத்து அடைத்து பிரிட்ஜில் வைத்து நன்றாக உறைந்த பின் சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். 20 சிவப்பு உலர்ந்த திராட்சைகளை சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லை. ஏனெனில் இவை மொத்தத்தில் 100 கலோரிகள் அளவு தான் இருக்கும். ஒரு கப் பெர்ரி பழத்தில் 70 கலோரிகள் தான் உள்ளன. பழங்களில் பெர்ரியை தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது சிறந்தது.

தானிய உணவுகள்

முழுதானிய மாவினால் செய்த ரொட்டி வகைகள், வேகவைத்த உருளைக் கிழங்கு மற்றும் தானிய ரொட்டி வகைகள், மக்காச் சோளம், கேழ்வரகு மாவினால் செய்த ரொட்டி வகைகள், சிகப்பு அரிசியினால் சமைக்கப்பட்ட உணவு போன்றவைகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. நாம் அருந்தும் பால் ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும். வீட்டிலேயே தயாரித்த தயிர், பனீர், சோயா பாலில் இருந்து எடுக்கப்பட்ட பனீர், தயிர் இவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்த கொழுப்புடைய பாலாடைக் கட்டியில் 80 கலோரிகள் தான் காணப்படுகிறது. மேலும் இது சர்க்கரையை கட்டுப்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று.


Spread the love