ஆயுளைக் கூட்டும் அற்புத உணவுகள்

Spread the love

ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் கழிக்கும் தன் வாழ் நாட்களை ஆரோக்கியமான நாட்களாக கழிக்கவே விரும்புகிறான்.

அவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியம்.

குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற உணவுகள் மனிதனுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

பாதாம் பால்

பாதாம் பால் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக்களை அளிக்கக் கூடிய சிறந்த உணவாகும்.

பாதாமை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் மேம்படுவது மட்டுமல்லாமல் தசைகளை வலுவடையச் செய்கிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பாதாம் உதவுகிறது.

பேரீச்சம்பழம்

பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பழத்தை அதில் கலந்து தினமும் இளம் பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும். இது சிறந்த மருத்துவ பலன்களை கொண்டது.

இரும்புச் சத்து மற்றும் நார்ச் சத்து அடங்கியுள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரி செய்ய உதவுகின்றது. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கொண்ட பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து பாலுடன் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.

அக்ரூட் பருப்பு

உடல் பருமனாக காணப்படுபவர்கள் உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பினால் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது நல்லது.

இதை சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து கொள்ளலாம். மேலும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அக்ரூட் பருப்புகள் மிக நல்லது. அக்ரூட் பருப்புகள் ரத்த ஓட்டத்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

உலர்திராட்சை

இரும்புச் சத்து கொண்ட உலர் திராட்சை பழத்தை இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம். உங்கள் குழந்தைகள் எடை கு¬வாக இருந்தால் ஒவ்வொரு நாளும் 5 உலர் திராட்சைகளையாவது சாப்பிட கொடுங்கள்.

பின்னர் உங்கள் குழந்தையின் எடை அதிகரிப்பதை பார்க்கலாம். செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் உலர் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.

முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு இயற்கையின் அதிசயம், இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார்ச்சத்து, புரதம், ஆகிய சத்துக்களைக் கொண்டது.

முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது முந்திரி பருப்பு.

ஆரோக்கியத்திற்கு உதவும் பிஸ்தா

பிஸ்தா இது பருப்பு வகையைச் சேர்ந்ததாகும். இந்த பிஸ்தாவில் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன.

உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால்தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது.

ஆரோக்கியமான இதயம்

பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது.

இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.

நீரிழிவு நோயை தடுக்கின்றது

பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச் சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து உடலுக்கு வலிமை சேர்க்கின்றது. இரத்தத்திற்கு ஏற்றது

இரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல புரதச் சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது.

இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்துக் கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் தன்மை அதிகரிக்கின்றது.

ஆரோக்கியமான மூளை

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.

ஆரோக்கியமான சருமம்

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

எப்படியெனில் இதனை சாப்பிட்டால், இது சருமத்தின் மென் சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது.

இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகின்றது.

புற்றுநோய்

இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புற்றுநோய் மற்றும் நோய்த் தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.

ஆரோக்கியமான பார்வை

பிஸ்தாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஆரோக்கியமான பார்வையைப் பெற முடியும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love